என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி கிராமத்தில்அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார்
- 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் 59 விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா விற்கான ஆணைகளை சட்டம ், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்ரகுபதி வழங்கி னார்.
பின்னர் அவர் பேசு ம்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடி க்கையும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை.
- 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
காவிரி நீரை நம்பி புதுக்கோட்டை மாவட்டங்களில் சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் கருகும் பயிர்களை காப்பாற்ற முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கடந்த ஜூன் 12ல், டெல்டா குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அப்போது அணை நீர்மட்டம், 103.35 அடியாக இரு ந்தது. அணையிலிருந்து, 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.
அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களில் உள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லவில்லை. டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி, 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவையும் மதிக்காத கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து ள்ளனர்.
இந்தாண்டு பருவத்தோடு மழை பெய்யத் தொடங்கியதாலும் காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.
தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்கு பதிலாக, பதர்கள் கருகி வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளது
இதனால் மன வேதனையடைந்த விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறத்துவிட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் கல்லணை கால்வாய்கடைமடை பகுதி பாசன தாரர்கள் சங்க தலைவர் கொக்கு மடை ரமேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாகுடி கடைவீதியில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர்.
- பொன்னமராவதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
- தம்பதி உள்பட 3 பேர் கைது
பொன்னமராவதி
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 39). இவர் சம்பவத்தன்று தனது மனைவி ஏ.டி.எம். கார்டினை கொண்டு வந்து பொன்ன மராவதி பொன்-புதுப்பட்டி யில் உள்ள தேசிய மயமாக்க ப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் லெட்சுமணனுக்கு உதவுவது போல் நடித்து ஏ.டி.எம்.கார்டை மாற்றி அவரிடம் போலி கார்டை கொடுத்து ள்ளார்.
அந்த கார்டை பயன்படுத்தி யபோது பணம் வரவில்லை. இது குறித்து தனது மனை விக்கு செல்போனில் லெட்சு மணன் தகவல் கூறியுள்ளார்.
அப்போது அவரது மனைவி செல்ேபானுக்கு ரூ.20 ஆயிரமும், அதனை தொடர்ந்து பொன்னம ராவதியில் உள்ள பிரபல கடை ஒன்றில் ரூ.20 ஆயிரத்தி ற்கு செல்போன் வாங்கி உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து லெட்சு மணன் பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பொன்னம ராவதி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ள னர். அவர்களிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், குளித்தலை கீழனங்கவரம் சரவணக்குமார் (29), காஞ்சீபுரம் நன்மங்கலம் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி லட்சுமி என்பதும், இவர்கள் ஏடிஎம்-கார்டை மாற்றி நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்த 40 போலி ஏடிஎம் கார்டுகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவ ற்றை பறிமுதல் செய்தனர்.
- ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் மண்டிகிடக்கும் செடி கொடிகளை அகற்ற கோரிக்கை
- நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவ ட்டம் ஆலங்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் டி.எஸ்.ஓ. அலுவலகம், கருவூலம், இ சேவை மையம், தற்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்கா தவர்கள் மனு கொடுக்கும் மையம் என பல்வேறு அலு வலகங்கள் செயல்பட்டு வருகின்றது.
இதனால் இங்கு நாள்தோ றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கி ன்றனர்.
இந்நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் நீண்ட காலமாக செடி கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடைக்கின்றது.
இதனால் விஷ பூச்சிகள், கொசுக்கள் அதிகமாக உற்ப த்தி ஆகின்றன. மேலும் டெங்கு கொசு உற்பத்தி யாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அலுவலகம் மட்டு மின்றி அதனை சுற்றியும் அதிக அளவில் வீடுகள் உள்ளன.
இதனால் வீடுகளில் வசி ப்போருக்கும் தாலுகா அலு வலக பகுதிக்கு வரும் பொது மக்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் தாலுகா அலுவல கத்தை சுற்றியுள்ள புதிர்க ளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
இதேபோல் ஆலங்குடி யில் அரசு மற்றும் தனியாரு க்கு சொந்தமான பல்வேறு காலிமனைகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் புதர் மண்டி கிடைக்கின்றன.
தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உருவாகும் அபாயம் உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலத்தில் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை:சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யும் வரை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்
- மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவிப்பு
புதுக்கோட்டை ,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட மைய உயர்மட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் அரசுக்கு நற்பெயர் பெற்று தரும் விதமாக மகளிர் உரிமை திட்டம் , இணைய சான்றுகள் , பட்டா மாறுதல் போன்ற பணிகளில் சிறப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே முருங்கப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது மேடை சரிந்து விழுந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறைப் பணி என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டம் நெரிசல் ஆகாமல் விழாவை நடத்த வேண்டிய பொறுப்பு ஒருங்கிணைத்த வருவாய் துறை சாரும்.
சரியான திட்டமிடல் இல்லாமல், சரியான வழிகாட்டு என்று நெறிமுறைகள் இல்லாமல் விழாவினை ஒருங்கிணைத்த அதிகாரிகள் உள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
மேலும் இது போன்ற முகாம்களுக்கு செலவினங்களை செய்யும் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது
பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் வரையில் போராட்டத்தை விரிவு படுத்த உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற செயலால் அரசுக்கும் கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் பிணக்கு ஏற்படும் போது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டை கோவிலில் திருட்டுகைதான கொள்ளையன் சிறையில் அடைப்பு
- கைதான கொள்ளையன் சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நமண சமுத்திரம் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வீட்டில் கடந்த மாதம் 17-ந் தேதி மர்ம நபர்கள் நகை திருடி சென்றனர்.
அதேபோன்று கடந்த ஜூன் 29-ந் தேதி புதுக்கோட்டை கீழா நெல்லிக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நகைகள் காணாமல் போனது. இந்த இரு வழக்குகளிலும் துப்பு துலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மேற்பார்வையில் பொன்னமராவதி சப்-டிவிஷனில் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதில் மேற்கண்ட இரு சம்பவங்களிலும் புதுக்கோட்டை திருமயம் தாலுகா நச்சான்றுபட்டி மலையலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்திகை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடமிருந்து 41 பவுன் நகைகளை கைப்பற்றினர். பின்னர் கொள்ளையன் கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். குற்றவாளியை பிடிக்க உதவிய தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெகுவாக பாராட்டினார்.
- கறம்பக்குடி பகுதியில் வீடு இல்லாத ஏழைகள்டுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
- 96 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் திருச்சி கோட்டம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட கறம்பக்குடி பேரூராட்சியில் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுப்பட்டு வருகின்றன.
இந்த குடியிருப்புகளுக்கு நீர்நிலை மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்புதாரர்களை மறு குடியமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், நல வாரிய உறுப்பினர்கள், தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது.
மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு தொகை போக மீதமுள்ள ரூ.2.44 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக வழங்க வேண்டும். தகுதியானவர்கள் தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடு இல்லை எனவும் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் தான் என்பதற்கான சான்று அளிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திட்டப்பகுதி, பட்டமாவிடுதி ரோடு செவ்வாய்ப்பட்டி, பிலாவிடுதி ஊராட்சி, கறம்பக்குடி பன்னீர் தேவர் மஹால் அருகில் சிறப்பு முகாம் நாளை (சனிகிழமை) மற்றும் நாளை மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி தொடர்பு மையத்துக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது
- 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-2 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தகவல் மற்றும் கல்வி தொடர்பு மையம் அமைத்திட பணியிடங்களுக்கு வெளி முகமையின் நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடங்கள் 2, திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடம் ஒன்று, கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடம் ஒன்று, தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் 2 நிரப்பட உள்ளன.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., , எம்.அண்டு இ. துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.
திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., எம்.அண்டு இ.துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம்: ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. அல்லது இதற்கு நிகரான
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் மாஸ் கம்யூனிகேசன், மாஸ் மீடியாவில் முது நிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறை சமூக ஊடகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவம். கணினித்திறன் பெற்றிருத்தல் வீடியோ தயாரித்தல், மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்ற அனுபவம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக் காட்சி திறன், தமிழ் கிராமிய கலாச்சாரம் பற்றிய புரிதல் ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார்.
- புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- காய்ச்சல் பாதிக்கப்பட்ட 137 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அரசு சார்பில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக பதிவாகி வருகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக ஏற்கனவே உள்ள வார்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர், பூவரசக்குடியை சேர்ந்த 26 வயது பெண், கருவிடைசேரியை சேர்ந்த 24 வயது பெண் ஆகிய 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 137 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைக் குணப்படுத்த மருத்துவமனையில் போதுமான வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் காய்ச்சலுக்காக வருவோரை உடனடியாகப் பரிசோதனை செய்யவும், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.
- விராலிமலை அரசு மருத்துவமனையில் வாராந்திர சுகாதார திருவிழா நடைபெற்றது
- 20 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் குடும்பநல அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்த பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்பட்டது
விராலிமலை,
சுகாதாரத்துறை சார்பில் ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி விராலிமலை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வாராந்திர சுகாதார திருவிழாவிற்கு தலைமை மருத்துவர் கோமதி தலைமை தாங்கினார்.இதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், ரத்தசோகை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 20 பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் குடும்பநல அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்த பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சை செய்யப்பட்து.மேலும் சுகாதார திருவிழாவில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் வாய்புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யபட்டு மருந்துகள் வழங்கபட்டன. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திராளான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா்.அவர்களுக்கு மருத்துவா்கள் தீபக்ராஜ், பானுப்பிரியா, ஜோஷி ஹெலன் ஆகியோா் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனா்.
- ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முஸ்லிம் தெருவில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் மூடப்பட்டது
- மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் இந்த அங்கன் வாடி மையத்தினால் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென இந்த அங்கன் வாடி மையம் மூடப்பட்டது. இது அப்பகுதி தாய்மார்க்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மூடப்பட்ட அங்கன்வாடியை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறந்தாங்கி அருகே கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல் நடத்தினர்
- வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கண்மாய் ஒன்று உள்ளது.சுமார் 120 ஏக்கர் பரப்பரவு கொண்ட கண் மாய் மூலம் 500 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகி ன்றன.இந்நிலையில் மழைக்கால ங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள அருகன்கு ளம், நெடுங்குளம், வண்ணா ன்குளம் ஆகிய குளங்களிலி ருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீர் வைரிவயல் கண் மாய்க்கு வந்தடையும்.ஆனால் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமி ப்பு செய்து வீடுகள் கட்டப்ப ட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்க டை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.இதனால் குடிதண்ணீர் போன்று பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரை படர்ந்து கழிவுநீர் கண்மாயக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கி ன்றனர்.அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பை கள் மற்றும் கோழிக்கழிவு கள் ஆகியன இக்க ண்மாயில் கொட்டப்படுகிறது.இதனால் கண்மாய் தண் ணீரில் பல்வேறு வித மான தொற்றுக்கிருமிகள் உற்ப த்தியாகி, தண்ணீரை பயன்ப டுத்த முடியாத அவல நிலை உள்ளது.விவசாயத்திற்கு பயன்ப டுத்த வேண்டிய தண்ணீர் கழிவுநீராக மாறியதால் கட ந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக கிடப்பில் போட்டுள்ளனர்.இது தொடர்பாக துறை அதிகாரிகள் மற்றும் மாவ ட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகி றது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மற்றும் அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர்.அதிகாரிகளின் பேச்சுவா ர்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.






