என் மலர்
புதுக்கோட்டை
- கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.
பொன்னமராவதி,
கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 51-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் அம்மன் இராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 2ம் நாள் மீனாட்சி அலங்காரத்திலும், 3ம் நாள் சிவலிங்க பூஜை அலங்காரத்திலும் என அம்மனுக்கு தினம்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி நாள்தோறும் பக்தி இன்னிசை கச்சேரி நடை பெற்றது. விஜயதசமி நாளை யொட்டி அம்பு போடுதல் நிகழ்வு நடை பெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று புதன்கிழமை ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரத்திற்குப்பின் அம்மன் மலர்களா லும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா வையொட்டி நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர்.
- விராலிமலையில் நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்
விராலிமலை,
விராலிமலை இசை வேளாளர் சமூக அறப்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் விஜய தசமியை முன்னிட்டு நாதஸ்வர தவில் இசை பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா கமலா பாலா திருமண மண்டபத்தில் நடந்தது.அறக்கட்டளை தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். பொருளாளர் மாணிக்கம், கருப்பையா, மாரியப்பன், ஜெயராமன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நாதஸ்வர வித்வான்கள் பின்னை மாநகர் உத்திராபதி, விருத்தாசலம் சங்கர், மன்னார்குடி வெங்கடேசன், தவில் வித்வான் கார்த்திக் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இசை பயிற்சி குறித்து ஆலோசனைகள் கூறினர்.தஞ்சை அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வ கணபதி நாதஸ்வரம் தவில் இசை கருவிகள் பற்றியும், பிரபல பித்வான்கள் பற்றியும் பேசினார்.தொடர்ந்து சரஸ்வதி தேவி பூஜை செய்து வகுப்புகள் துவங்கப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் இசை வேளாளர் சங்க நிர்வாகிகள், அறக்கட்டளை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக நாகராஜன் வரவேற்றார். முடிவில் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.
- நவராத்திரி நிறைவு விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
- விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்
விராலிமலை,
விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடந்தது.விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் சுப்ரமணி யசுவாமி வள்ளி தெய்வா னையுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வருடம் தோறும் தைபூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உட்பட பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றுமுதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலுக்கல் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் சுப்ரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
- கரம்பக்குடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
- ரொக்க பணம் 33 ஆயிரத்து 930 மற்றும் 3604 லாட்டரி சீட்டுகளும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கரம்பக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர் இந்நிலையில் கரம்பக்குடி ஆண்டவர் ஜவுளிக்கடை முன்பு சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சதக்கத்துல்லா முகமது ஆசிக் ராஜதுரை முருகேசன் பிரபு உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த ரொக்க பணம் 33 ஆயிரத்து 930 மற்றும் 3604 லாட்டரி சீட்டுகளும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
- ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்
- மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை,
விராலிமலை ஒன்றியம், பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). விவசாயி. கருப்பையாவும், அதே ஊரை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரும் மலம்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவூர் அருகே இலுப்பூர் மாத்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே விராலிமலை தாலுகா வேலப்படையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆதனூர் கோவில்பட்டி மனக்காடு அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக திருமயம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜுக்கு தகவல் வந்து ள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீ சார் சென்றனர். அப்போது அங்கு ஆதனூர் புதுகுடியி ருப்பு பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் ரமேஷ், திருப்பத்தூர் செவ் வூரை சேர்ந்த முருகேசன் மகன் செல்வம்(வயது 21), தேவ கோட்டையை சேர்ந்த காளி முத்து மகன் கணேஷ் (37), முருகேசன் மகன் மணி(27), ஆதனூரை சேர்ந்த ஆண்டி மகன் நாகராஜன்(42) என்பது தெரியவந்தது.
இதில் ரமேஷ் தவிர மற்றவர் 4 பேரை போலீசார் கைது செய்யது அவர்களிட மிருந்து 13 இருச்சக்கர வாகனங்கள், 7 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், வட்டார அளவிலான கலைத்திரு விழா போட்டி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் செளமியா, பல்குரல் போட்டியில் தரணிகா, தனிநடன போட்டியில் கல்பனா, செவ்வியல் நடனம் தனியொரு பிரிவில் ரித்திகா ஆகியோர் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். களிமண் சுதை வெளி ப்பாடு சிவகார்த்திகேயன், தோல்கருவிகள் கபிலன் ஆகியோர் மூன்றாவது இடமும் பெற்றனர்.நாடக குழுவில் சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் தலைமையிலான குழுவில் தீபக்குமார், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, ஹரிசேகரன், ஆகியோர் நடித்த நாடகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, கெளரி ஆகி யோர் பாராட்டினார்கள்.
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் மாநிலங்க ளவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் மேம்படு த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் கட்டடப் பணியினை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களை வழங்கினர்.
திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் பேசியதாவது:-
இந்த கட்டடத்தில் அலுவலகத்துறை, மருத்துவ அலுவலர் பணியாளர் அறை, மருத்துவ அறை ,அவசர வார்டு ஆய்வகம், ஆண் பெண் மாற்றுத்தி றனாளிகள் கழிவறைகள் உள்ளிட்டவைகள் 257.65 சதுர மீட்டர் அளவு பரப்பளவில் கட்டப்பட உள்ளது என்று அவர் பேசினார்.
அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-
கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியார், திருரவங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, அறந்தாங்கி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி, சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் நமசிவாயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம் , ராகுல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விராலிமலை,
மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 14,17, மற்றும் 19 வயது பிரிவு மாணவ, மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்ட போட்டிகள், தடை தாண்டும் ஓட்டம்,நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 1500 மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.
இதில் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யுவராஜ் (உயரம் தாண்டுதல் முதல் பரிசு), சஞ்சய் (100 மீட்டர் ஓட்டம் முதல் பரிசு), தினேஷ் (முதல் பரிசு தடை ஓட்டம்), சவன்குமார் (80 மீட்டர் முதல்பரிசு, உயரம் தாண்டுதல் இரண்டாம் பரிசு),நித்திஷ் (100 மீட்டர் இரண்டாம் பரிசு) ஆகியோர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று மாநில அளவில் வரும் அக், 27-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வெல்கம் மோகன், இயக்குநர் அருண் பிரசாத், முதல்வர் சிவக்குமார், உடற்கல்வி ஆசிரியர் அடைகலம் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை,
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இறையன்பு, தனது பதவி காலத்தின் போது, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்படி தமிழ்நாட்டில் முதன் முதலாக புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாசிப்போர் மன்றத்தின் 8வது கூட்டத்தில் இறை யன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர். இதைக் கேட்டறிந்த இறையன்பு வாசிப்போர் மன்றத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்பினார்.
இதனை தொடர்ந்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களும் தாங்கள் படித்த அவரின் நூல்கள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர். மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட இறையன்பு முதன்முதலில் வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், 8 கூட்டங்கள் நடத்தி வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணரச் செய்தமைக்கும் பாராட்டு க்கள் என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக 9ம் வகுப்பு மாணவி நெகாசினி தான் வரைந்த இறையன்பு ஓவியத்தை வழங்கினார்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
- கறம்பக்குடி அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
- கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ, சின்னத்துரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான சிவ திருமேனிநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ, சின்னத்துரை கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், அரசு வழங்கும் பயனுள்ள திட்டங்களினால் மாணவ மாணவியர்கள் பயன்பெற்று தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.மேலும் நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, கறம்பக்குடி நகர தி.மு.க. செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முருகேசன் அட்மா சேர்மன் முத்து கிருஷ்ணன் , பேரூ ராட்சி துணைத் தலைவர் நைனா முகமது, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கி அருகே தே.மு.தி.க. பொதுக்கூட்டம்
- பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற கட்சியின் 19-வது ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்த் பிறந்த நாள் விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், சனாதன கொள்கையை 40 ஆண்டுகளுக்கு முன்பு பங்காரு அடிகளார் கொண்டு வந்துள்ளார். அவர் மறைவிற்கு செல்ல முடியாததால் பொதுக்கூட்ட மேடையிலே பொதுமக்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார். சென்னை சென்றவுடன் மேல்மருவத்தூருக்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூற உள்ளதாக கூறினார்மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு தனி பெருமை உண்டு. அதிக அளவில் ராணுவத்தில் சேருவது இங்கு உள்ள இளைஞர்கள் தான் இந்தப் பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே புகழ் சேர்க்கும் மாவட்டமாக விளங்கி வருவதால் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று புகழாரம் சூடினார்.பின்பு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு சந்தன மாலை அணிவித்து கையில் வீர வேல் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






