என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் மெய்ய நாதன் திறந்து வைத்தார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்து கணினி இயக்குனர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-கலைஞர் உரிமைத்தொகை கிடைக்க பெறாமல் இருப்பவர்கள் குறித்து அவர்களது விண்ணப்பத்தை பரிசோதனை செய்து எந்த நிலையில் உள்ளது என்று பிரிண்ட் எடுத்து அந்த மனுவில் இணைத்து வைக்க வேண்டும்.இவ்வாறாக நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி என்றும், பேரூராட்சியின் விண்ணப்பங்களையும் சேகரித்து விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும் அளவில் பணி செய்ய வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் ராசி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, நகர செயலாளர் பழனிகுமார், துணை செயலாளர் செங்கோல், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், சையது இப்ராகிம், கருணாநிதி, லெட்சுமணன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • கந்தர்வு கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை அடுத்த காடவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை. விவசாயி. இவரது சண்முக தேவி (வயது 45).இவர்கள் நேற்று காலை விவசாய பணிகளை கவனிப்பதற்காக வயலுக்குச் சென்று விட்டனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாதததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பட்டப்பகலிலேயே கைவரிசை காட்டியுள்ளனர்.இது தொடர்பாக சண்முகதேவி கொடுத்த புகாரியின் பேரில் கந்தர்வு கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

    • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது
    • சோழீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சீர்வரிசைகளை எடுத்துவந்தனர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் 6ம் நாள் நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு சித்திவிநாயகர் கோயிலிலிருந்து சோழீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் சீர்வரிசைகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து வைரவன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வழிநடத்த மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அதுபோல பொன்னமராவதி நாச்சியம்மன் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சிறப்பு வழிபாடும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.

    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.

    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில் குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூட்டுறவு கடன் சங்க பொது பேரவை கூட்டம்


    கறம்பக்குடி


    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் டி.1684 சொக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது பேரவை கூட்டம் கூட்டுறவு கடன் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.


    கூட்டத்திற்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் குரு ஷேவ் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் நிகழ்ச்சிக்கு சங்க இயக்குனர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் இறந்து போன உறுப்பினர்களை நீக்கியும் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களை அங்கீகரித்தும் இறுதி செய்யப்பட்ட அ வகுப்பு உறுப்பினர்கள் பட்டியல் குறித்தும் மேலும் 2022 மற்றும் 2023- ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் செலவு குறித்தும் தீர்மானம் நிறைவேறியது.


    கூட்டத்தில் சங்க இயக்குனர்கள் அ வகுப்பு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் நன்றி கூறினார்.




    • மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் திடீர் மறியல்
    • கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை


    விராலிமலை,


    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த் அன்னவாசல் அருகே குமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை கிடைத்த நிலையில் பணம் கிடைக்காதவர்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தனர்.


    ஆனாலும் அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை. இதனால் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும் பரிசீலனையில் உள்ளது என்றும் மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். இதையடுத்து மேல் முறையீடு செய்து இந்த மாதமும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை.


    எனவே தகுதியான பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி  காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் 


    பின்னர் சம்பவ இடத்திற்கு குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் வராததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுக்கோட்டை பரம்பூர் சாலையில்  குடுமியான்மலை கடைவீதியில் சாலை மறியல் செய்தனர்.


    தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர் அன்னவாசல் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


    அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 மணி நேரத்திற்கு மேலாக, போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


    • டெல்லி சுதந்திர தின பூங்காவிற்குபொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
    • ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.

    பொன்னமராவதி,  

    புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் இந்திய அஞ்சல்துறை சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியில் அமைய உள்ள 75ம் ஆண்டு சுதந்திர தினப்பூங்காவிற்கு பொன்னமராவதி வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

    புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்வில் பொ ன்னமராவதி வட்டாரத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது.

    ஊர்வ லத்தை பொன்ன மராவதி தாசில்தார் எம்.வசந்தா தொடங்கி வைத்தார். பொன்னமராவதி சேங்கை ஊரணியில் தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக வந்து அமரகண்டான் வடகரையில் நிறைவுபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மண் கலசங்கள் மற்றும் தேசியக்கொடியை ஏந்தி வந்தனர்.

    தொடர்ந்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்றனர். வருவாய் ஆய்வாளர் எஸ்.சுபாஷினி, கிராம நிர்வாக அலுவலர் எம்.சண்முகம், ரோட்டரி சங்க மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பி னர் ஆர்யு.ராமன், முத்தமி ழ்ப்பாசறை அறங்காவலர் நெ.ராமச்ச ந்திரன் ஆகியோர் பங்கேற்ற னர்.

    முன்னதாக பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டி.நாராயணசாமி வரவே ற்றார். தலைவர் மா.சக்திவேல் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள்‌, சரக்கு ரெயிலில்‌ வந்து சேர்ந்தது
    • ரயிலில் இருந்து லாரிகளில் ஏற்றும் பணியினை வேளாண்மை இணை இயக்குநர்‌ ஆய்வு செய்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏற்கனவே மானாவாரி பகுதியில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

    இந்த பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 4598 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1596 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1476 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5667 மெட்ரிக் டன்கள் ஆகியவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிலிடமிருந்து உரங்கள் பெறப்படுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா உரம் 785.7 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 252.25 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் உரம் 249.3 மெட்ரிக் டன்களும், துத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்திலிருந்து சரக்கு ரெயில் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தது.

    இந்த உரங்கள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்படுவதை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ஆய்வு செய்தார். ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் மதியழகன், வேளாண்மை அலுவலர் முகமது ரபி மற்றும் ஸ்பிக் உர நிறுவன பிரதிநிதி மயில்வாகனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும், மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் உர நகர்வு குறித்து சிறப்பு பறக்கும்படை மூலம் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உர விற்பனையாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுபாட்டு ஆணை 1985 இன்படியும் மேலும், உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 இன்படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும், உரங்களை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
    • புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    21.10.2023, 22.10.2023, சனி, ஞாயிறு வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும்,

    சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களி லிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு முக்கிய விடுமுறை நாட்களான 3 தினங்களுக்கு மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    20.10.2023, 21.10.2023 மற்றும் 22.10.2023 தொடர் விடுமுறைகாரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகி றார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • கந்தர்வகோட்டையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.,வின் 52 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது . யூனியன் சேர்மனும் கிழக்கு ஒன்றிய கழகச் செயலா ளருமான கார்த்திக் மழவராயர், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி .விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் துரை செந்தில், 'தலைமைக் கழகப் பேச்சாளர் நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றி னார்கள்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் கவிதாசிவா, சக்திவேல் , ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கம் விடுதி பெருமாள் ,விராலி ப்பட்டி முத்து க்குமார், அண்டனூர் இளங்கோ வன், மாவட்ட பாசறை அருண் பிரசாத் .நகரச் செயலாளர் அய்யா .செந்தில்குமார், துணைத் தலைவர் வெங்கடேசன், சீனிவாசன், செந்தில்குமார். சாமிநாதன், ரவி, எம் ஏ ஆர் மணி, ஆவின் தியாக ராஜன், அய்யர.மணிமாறன்,தங்க குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆடு தவறி விழுந்தது
    • ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் ராசு என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று இரை தேடி சென்ற போது தவறி விழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். 

    • டெல்லி சுதந்திர தின பூங்காவிற்கு பொன்னமராவதியில் இருந்து கலசத்தில் மண் அனுப்பப்பட்டது
    • அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது

    பொன்னமராவதி, அக். 19-

    புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் இந்திய அஞ்சல்துறை சார்பில் எனது மண் எனது தேசம் திட்டத்தின் கீழ் தலைநகர் டெல்லியில் அமைய உள்ள 75ம் ஆண்டு சுதந்திர தினப்பூங்காவிற்கு பொன்னமராவதி வட்டார அளவில் மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்வில் பொ ன்னமராவதி வட்டாரத்தில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் தில்லி பூங்காவிற்கு மண் சேகரிக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து ச்செல்லப்பட்டது. ஊர்வலத்தை பொன்ன மராவதி தாசில்தார் எம்.வசந்தா தொடங்கி வைத்தார்.

    ×