search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யும் வரை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்
    X

    சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யும் வரை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்

    • சேலத்தில் வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை:சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யும் வரை கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்
    • மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவிப்பு

    புதுக்கோட்டை ,

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட மைய உயர்மட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் அரசுக்கு நற்பெயர் பெற்று தரும் விதமாக மகளிர் உரிமை திட்டம் , இணைய சான்றுகள் , பட்டா மாறுதல் போன்ற பணிகளில் சிறப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் சித்தர் கோவில் அருகே முருங்கப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது மேடை சரிந்து விழுந்ததாக கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    பொதுவாக கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது காவல் துறைப் பணி என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டம் நெரிசல் ஆகாமல் விழாவை நடத்த வேண்டிய பொறுப்பு ஒருங்கிணைத்த வருவாய் துறை சாரும்.

    சரியான திட்டமிடல் இல்லாமல், சரியான வழிகாட்டு என்று நெறிமுறைகள் இல்லாமல் விழாவினை ஒருங்கிணைத்த அதிகாரிகள் உள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

    மேலும் இது போன்ற முகாம்களுக்கு செலவினங்களை செய்யும் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது

    பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்படும் வரையில் போராட்டத்தை விரிவு படுத்த உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற செயலால் அரசுக்கும் கடைநிலை அரசு ஊழியர்களுக்கும் பிணக்கு ஏற்படும் போது போல தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×