என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அறந்தாங்கியில் 4 நகைகடைகளின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது
    • அறந்தாங்கி போலீசார் விசாரணை

    அறந்தாங்கி, 

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடை வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட நகைகடைகளும் அதிகம் உள்ளது. இங்குள்ள நகை கடைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூட்டப்பட்டிருந்தன. இன்று காலை அந்த கடைகளை திறக்க ஊழியர்கள் வந்தனர்.அப்போது ஒரு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த நகைகள் வைத்திருந்த பெட்டிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.அதே வேளையில் அருகில் இருந்த சந்து பகுதியில் நகைக்கடை, அடகு கடை, நகை பட்டறைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இங்கும் நகைகள் கொள்ளை போனது. மர்ம நபர்கள் நள்ளிரவு ஆட்கள் நடமட்டம் இல்லாத நேரத்தில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த சம்பவங்களில் 2 1/2 கிலோ வெள்ளி, தங்க நகைகள், பொருட்கள் கொள்ளை போயின. அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஏராளமான நகை வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் திரண்டனர். பாதிக்கப்பட்ட நகை கடைக்காரர்கள் கூறும் போது இரவு நேரங்களில் இப்பகுதியிலும் போலீசார் ரோந்து பணி வர வேண்டும் என்றனர். 

    • கந்தர்வகோட்டை அருகே கூடுதல் பஸ் வசதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல் குளம் ஊராட்சியில் தெத்து வாசல் பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு பேருந்தை நம்பியே உள்ளனர். இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்றும், உரிய நேரத்தில் பேருந்துகள் வருவதில்லை என்றும், அவ்வாறு வரும் பேருந்துகள் தெத்து வாசல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இன்றும் இந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர், மருத்துவ பரிசோதனைக்கு செல்பவர்கள் என்று அக்கிராம மக்கள் காத்திருந்த னர். ஆனால் வெகு நேர மாகியும் பேருந்து வர வில்லை. இதனால் பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த தெத்து வாசல் பட்டி,மஞ்ச பேட்டை கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    உரிய நேரத்தில் பேருந்துகள் வராததை கண்டித்தும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வ கோட்டை போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை மேலாளர் வரவழைக்க ப்பட்டார். போலீசாரும், பணிமனை மேலாளரும் கிராம பொதுமக்களிடம், கூடுதல் பேருந்து வசதி, குறித்த நேரத்தில் பேருந்து, பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • விராலிமலை அருகே 5 வயது மகளுடன் வாலிபர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
    • மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சோக முடிவு

    விராலிமலை, 

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது34). இவரது மனைவி பிரியா(30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர்.இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து 3 ஆண்டுகளாக பால்ராஜ் தனது 2 குழந்தைகளுடன், கட்டக்குடியில் வசித்து வந்தார்.

    அவரது மனைவி பிரியா விராலிமலை அருகே உள்ள வில்லாருடையில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த மாதம் தனது மகன் மூலம் செல்போனில் மனைவி பிரியாவை தொடர்பு கொண்ட பால்ராஜ், குழந்தைகள் தாயை பார்க்க விரும்புவதாகவும், அதனால் விராலிமலை மலைக்கோயில் வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி விராலிமலை வந்த பிரியா கோவில் அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த பால்ராஜிடம் குழந்தைகள் எங்கே? என்று கேட்டபோது மலை மேல் இருப்பதாக கூறி வற்புறுத்தி மலைமேல் அழைத்துள்ளார்.

    இதை நம்ப மறுத்த அவர் கணவருடன் வாக்குவா தத்தில் ஈடுபடும் போது பால்ராஜ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தி எடுத்து மனைவியை குத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட பிரியா கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ் மீது வழக்கு பதிந்த போலீ சார், கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்த னர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    வீட்டுக்கு வந்த அவர், தனது ஐந்து வயது மகள் நிக்சனாவுடன் வெளியே செல்வதாக கூறிச் சென்று உள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவி னர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை கட்டக்குடி தர்ம குளம் வழியாக சென்ற வர்கள் குளத்தில் 2 பேரின் பிணங்கள் மிதப்பதை கண்டு இலுப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு, விசாரணை நடத்திய போது அது பால்ராஜ் மற்றும் அவரது மகள் நிக்சனா என்பது தெரிய வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் பால்ராஜ், மகள் நிக்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.உடல்களை புது க்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    புதுக்கோட்டை:

    திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு.

    மகளிர் உரிமை மாநாடு பெரியார், அண்ணா காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை. அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றப்படாலாம்.

    அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்கப்படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல்வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.

    நான் மீண்டும் திருச்சி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட விரும்புகிறேன். அதற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்புகிறேன்.

    நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோனதை தடுத்து இருப்பேன்.

    பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

    5 மாநில தேர்தல் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்திரசேகரன், சூர்யா பழனியப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர்.
    • துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    தமிழக அரசின் நீர் வளத்துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது.

    இதில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அறந்தாங்கி தாலுகா பெருநாவலூர் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் குவாரியை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வந்தார். தமிழகம் முழுவதும் இவர் எடுத்துள்ள குவாரி மற்றும் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையிட்டு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக பெருநாவலூர் குவாரியில் இன்று அமலாக்கத்துறையினர் 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதித்த 4 ஆயிரத்து 400 கனமீட்டர் அளவு வரை மணல் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கூடுதலாக எடுக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சென்னை ஐ.ஐ.டி. யில் இருந்து தொழில்நுட்ப குழுவினரையும் அமலாக்கதுறையினர் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் நவீன கருவிகள் மூலம் மணல் அள்ளப்பட்டதை கணக்கிட்டனர்.

    இதேபோல அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிலுப்பனூர் மணல் குவாரி, சேந்தமங்கலம் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரிகளிலும் இன்று அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். குவாரில் எந்த அளவுக்கு மணல் அள்லப்பட்டுள்ளது என்று டிரோன் மூலமாக ஆய்வில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • அறந்தாங்கியில்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்
    • இஸ்ரேலியத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    அறந்தாங்கி, அக்.15-

    இஸ்ரேலிய தாக்குதலால் பாலஸ்தீனிய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் குலாம் முகமது பாட்ஷா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இஸ்ரேலியத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான்,மஜக மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக்அலி,மாவட்ட பொருளாளர் சித்திக் ரஹ்மான், துணை தலைவர் ரபீக் ராஜா, உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கணினி வழங்கிய பள்ளி மேலாண்மை குழு
    • கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள்

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி அக்கச்சி ப்பட்டிக்கு பள்ளி மேலா ண்மை குழு மூலம் கணி ப்பொறி வழங்கினர்.

    பள்ளிமே லாண்மைக்குழு விற்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி கோரிக்கை வைத்தார். அப்போது பள்ளி மேலாண்மைகுழு மூலம் கணிப்பொறி வழங்கு வதாக உறுதியளி த்தனர்.

    அதன்படி தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறியை பள்ளி மேலாண்மை குழு மூலமாக கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, உறுப்பினர்கள் உள்ளிடோர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் வழங்கி னார். கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்இலவச சிறுநீரக மருத்துவ முகாம்
    • அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

    புதுக்கோட்டை, 

    டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் டீம் மருத்துவமனை மற்றும் ஆலிவ் யூராலஜி கிளினிக் இணைந்து நடத்திய இலவச சிறுநீரக மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.எச். சலீம் அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடல், இரைப்பை மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் வெங்கட்ராமன்,டீம் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர்கள் பிரியங்கா மற்றும் நிலோபர், சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்அகமது மர்ஜீக் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், எரிச்சலுடன் சிறுநீர் போகுதல், இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல், நீர் கடுப்பு, நீர் அடைப்பு, தாங்க இயலாத இடுப்பு, வயிறு மற்றும் முதுகுவலி, இரவில் அடிக்கடி நீறுநீர் போகுதல், தடைபட்டு சிறுநீர் வெளியேறுதல், அவசரமாகசிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மந்தமாக சிறுநீர் போகுதல், சிறுநீர் கழித்த பின்னும் நீர்ப்பை நிரம்பியது போன்ற உணர்வு, விரை வீக்கம், ஆண் மலட்டு தன்மை, படுக்கையில் சிறுநீர் கழித்தல், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள், சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையில் பிறவி கோளாறு உள்ளவர்கள், சிறுநீரக பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கான ஆலோசனை மற்றும் பெண்களுக்கு நீர்ப்பை இறக்கம் நீர் கசிவு போன்றவற்றுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினார். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் சிறுநீர் வராமல் சதை அடைப்பு போன்ற நோய்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் டீம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார்.

    இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் கனகா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் டீம் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மகாலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

    புதுக்கோட்டையில் சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது பெற அழைப்பு

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    செயற்கை இரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே அங்கக விவசாயம் ஆகும்.

    இவ்வாறு இயற்கை விவசாயம் செய்யும், அங்கக விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக, ரூ. 2.50 இலட்சத்துடன் ரூ. 10,000/- மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ. 1.50 இலட்சத்துடன் ரூ. 7,000/- மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக, ரூ. 1.00 இலட்சத்துடன் ரூ. 5,000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும்.

    நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றுகளுடன், உழவன் செயலி மூலமாகவோ அல்லதுஇணைய தளம் மூலமாகவோ, முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக ரூ. 100/- மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, 30.11.2023 விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் வட்டார வேளாண்மைத் துறை அலுவலர்களைத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்

    பொன்னமராவதி கேசராபட்டியில்ராமருக்கு பட்டாபிஷேக வைபவம்

    பொன்னமராவதி,  

    பொன்னமராவதியை அடுத்த கேசராபட்டியில் ராமாயணம் படித்து சாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும்,சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டியும் கிராமத்தின் பல்வேறு நன்மைக்காக திருவிளக்குப்பூஜை நடந்தது. கேசராபட்டி பிடாரியம்மன் கோயிலில் கடந்த 7ம் தேதிமுதல் ஏடுபடித்தல் என்று சொல்லக்கூடிய ராமாயணம் படிக்கப்பட்டு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு வைத்தும், திருவிளக்குப்பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். மேலும் இரவு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கேசராபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    தமிழக முதலமைச்சர் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவரங்குளத்தில் 2 ஊராட்சி அமைப்பு அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி மதிப்பிலான காசோலையும், மேலும் 40 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகையும் மொத்தம் ரூ.3.20 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் பெண்கள் முன்னேறும் வகையில் சிறப்பான திட்டங்களை வரையறுத்து அதனை நிறைவேற்றி வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருப்பதால் இத்திட்டங்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. நல்ல ஆட்சிக்கு அறிகுறியாக முதல்-அமைச்சர் மாதம் தோறும் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களுக்கு துணையாக இருந்து வருகிறார் என்றார்.

    நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை, உதவி திட்ட அலுவலர்கள் தில்லைமணி, சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகுல கிருஷ்ணன், ஆயிஷா ராணி, ஒன்றிய செயலாளர் வடிவேல், சுற்றுச்சூழல் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் வீரசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழிப்பிறையில் துணை மின் நிலையம் அமைக்க கோரி9 ஊராட்சி மன்ற தலைவர்கள் மின்வாரியத்தில் மனு

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூழிபிறை டிரஸ்ட் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் குழிபிறை மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை, ஆத்தூர், செவலூர், கொவனூர், வீரனாம்பட்டி, வாழைகுறிச்சி, ராங்கியம், மேலப்பனையூர் மற்றும் பனையப்பட்டி ஊர்களில் 30 வருடங்களாக தினந்தோறும் அதிகப்படியான மின்வெட்டு, அதிகமான மின்அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. போதிய அளவில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படாததுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் 15 லிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திற்கு துணை மின் நிலையம் இல்லை.

    சமீபத்தில் 12 முறைக்கு மேல் தினந்தோறும் எங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. லோ வோல்எடேஜ் காரணமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் மோட்டார்கள், பம்புகள், வீட்டு உபகரணங்கள் எல்லாம் அடிக்கடி பழுதடைக்கின்றன.

    துணைமின் நிலையத்திற்கான மனுவை ஏப்ரல் 2022ல் கொடுத்து, அதற்கான 2 ஏக்கர் நிலத்தையும் குழிபிறை ஊராட்சி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதுவரை ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்தவிதமான வேலைகளும் ஆரம்பிக்கப்பட வில்லை. புதிய மின்மாற்றிகளை அமைக்க 16.2.2022 ல் கொடுத்த மனுவிற்கு இன்று வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் துணைமின் நிலையம் அமைப்பதோடு, அப்பகுதியில் 6 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×