search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்முறையை தடுக்க தனி காவல் நிலையம் வேண்டும்
    X

    வன்முறையை தடுக்க தனி காவல் நிலையம் வேண்டும்

    வன்முறையை தடுக்க தனி காவல் நிலையம் வேண்டும்

    புதுக்கோட்டை

    அண்ணல் அம்பேத்கர் பவுத்தம் தழுவி 67 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பாபாசாஹேப் அம்பேத்கர் பொறியாளர் இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரிய இளைஞர்கள் மாநாடு மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிங்களிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

    இந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் மட்டுமல்லாது தென் மாநிலங்களிலும் அதிலும் தமிழகத்திலும் பல்வேறு வன்கொடுமைகள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.

    ஆனால் அந்த வழக்கில் 300 நாட்களை கடந்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆண்டுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிமான வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் அதில் வெறும் 25 சதவீத வழக்குகள் மட்டுமே தீர்த்து வைக்கப்படுகின்றன. 75 சதவீத வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன.

    மேலும் பல்வேறு காவல் நிலையங்கள் வழக்குகளை பதிவு செய்வதே இல்லாத அலட்சிய போக்கு தான் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலைநீடிக்காமல் இருக்க வன்கொடுமை சட்டங்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும்.

    மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்ய மகளிர் காவல் நிலையம் உள்ளதை போல வன்கொடுமை வழக்குகளுக்கு தனி காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×