என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டை குப்பையன்பட்டியில் கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
- 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு சொந்தமான நிறைமாத பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பசுமாட்டை போராடி உயிருடன் மீட்டனர்.
- கந்தர்வகோட்டைசிவன் கோவிலில் பாலாலயம்
- விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் கோவில் விமான கோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பாலாலய விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, கவிதா சிவா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
- கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கலை திருவிழா
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை சட்டத்து றை அமைச்சர் ரகுபதி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது , தமிழ்நா டு முதல்-அமைச்சர் மா ணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் கலை திருவிழா விளையாட்டுகள் உள்ளிட்டவைகளிலும் மாணவ, மாணவிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 12 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் 6 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவி ழா நடத்தப்படுகிறது. கலைத் திருவிழா 2022-2023 -ம் கல்வியாண்டில் மாநில அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகளில் 61 மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தனர். ஒரு கலையரசி பட்டத்தை விராலிமலை செரளப்பட்டி பள்ளி மாணவி ராஜஹரிணி பெற்றார். மேலும் நிகழாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் 26,767 மாணவர்கள் பங்குபெற்று மாவட்ட அளவில் 6,721 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து கலைகளிலும் தங்களது திறமைகளை காண்பித்து மாநில அளவி லான கலைத்திரு விழாவில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மா வட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கலைத் திருவிழாவிற்காக கற்பக விநாயகா அறக்கட்டளை சார்பில் ரூ .1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் வழங்கினார். முன்னதாக இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகாபுரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை எம். எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணை தலைவர் லியாகத் அலி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தாசில்தார் கவியரசன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- அமைச்சர் மெய்யநாதன் அழைப்பு
புதுக்கோட்டை,
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.
அமைச்சர் அழைப்பு
முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்கலாம் மேலும் ஐ.டி.ஐ.,டிப்ளமோ, நர்சிங் பார்மசி, பொறியியல் படித்தவர்களும் வேலைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமை படித்த ஆண்-பெண் இருபாலரும் பயன்படுத்தி வேலை வாய்ப்பினை பெறுமாறு தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
புதுக்கோட்டை
அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவி 67 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பாபாசாஹேப் அம்பேத்கர் பொறியாளர் இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரிய இளைஞர்கள் மாநாடு மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் அதிலும் தமிழகத்திலும் பல்வேறு வன்கொடுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.
ஆனால் அந்த வழக்கில் 300 நாட்களை கடந்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிமான வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் அதில் வெறும் 25 சதவீத வழக்குகள் மட்டுமே தீர்த்து வைக்கப்படுகின்றன. 75 சதவீத வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன.
மேலும் பல்வேறு காவல் நிலையங்கள் வழக்குகளை பதிவு செய்வதே இல்லாத அலட்சிய போக்கு தான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலைநீடிக்காமல் இருக்க வன்கொடுமை சட்டங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய மகளிர் காவல் நிலையம் உள்ளதை போல வன்கொடுமை வழக்குகளுக்கு தனி காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அறந்தாங்கி அருகே கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
- இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் இயங்கி வரும் அரசு கூட்டுறவு நூற்பாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கனவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் மற்றும் முன்பனம் கிடையாது என நிர்வாகம் கூறியிருப்பதை கண்டித்து ஆலை வாசல் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தற்காலிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ், முன்பணம் மற்றும் இனிப்பு பலகாரம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன், டி.எம்.பி.டி.எஸ். மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி,
பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய அரசையும், இஸ்ரேலுக்கு துணை போகும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மஜக மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முபாரக்அலி ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர்அலி தலைமை வகித்தார்.
ஆர்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் சலாம், ஹாரிஸ், நகர்மன்ற தலைவர் ஆனந்த், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
- அறந்தாங்கி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
- கணவனுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பிடாரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி விஜயராணி (வயது 35). 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவாராம். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் படுத்துவார்களாம்.
வழக்கம் போல் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். இதனால் மனவேதனையடைந்த விஜயராணி வயலுக்கு பயன்படுத்தக்கூடிய களைக்கொல்லி விஷத்தை அருந்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்பத்தகராறில் பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மறவன்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மனோஜ்(வயது 12). இவன் விளையாடும் போது அவனுடைய இடது கால் பாதிப்படைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவனது ஒரு கால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் சிறுவன் மனோஜ் ஆலங்குடி சட்டமன்ற அலுவலகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக அவனுக்கு 3 சக்கர மிதிவண்டி வரவழைத்து வழங்கி ஆறுதல் கூறி உதவித்தொகை அளித்தார்.
மேலும் சிறுவனுக்கு செயற்கை கால் வழங்கவும், அவனது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் கூறியதாவது:-
இப்பகுதி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையும் மேலும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பிஇ என அனைத்து சம்பந்தப்பட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் இங்கு கிடைக்க பெற உள்ளது. இந்த முகாமில் 18 வயதில் முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கல்விச் சான்றிதழ் நகல்களை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பகுதி பட்டதாரிகள், இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பினை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மெயயநாதன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு நடத்துவதற்கு அமைக்கப்பட்டு வரும் பந்தல்கள் மற்றும் முன்னேற்பாடு நிகழ்ச்சிகளை அமைச்சர் மெய்யநாதன் நேரடியாக பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
- நானும் மிகப்பெரிய ரவுடிதான்வியாபாரிகளை மிரட்டிய போதை ஆசாமிகள்
- பொன்னமராவதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஸ்டேட் பாங்க் வங்கி அருகே மறவாமதுரை சேர்ந்த பெருமாள் என்பவர் மோட்டார் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த 2 இளைஞர்கள் பெருமாள் நிறுத்தி இருந்த மஞ்சள் நிற ஸ்கூட்டியை சேதப்படுத்திவிட்டு கடைக்குச் சென்று நாங்கள் பெரிய ரவுடி என்றும், தாங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை காணவில்லை. உனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு காட்டு, என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் கேட்ட பக்கத்து கடையே சேர்ந்த பாத்திர கடை உரிமையாளர் வெங்கடேசன்,பாலு ஆகியோர் வந்துள்ளனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள் பீர் பாட்டில்களை உடைத்து கையில் வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் கூடியதை கண்டு, அந்த இளைஞர்கள் இருவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து பெருமாள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த விசாரணை மேற்கொண்ட பொன்னமராவதி போலீசார் அந்த இளைஞர்களை தேடி சென்று, புதுப்பட்டி செய்கை ஊரணி பிடித்தனர்.
அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, நாங்க மிகப்பெரிய ரவுடி என்று மிரட்டி உள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த பெண் போலீசாரையும், தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுக்கா ஆர் பாலகுருச்சியை சேர்ந்த பிரகாஷ் பாபு, திருப்பத்தூர் தாலுகா ஆவினிபட்டி அஞ்சல் ,செவினிப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் பாபு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிந்த பொன்னமராவதி போலீசார், அவர்களை கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






