என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  குடும்ப பிரச்சினையில் மாமனார் முதுகில் கத்தியால் குத்திய மருமகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்ப பிரச்சினையில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
  அறந்தாங்கி:

  பேராவூரணி அருகே செந்தலைபட்டினத்தை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 60). இவரது மகள் அனீஸ்பாத்திமாவை நாகுடியை சேர்ந்த சர்புதீன் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். 

  இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஷாஜகான், தனது மகளை அழைத்து கொண்டு செந்தலைபட்டினத்திற்கு வந்து விட்டார். இந்நிலையில் நேற்று அனீஸ்பாத்திமாவின் பொருட்களை எடுத்து செல்ல ஷாஜகான் நாகுடிக்கு வந்துள்ளார். அப்போது சர்புதீன், தகராறு செய்து கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஷாஜகான் முதுகில் குத்தினார். 

  இதையடுத்து படுகாயமடைந்த ஷாஜகான் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×