என் மலர்
புதுக்கோட்டை
புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
புரட்டாசி மாதத்தில், பக்தர்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து வழிபாடு நடத்துவது வழக் கம். இதனால் இறைச்சிகள் விற்பனை கடந்த ஒரு மாதமாக மந்தமாக இருந்தது. இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டிறைச்சி, கோழிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக விற்பனையானது. புதுக்கோட்டை மீன் மார்க்கெட் மற்றும் ஆங்காங்கே உள்ள மீன்கடைகளிலும் மீன்கள் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாக அவற்றின் விலை சற்று உயர்ந்திருந்தது.
புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு மீன் கடையில் வஞ்சரம் கிலோ ரூ.500-க்கும், நகரை ரூ.250-க்கும், முறல் மீன் ரூ.350-க்கும் இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ.400-க்கும் விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலைகள் வேறுபட்டன. மீன்களை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. இதேபோல ஓட்டல்களிலும் அசைவ உணவு விற்பனை நேற்று அதிகரித்தது.

தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
அன்னவாசல்:
தொடர் பணியால் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணி, இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா மாஸ்டர் சதீஷ்குமார் பயிற்சி அளித்தார். இதில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், காரையூர் ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தண்ணீர் பற்றாக்குறையால், கறம்பக்குடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இந்த ஆண்டு கறம்பக்குடி பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.
இதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த ஆண்டு மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அம்புக்கோவில், ரெகுநாதபுரம், சூரக்காடு, வெட்டன் விடுதி, தட்டாஊரணி, குளந்திரான்பட்டு மற்றும் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள மங்களாகோவில், வெள்ளாள விடுதி, மட்டங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், நிலத்தடி நீரை நம்பியே எங்கள் பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறோம். மழை போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் 500 அடிக்கு கீழே சென்று விட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இவற்றிற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுவதில்லை. பராமரிப்பு செலவும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு செடிகளும் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. விளைச்சல் அதிகரிக்கும் நிலையில் நல்ல விலையும் கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், நாமக்கல் பகுதிகளை சேர்ந்த ஜவ்வரிசி ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு சில வியாபாரிகள் குழு அமைத்து கொண்டு குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து லாபம் பார்த்தனர்.
இதனால், விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டது. இதை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி வருகை தருகிறார். கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்-அமைச்சர் வருவதாக தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவரது வருகை தள்ளிப்போனது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு அவரது தாயார் இறந்ததால் தூத்துக்குடி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 22-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தருகிறார். அன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், அரசின் புதிய திட்டங்களையும், முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
விவசாயிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மக்களின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தொடர்பான பணிகளையும் முதல்-அமைச்சர் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் ஒவ்வொரு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மாவட்டத்தின் பெரிய குளமான அந்த பகுதி காவிரி-வைகை-குண்டாறு இணைப்பின் மூலம் பயன்பெறும் என்பதால் அதனை முதல்-அமைச்சர் பார்வையிட உள்ளார்.
புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் மீன்கள், இறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
புரட்டாசி மாதத்தில், பக்தர்கள் விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து வழிபாடு நடத்துவது வழக் கம். இதனால் இறைச்சிகள் விற்பனை கடந்த ஒரு மாதமாக மந்தமாக இருந்தது. இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி புதுக்கோட்டையில் ஆட்டிறைச்சி, கோழிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக விற்பனையானது. புதுக்கோட்டை மீன் மார்க்கெட் மற்றும் ஆங்காங்கே உள்ள மீன்கடைகளிலும் மீன்கள் விற்பனை அதிகரித்தது. இதன் காரணமாக அவற்றின் விலை சற்று உயர்ந்திருந்தது.
புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு மீன் கடையில் வஞ்சரம் கிலோ ரூ.500-க்கும், நகரை ரூ.250-க்கும், முறல் மீன் ரூ.350-க்கும் இறால் ரூ.300-க்கும், நண்டு ரூ.400-க்கும் விற்பனையானது. சில்லரை கடைகளில் இவற்றின் விலைகள் வேறுபட்டன. மீன்களை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. இதேபோல ஓட்டல்களிலும் அசைவ உணவு விற்பனை நேற்று அதிகரித்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்‘ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.
புதுக்கோட்டை:
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் தேர்வெழுத முடியாதவர்களுக்கு கடந்த 14-ந் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் ‘நீட்‘ தேர்வை எழுதினர்.
இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 410 பேர், ‘நீட்‘ தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 351 பேர் மட்டும் தேர்வெழுதினர். இந்தநிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் சேகரிக்க முடியவில்லை என்றனர்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இத்தேர்வில் 720-க்கு 300 மதிப்பெண்களை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மகதீர்கான் பெற்றார். 201-300 மதிப்பெண்களுக்குள் 7 பேரும், 150 முதல் 200 மதிப்பெண்களுக்குள் 13 பேரும், 113 முதல் 149 மதிப்பெண்களுக்குள் 45 பேரும் பெற்றுள்ளனர். 112 மதிப்பெண்களுக்கு குறைவாக 286 பேர் எடுத்துள்ளனர்.
300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மகதீர்கான் கூறுகையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட ‘நீட்‘ தேர்வு பயிற்சி மற்றும் இலவச பயிற்சி மையத்திலும் படித்து தேர்வெழுதி இருந்தேன். நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் நீட் தேர்வில் கிடைத்துள்ளது. மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
காரையூர் அருகே வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரையூர்:
வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொன்னமராவதி வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சிவராமன், அருணகிரி ஆகியோர் புதிய வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை மத்திய அரசு திருமப்பெற கோரியும் விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்னவாசல் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள வாதிரிப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ்(வயது 50). கூலித் தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் சென்று சந்தையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வாதிரிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். காலாடிப்பட்டி அருகே அவர் வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த காமராஜ், சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார், பஸ் டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம்(39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை அருகே தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே உள்ள சேவியர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 34). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். ஜெயலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வரும் என்று கூறப்படுகிறது.
இதற்காக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இருந்தாலும் நோய் குணமாகவில்லையாம். சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்படவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசில் மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் வடகாடு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, வடகாடு தெற்கு முக்கம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கீழாத்தூர் சாந்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (75) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி போலீஸ் நிலையத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
மணமேல்குடி:
மணமேல்குடி போலீஸ் நிலையத்தில், சுகாதார பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஆனால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் யாரும் முன் வராததால் போலீசாரின் உதவியை நாடினர். அப்போது போலீசார் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். சில வாகன ஓட்டிகள், கொரோனா பரிசோதனைக்கு பயந்து தங்களது வாகனத்தை வேறு பாதையில் திருப்பி சென்று விட்டனர்.
குடும்ப பிரச்சினையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அறந்தாங்கி:
பேராவூரணி அருகே செந்தலைபட்டினத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 60). இவரது மகள் அனீஸ்பாத்திமாவை நாகுடியை சேர்ந்த சர்புதீன் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஷாஜகான், தனது மகளை அழைத்து கொண்டு செந்தலைபட்டினத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று அனீஸ்பாத்திமாவின் பொருட்களை எடுத்து செல்ல ஷாஜகான் நாகுடிக்கு வந்துள்ளார். அப்போது சர்புதீன், தகராறு செய்து கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஷாஜகான் முதுகில் குத்தினார்.
இதையடுத்து படுகாயமடைந்த ஷாஜகான் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.