என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததால் பெண்கள் ஆத்திரம்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.இது தொடர்பாக.பயனாளிகளிடம் கேட்டபோது இ சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் ,பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள்.மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பாக திடீர் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் ராமசாமி, காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்தவர்களிடம் உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலை மார்க்கத்தில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கந்தர்வகோட்டையில் இ சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது
- சின்னத்துரை எம்எல்ஏ திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையத்தை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் முருகேசன் முருகேசன்,வட்டாட்சியர் வரத. ராமசாமி, திமுக மாவட்ட கழகச் செயலாளர் கே கே செல்லபாண்டியன்,வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா,கந்தர்வகோட்டை நகரச் செயலாளர் ராஜா |ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி,சிவரஞ்சனி சசிகுமார், தாமரை. பழனிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது,
ஆதனக்கோட்டை , புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்க ளில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை மின்னாத்தூர் கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மண விடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப் பட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல்,மட்டையன்பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வ கோட்டை, அக்கட்சிப்பட்டி, வள வம்பட்டி, கல்லாக்கோ ட்டை, சங்கம் விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி , நம்புரான் பட்டி, மோகனூர், பகட்டு வான் பட்டி, பல்லவரா யன்பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வெள்ளாள விடுதி, சந்தம்பட்டி, ஆகிய பகுதிக ளுக்கு நாளை 19-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஹரிராஜ் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிராஜ் (வயது 19). இவர் கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அறந்தாங்கி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் டெங்கு பாதிப்பு உள்ளதாக கூறினார்.
அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஹரிராஜ் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதை தொடர்ந்து ஹரிராஜின் உடல் அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பின்பு மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஹரிராஜின் உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அறந்தாங்கி வேலாயுதம்பிள்ளை நகர் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.
இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்ம நபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.
இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்குபுறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.
விடியவிடிய தேடி அைலந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தே றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இய க்குநர் பெரியசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தியைப் பெருக்கும் தொழில் நுட்பங்களாகிய விதை நேர்த்தி, விதைப்பு முறை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், நுண்ணீர் பாசனமுறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முதலான மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், பிற விவசாயிகளும் இவற்றைப் பின்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து, நுழைவு கட்டணமாக ரூ.150 மட்டும் அரசுக் கணக்கில் செலுத்தி, தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநரிடம் உத்தேச அறுவடை தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் விவசாயி அறுவடை தேதியைத் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குநரிடம் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
- மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்கள் பார்த்து மருத்துவர்கள் சாதனை
- டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தில் திருக்களம்பூரை சேர்ந்த ஷகிலாபானு, கருப்புக்குடிப்பட்டி சுகந்தி, வார்பட்டு பகுதியை சேர்ந்த அழகி, கருப்பர்கோயில்ப ட்டியை சேர்ந்த புவனே ஸ்வரி ஆகியோர் பிரசவத்தி ற்காக ஒரே நேரத்தில் அனு மதிக் கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு டாக்டர் பூபதி ராஜன் தலைமை யிலான மருத்துவக்குழு வினர் பிரசவங்கள் பார்த்தனர்.
அப்போது 3 பேருக்கு ஆண்குழந்தையும் ஒரு வருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
ஒரே நேரத்தில் 4 பிரசவ ங்களை பார்த்து சாதனை படைத்த மருத்துவக் குழுவி ற்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவி த்தனர்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் சாத னையை அறிந்த மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்கணேஷ் மருத்து வர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதேபோன்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒரே நேரத்தில் நான்கு பிரசவங்களை பார்த்த மருத்துவர்களை பாராட்டியும்.குழந்தைகளை ஈண்றெடுத்த தாய்மார்க ளுக்கு டாக்டர் அருள்மணி நாகராஜன் குழந்தைகள் நல பரிசு பெட்டகங்களை வழ ங்கி வாழ்த்துகளை தெரிவி த்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் பூபதிராஜன், பிறப்பு பதி வாளர் உத்தமன், மருந்தா ளுநர் அன்பரசி, செவிலி யர்கள் சீதா, அம்பிகா, சூர்யா, ஆய்வக சீமா, சுகா தார ஆய்வாளர் பிரேம்கு மார், மருத்துவமனை உதவியாளர் செல்வி உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.
விராலிமலை,
மத்திய அரசின் நிதி உதவியால் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலுப்பூர் பேரூராட்சியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது, இதில் நீண்ட நாட்களாக வீடு கட்டி முடித்தும் பேரூராட்சி வழங்க வேண்டிய தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அனுமதியே வாங்காமல் ஏற்கனவே கட்டிமுடித்த வீடுகளுக்கு முறைகேடாக பணம் ஏற்றியுள்ளதாகவும். உண்மை பயனாளிகளை அலைக்கழித்தும், வஞ்சித்தும், ஒருதலை பட்சமாக பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உண்மை பயனாளிகளுக்கு உடனடியாக பணத்தை விடுவிக்க கோரியும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் லட்சுமணன் தலைமையில் ஆலம்கான், பொன்மலர் முருகேசன், சரவணன், சியாமளா, ராமாயி சின்னையா உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் பேரூராட்சி அலுவலக வளாகப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி மற்றும் பொறியாளர் பணிக்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
- கந்தர்வகோட்டைநாவல் ஏரிக்கான வாய்க்கால்களை தூர் வார கோரிக்கை
- பல ஆண்டுகளாக தூர்வாராமல் மணல் மேடுகளாகவும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பொதுப்பணி துறைக்கு சொந்தமாக சுமார் 200ஏக்கர் பரப்பளவுள்ள நாவல் ஏரி உள்ளது.சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியன் வரத்து வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் மணல் மேடுகளாகவும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது.இதனால் மழை பெய்தாலும் ஏரிக்கு நீர் வராமல் வீணாகிறது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் கருதி நாவல் ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர் வாரியம் மதகுகளை செப்பனிட கோரியும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை.
- வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரவன்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40). விவசாயியான இவர் வழக்கம் போல தனது தாயுடன் இரவு உணவு உண்ட பின்பு, தூங்கி உள்ளார். வீட்டு வேலையை முடித்து கொண்டு தாய் அமராவதியும் படுத்து தூங்கி உள்ளார்.
இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருந்த, நள்ளிரவு நேரத்தில் பின்பக்க கதவை உடைக்காமல் லாவகமாக திறந்த மர்மநபர், வீட்டுக்குள் புகுந்து உள்ளான். பின்னர் பீரோவை சத்தமில்லாம் உடைத்து திறந்து அதில் இருந்த 19 நகையை திருடி உள்ளான். திருடிய நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது கண்ணதாசனின் தாய், கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின் திருடனின் கண்ணை உறுத்தி உள்ளது.
இதனால் மீண்டும் கை அரிப்பு எடுத்தவனாய் தூங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் தாய் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனை உணர்ந்த கண்ணதாசனின் தாய், விழித்தெழுந்து திருடனை பார்த்து சத்தமிட்டுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மர்மநபர் பின்வாசல் வழியாக தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்டு விழித்தெழுந்த கண்ணதாசனும், ஓடி வந்த அக்கம் பக்கத்தினரும், நான்கு புறமும் திருடனை தேடி அலைந்து உள்ளனர். மேலும் அக்கிராமத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கிராமத்தில் இருந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் தேடி அலைந்துள்ளனர்.
விடிய விடிய தேடி அலைந்தும் கொள்ளையன் சிக்கவில்லை. எனவே இது குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆளில்லாத வீட்டில் கொள்ளை சம்பவம் நடப்பது வழக்கமாக உள்ள இந்நிலையில் தற்போது ஆள் இருக்கும்போதே கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நவராத்திரி தொடங்கியதை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்களில் கொலு அமைக்கப்பட்டது
- தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதுநகர் கருமாரியம்மன் கோவிலில் முதல் வருடமாக கொலு கோவில் செயலா ளார் புதுநகர் குமார் ஏற்பா ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கல ந்துக் கொண்டு வழிபட்டு பிரசாதம் பெற்று சென்ற னர்.இதே போல் சாந்தநாதா சுவாமி கோவில், அரிய நாச்சி அம்மன் கோவில், ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அதிஷ்டானத்திலும் கொலு உற்சாகம் நடைபெற்றுவரு கிறது.இந்த கோவில்களில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்வு என்று திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்
- இளைஞர் தேர்வாக வாய்ப்பு என்று திருநாவுக்கரசர் தகவல்
புதுக்கோட்டை,
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநா வுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் புதுக்கோ ட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளி த்தார். அப்போது அவர் கூறியதாவது:-தலைவர் மாற்றப்படலாம்தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடு கிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு,மகளிர் உரிமை மாநாடு பெரியார் அண்ணா கால த்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய் வும் இந்த மாநாடு நடை பெறுகிறது.கட்சி தலைவர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மாற்றப்படுவது எல்லா அகில இந்திய கட்சியிலும் உள்ள நடைமுறை, அதே போல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவியும் மாற்றபடாலாம்,
மீண்டும் போட்டியிட விருப்பம்
அடுத்ததாக யாருக்கு வேண்டுமானாலும் அந்த பதவி வழங்க படலாம், அப்படி எனக்கு அந்த பதவியை கொடுத்தாலும் வேண்டாம் என்றா சொல் வேன், அதே வேளையில் இளைஞர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம்.நான் மீண்டும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் தான் போட்டி யிட விரும்புகிறேன். அத ற்கான முடிவை கட்சியின் தலைமை தான் எடுக்கும். அதற்கான வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என நம்ப கிறேன்.நான் இங்கு இருந்து இருந்தால் புதுக்கோட்டை எம்.பி. தொகுதியை பறிபோ னதை தடுத்து இருப்பேன்,பா.ஜ.க.விலிருந்து அ.தி.மு.க. பிரிந்துள்ளதால் சிறு பான்மையினர் வாக்குகள் சிறிது அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது.5 மாநில தேர்தல் நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன் னோட்ட தேர்தல் தான். காங்கிரஸ் அதிக மாநில ங்களில் இந்த தேர்தலில் வெற்றி அடையும் என்று அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், முன் னாள் எம்எல்ஏ சுப்பு ராம், துரை.திவியநாதன், திருச்சி ரெக்ஸ், வழக்கறிஞர் சந்தி ரசேகரன், சூர்யா பழனி யப்பன், துரைசிங்கம், மதன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.






