என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

    • அறந்தாங்கி அருகே கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
    • இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் இயங்கி வரும் அரசு கூட்டுறவு நூற்பாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 260-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த ஆண்டுகள் வரை அரசு அறிவித்த பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆலை நிர்வாகம் சார்பில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட மாட்டாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து வேதனை அடைந்த தற்காலிக தொழிலாளர்கள், தாங்கள் ஏற்கனவே குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்து வருகின்ற சூழ்நிலையில் தற்போது தீபாவளி போனஸ் மற்றும் முன்பனம் கிடையாது என நிர்வாகம் கூறியிருப்பதை கண்டித்து ஆலை வாசல் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தற்காலிக தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால போனஸ், முன்பணம் மற்றும் இனிப்பு பலகாரம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அலாவுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன், டி.எம்.பி.டி.எஸ். மாவட்ட செயலாளர் கர்ணா உள்ளிட்ட தற்காலிக தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×