என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கந்தர்வகோட்டை அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக பலியானார்
    • பள்ளிக்கு சென்ற போது பரிதாப சம்பவம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராம்குமார் (வயது 15). இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டி பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறைக்காக கோமாரம் வந்திருந்த ராம்குமார் இன்று காலை பள்ளி சீருடையில் பள்ளிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சாலை ஓரத்தில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது தொடர்பாக மாணவனின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பலியான மாணவனின் தந்தை செந்தில் குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

    • விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே அதிரடி சோதனை நடத்தினர்.
    • வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    புதுக்கோட்டை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இவரது மனைவி ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர். இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

    • கந்தர்வகோட்டை சிவன் கோவில்களில் சிவனுக்கு அன்னாபிஷேக் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் சிவனை தரிசித்தனர்

    கந்தர்வகோட்டை,

    ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் பௌர்ணமி சாமி தினத்தன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு சிவபெருமானை தரிசித்தனர். 

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு 4 மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
    • நிலுவை ஊதிய தொகையை வழங்க இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

    புதுக்கோட்டை,

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட பேரவை, மாநிலக்குழு உறுப்பினர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம். சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ் சங்கர் மாவட்ட செயலாளர். டி.சலோமி மாவட்ட துணை தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் பேசினார்

    மாவட்டநிர்வாகிகள் எம் ஜோஷி, க.சித்திரவேல், பி.ராமசாமி, எஸ்.பெருமாள், இளவரசு உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களில் இருந்து பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்த விவசாய தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கூலி வழங்கவில்லை. தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு உடனடியாக மத்திய அரசு நிதியை விடுவித்து வேலை பார்த்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராம்குமார் (வயது 15). இவர் செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டிபட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக கோமாரம் வந்திருந்த ராம்குமார் இன்று காலை பள்ளி சீருடையில் பள்ளிக்கு வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சாலை ஓரத்தில் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து மாணவர் மீது விழுந்ததில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவனின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலியான மாணவனின் தந்தை செந்தில் குமார் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

    • கறம்பக்குடியில் ஆடுகளை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
    • ஆடுகள் அதன் உரிமையாளரிடம் ஒப்ப டைக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் வயல்களில் மேய்ந்த மற்றும் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் அடிக்கடி திருட்டு போனது.

    இது குறித்து கறம்பக்குடி போலீசில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதன் பேரில் மலையூர் மற்றும் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகின. இதை அடுத்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆடுகளை ஏற்றிக்கொண்டு 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ் (வயது 24), பாரதிராஜா (21), ஆனந்தன் (20) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும் இவர்கள் கறம்பகுடி பகுதியில் ஆடுகளை திருடியதும் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 17 ஆடுகள் 5 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.

    அந்த ஆடுகள் அதன் உரிமையாளரிடம் ஒப்ப டைக்கப்பட்டது மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    • ஆவுடையார் கோவில் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.சி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருவாகுடி ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.சி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உடனடி தீர்வு மற்றும் நீண்டகால தீர்வு சம்பந்தமாக அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர்,கண் மருத்துவர்,அறுவை சிகிச்சை நிபுணர்' பொது மருத்துவர், பல் மருத்துவர் போன்ற பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றிய ஒன்றியக்குழு தலைவர் மேகலா முத்து ,ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன்,அறந்தாங்கி காங்கிரஸ் நகரச் செயலாளர் நகரச் செயலாளர் வீராசாமி ,நகர மன்ற உறுப்பினர் கிருபாகரன், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    ஆலங்குடி,

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மெர்ஸி ரம்யா தலைமை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கங்கள் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    கஜானா காலி, கடன், கொரோனா தடை என முதல்வராக பதவியேற்ற போது இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை தனது முயற்சியாலும் திறமையாலும் தகர்த்து தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார்.

    நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து நாட்டை உயர்த்த செயல்பட்டு வருகிறார். எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற சித்தங்களை பயன்படுத்தி இளைஞர்களும் பொதுமக்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.முகாமில், 2 ஆயிரத்து 25 பேர் கலந்து கொண்ட நிலையில், 303 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் அப்துல்லா எம்பி., வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் சந்திரன், கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் தில்லைமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தாசில்தார் பெரியநாயகி, திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, ஆணையர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வீர செல்வம், திமுக நகர செயலாளர் பழனிகுமார், துணைச் செயலாளர் செங்கோல், அரசு வக்கீல் கண்ணதாசன், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், சையது இப்ராகிம், லட்சுமணன், கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஆசைத்தம்பி, விஜயகுமார், சரவணன், ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ரத வீதியில் பூமிக்குள் புதைக்கப்பட்ட மின்கம்பி பயன்பாட்டுக்கு வந்தது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோடும் வீதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில், மின்கம்பிகளை அகற்றி ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதைவட கம்பி அமைக்கப்பட்டுள்ளதை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு தமிழகம் முழுவதும் தேரோடும் வீதிகளில் மின்கம்பிகளை அகற்றி புதைவட கம்பி அமைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில் தேர் திருவிழா நாளன்று தேர் செல்லும் போது எவ்வித மின்சார இடையூறுமின்றி தேர் செல்வதற்கு வழிவகை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, இந்துசமய அறநிலையத்துறை சார்பில், திருவப்பூர் ஈஸ்வரன் திருக்கோவில் திருப்பணிக்காக ரூ.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய சிறப்பு வழிபாடு நிகழ்வில், சட்டத்துறை அமைச்சர் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத்தலைவர்லியாகத் அலி, செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தவபாஞ்சாலன், உதவி மின்பொறியாளர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், வட்டாட்சியர் கவியரசன், நகர்மன்ற கவுன்சிலர் கனகம்மன் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டையில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • என் மண் -என் மக்கள் “ பாத யாத்திரையை நவம்பர் 6-ந்தேதி புதுக்கோட்டையில் நடத்துவது குறித்து ஆலோசனை

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நடத்தி வரும் " என் மண் -என் மக்கள் " பாத யாத்திரையை நவம்பர் 6-ந்தேதி புதுக்கோட்டையில் நடத்துவது மற்றும் யாத்திரைக்கு வருகை தரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பது குறித்த மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.முன்னதாக மாவட்ட பொது செயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாதயாத்திரை பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட பார்வையாளர் பழசெல்வம்,மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் ஏசிஎஸ் மணிகண்டன்,மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மாவட்ட பொது செயலாளர் குருஸ்ரீராம், நகர ஒன்றிய தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    • ஆலங்குடியில் இன்று பிரமாண்ட தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
    • சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    ஆலங்குடி,  

    புதுக்கோட்டை மா வட்டம் ஆலங்குடியில் மாவ ட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து கலை ஞர் நூற்றாண்டு விழா வை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவை இன்று நடத்தியது.

    ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் விண்ணப்பம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    முகாமில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழக முழுவதும் இருந்து 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவ ர்களை தேர்ந்தெடுத்தனர். இதில்

    8-ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொறியியல், பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் என இருபாலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    முகாமில் அந்தந்த துறை சார்ந்த படித்த இளைஞ ர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் வகையில் தனித்த னி யாக அறைகள் ஒதுக்கப்ப ட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

    அவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

    முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி வளாகத்திலேயே மதிய உணவு வழங்கப்பட்டது. பணிக்காக தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று மாலை அமைச்சர் மெய்யநாதன் பணிநியமான ஆணைகளை வழங்க உள்ளார்.

    புதுக்கோட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்புல் கூறியருப்பதாவது:-

    விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இடுபொருட்களை பெறும்போது தங்களது பங்களிப்பு தொகையை இ-செலான், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஒருங்கிணைந்த பணப்பவரிவர்த்தனை (யு.பி.ஐ) மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மேற்கண்டவாறு பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டது.

    தற்போது இது அனைத்து வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் செயல்படுத்திட விரிவுபடுத்தப்பட்டு, நடைமு றைப்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் செயல்படுத்தப்படும், இந்த பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும்ப யன்படுத்தி பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    ×