அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி கிராமத்தில்அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார் 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரகுபதி வீட்டுமனை பட்டா வழங்கினார்
Published on

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் 59 விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா விற்கான ஆணைகளை சட்டம ், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்ரகுபதி வழங்கி னார்.

பின்னர் அவர் பேசு ம்போது, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் விளிம்பு நிலையில் உள்ள 59 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகளுக்கு விலையில்லா வீடுகள் கட்டி தருவதற்கு உரிய நடவடி க்கையும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com