search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான கலை திருவிழா
    X

    மாவட்ட அளவிலான கலை திருவிழா

    • புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான கலை திருவிழா
    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழாவினை சட்டத்து றை அமைச்சர் ரகுபதி மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது , தமிழ்நா டு முதல்-அமைச்சர் மா ணவ, மாணவிகள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் கலை திருவிழா விளையாட்டுகள் உள்ளிட்டவைகளிலும் மாணவ, மாணவிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 12 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்வாண்டும் 6 முதல் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவி ழா நடத்தப்படுகிறது. கலைத் திருவிழா 2022-2023 -ம் கல்வியாண்டில் மாநில அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகளில் 61 மாணவ,மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தனர். ஒரு கலையரசி பட்டத்தை விராலிமலை செரளப்பட்டி பள்ளி மாணவி ராஜஹரிணி பெற்றார். மேலும் நிகழாண்டில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வட்டார அளவில் 26,767 மாணவர்கள் பங்குபெற்று மாவட்ட அளவில் 6,721 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் கல்வியுடன் சேர்ந்து கலைகளிலும் தங்களது திறமைகளை காண்பித்து மாநில அளவி லான கலைத்திரு விழாவில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மா வட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் அமைச்சர் ரகுபதி கலைத் திருவிழாவிற்காக கற்பக விநாயகா அறக்கட்டளை சார்பில் ரூ .1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் வழங்கினார். முன்னதாக இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அழகாபுரி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை எம். எல்.ஏ. சின்னத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி, தமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்றத் துணை தலைவர் லியாகத் அலி,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சிவகுமார், நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (இடைநிலை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தாசில்தார் கவியரசன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×