என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்
- புதுக்கோட்டையில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- என் மண் -என் மக்கள் “ பாத யாத்திரையை நவம்பர் 6-ந்தேதி புதுக்கோட்டையில் நடத்துவது குறித்து ஆலோசனை
புதுக்கோட்டை,
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி நடத்தி வரும் " என் மண் -என் மக்கள் " பாத யாத்திரையை நவம்பர் 6-ந்தேதி புதுக்கோட்டையில் நடத்துவது மற்றும் யாத்திரைக்கு வருகை தரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பது குறித்த மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை பா.ஜ.க. மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.முன்னதாக மாவட்ட பொது செயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாதயாத்திரை பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட பார்வையாளர் பழசெல்வம்,மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாநில பொருளாதார பிரிவு செயலாளர் ஏசிஎஸ் மணிகண்டன்,மாவட்ட செயலாளர் சுந்தரவேல், மாவட்ட பொது செயலாளர் குருஸ்ரீராம், நகர ஒன்றிய தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.






