என் மலர்
புதுக்கோட்டை
கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி நாடியம்மாள் (வயது 60). இவர் திருவள்ளுவர் மன்றம் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பனங்குளத்தில் இருந்து கீரமங்கலத்திற்கு, பனங்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற நாடியம்மாள் மீது மோதியது. இதில் நாடியம்மாள், சிவசுந்தரம் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெரியாளூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாடியம்மாள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாடியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டாத்தி மருதன் கோன் விடுதி, நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அப்பகுதியை சேர்ந்த அபூபக்கர், முகமது யூசுப் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னமராவதி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கீழேவேகுப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சரவணக்குமார் (வயது 22). இவரது பெற்றோர் இவரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சரவணக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணக்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கறம்பக்குடியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலை, மாலை இரு வேளைகளிலும் பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்திலும் தூய்மை பணியாளர்களின் பணி தடையின்றி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அருகில் உள்ள பஸ் நிலையம் அருகே திரண்டு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும், காலை உணவு சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை எனவும், தரக்குறைவாக நடத்தப்படுவதாகவும் கூறி பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடை வீதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கின. இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் பழனிசாமி கூறியதாவது,
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். ரூ. 700 கோடி மதிப்பிலான காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ரூ.100 கோடி மதிப்பில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது என்றும், 55 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், விராலிமலையில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டை மக்களின் எதிர்ப்பார்ப்பான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கடந்தாண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பிரதிபலிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலை அமைக்கப்பட்டிருந்தது.

அறந்தாங்கி அருகே மயானம் செல்ல சாலை வசதி இல்லாததால் மாணவரின் பிணத்தை வயல் வழியாக தூக்கிச் சென்ற அவலநிலை ஏற்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்குடி அம்மன்சாக்கி ஊராட்சி கீழ்குடி பகுதியில் 150-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மயான கொட்டகை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்வதற்கு சாலை வசதியும் கிடையாது. இதனால், இறந்து போனவர் உடலை எடுத்துச் செல்வதில் உறவினர்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்ய நேற்று மாணவரின் உடல் எடுத்து செல்லப்பட்டது. ஆனால், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அங்குள்ள வயல் பகுதியில் இறங்கி மிகுந்த சிரமத்துடன் உறவினர்கள் பிணத்தை தூக்கிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உயிரிழப்பவர்களை தூக்கி சென்று தகனம் செய்ய போதிய சாலை வசதி இல்லை. இதனால், இறந்தவரை இவ்வாறு தூக்கிச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சாலை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இனிமேலும், சாலை வசதி செய்து கொடுக்கவில்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

ஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
ஆவுடையார்கோவில்:
அறந்தாங்கியைச் சேர்ந்த விஸ்வநாதன் மனைவி சீலா. இவர், கடந்த 18-ந் தேதி ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்றபோது சீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை கார்க்கமலம் புதுவயலைச் சேர்ந்த சேசு மகன் டிஸ்க் அரவிந்த் (வயது 26) என்பவர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில், ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிஸ்க் அரவிந்தை கைது செய்தனர்.
பொன்னமராவதியில் வங்கி ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் வங்கி மூடப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரத்து 760 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொன்னமராவதியில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொன்னமராவதி பேரூராட்சி பணியாளர்கள் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நடமாடும் மருத்துவக்குழுவினர்கள், மருத்துவ அலுவலர் ரவிக்குமார் தலைமையில் அங்கு உள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அங்கு பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கி மூடப்பட்டது.
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் உடல் கருகி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னவாசல்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சுந்தரராஜ் (வயது 32). இவர், புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு, மீண்டும் திருப்பூர் செல்வதற்காக நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அன்னவாசல் அருகே உள்ள நல்லம்மாள்சத்திரம் என்னும் இடத்தில் இரு வாகனங்களும் எதிரெதிரே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.
இதில், லாரிக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர், லாரியின் முன் பகுதியிலும் தீப்பிடித்தது. உடனே, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுந்தரராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் வெட்டன்விடுதியை சேர்ந்த ராமஜெயம்(42) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே விஷம் தின்ற பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கீழவேம்பன் குடியை சேர்ந்த சரவணனின் மனைவி மல்லிகா (வயது 34). இவர் சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்றார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டின் அருகே நேற்று மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த அவர் முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.