என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
    X

    விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

    • நவராத்திரி நிறைவு விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
    • விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்

    விராலிமலை,

    விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடந்தது.விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மலைமேல் சுப்ரமணி யசுவாமி வள்ளி தெய்வா னையுடன் மயில்மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.இங்கு வருடம் தோறும் தைபூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உட்பட பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றுமுதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலுக்கல் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் சுப்ரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

    இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    Next Story
    ×