என் மலர்
புதுக்கோட்டை
- கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது
- ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பொது சுகாதாரம் மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சிறப்பு பற்றாளர், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார்,ஊராட்சி செயலர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும்,கோமாபுரம் கிராம சபை கூட்டம் தலைவர் அன்பு தலைமையிலும்,அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலை மையிலும்,விராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர் எஸ் முத்துக்குமார் தலைமை யிலும்,
அரவம்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமை யிலும்,குளத்தூர் நாயக்கர் பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம் தலைமையிலும்,சங்கம் விடுதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையிலும் நடைபெற்றது.
- ஊராட்சியை ஒரே மாவட்டத்தில் இணைக்க கோரி 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்
- பொன்னமராவதி அருகே கிராமசபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ரெகுநாதபட்டி கிராமத்தில் ஊராட்சி துணை தலைவர் ரெசினா பேகம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன் பங்கேற்றார்.
கூட்டத்தில் ரெகுநாதம்பட்டி, சீகம்பட்டி, வைரம்பட்டி, கோபால்பட்டி விடத்தலாம்பட்டி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது வரை வருவாய் கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சியிலும் ,பாராளுமன்றம்,சட்டமன்ற தொகுதி சிவகங்கை மாவட்டத்திலும்,உள்ளாட்சி பிரதிநிதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருப்பதால் 6 ஊர் கிராம மக்களும் ஏதோ ஒரு மாவட்டத்தில் தங்களது ஊராட்சியை முழுமையாக இணைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல் நிலையம், மின் வாரியம் சிவகங்கை மாவட்டத்திலும் இருப்பதால் சாலை வசதி, சாலைப்போக்குவரத்து பேருந்து வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலோ அல்லது சிவகங்கை மாவட்டத்திலோ ஏதோ ஒரு மாவட்டத்தில் அரசு விரைவில் இணைக்க வேண்டும். என கோரிக்கை வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை அதனை ஊராட்சி செயலாளர் சரவணன் வாசித்தார். இதில் நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலாஜி, பள்ளி தலைமைஆசிரியர் நாகலட்சுமி, ரேசன் கடை விற்பனையாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், நர்ஸ் கலைச்செல்வி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி சப் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் இருந்தனர்.
- கறம்பக்குடி அருகே பகுதி நேர கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டது
- முத்துராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு கீழத்தெரு மற்றும் வளம் கொண்டான் விடுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனை களை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்து ராஜா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான தவ பாஞ்சாலன், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும் மாவட்ட மகளிர் அணி தலைவியுமான மாலா ராஜேந்திர துரை, மலையூர் வட்டார கால்நடை மருத்துவ அலுவலர் முத்தழகு,
கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ரமேஷ் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிந்தாமணி முருகேசன், லட்சுமி கோவிந்தன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், தி.மு.க. நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏவுக்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
- அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு 300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டது
- பா.ஜ.க. பொருளாளர் தொழில் அதிபர் முருகானந்தம் ஏற்பாடு
ஆலங்குடி,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் பாதயாத்திரை புதுக்கோட்டையில் 6-ந் தேதி நடக்கிறது. அண்ணாமலை வருகை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
மாவட்ட பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம் ஏற்பாட்டில் 300 ஆட்டோக்களில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.
விஜய் பேலஸ் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம், மாவட்டப் பார்வையாளர் பழ.செல்வம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரவடிவேலு, நேதாஜி, சரவணன், மயில் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணாமலையின் யாத்திரையில் பங்கேற்க பா.ஜ.கவினர் வெற்றிலை, பாக்கு வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்
- மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று அசத்தல்
புதுக்கோட்டை,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண்-என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். வருகிற 6-ந்தேதி அவர் புதுக்கோட்டையில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் திரளானோரை பங்கேற்க செய்வதற்கு ப.ஜ.க.வினர் விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.இதன் ஒரு கட்டமாக பா.ஜ.க.வினர் நூதன முறையில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். புதுக்கோட்டை கீழ 3-ம்வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மகளிர் குழு உறுப்பினர்களுக்குவழங்கும் நிகழ்ச்சி பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏ.வி.சி.சி. கணேசன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர்கள் லெட்சுமணன், சக்திவேல் முன்னிலை வகித்தார்.இதில் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ரவிக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் மனோகர்,ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், சக்திகேந்திர கூடுதல் பொறுப்பாளர் கைலாஷ், நகர நிர்வாகிகள் ஆனந்த்,செந்தில்குமார், ரங்கநாதன்,இளங்கோ, சுப்பிரமணியன்,கண்ணன், ராஜேந்திரன்,ரஜினி,ரவி, சாய்லெட்சுமி,கிளைத் தலைவர்கள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி அழைப்பு விடுத்தனர்.நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை தட்டில் வைத்து, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்று நூதன முறையில் அழைப்பு கொடுத்தார்கள். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
- தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்படுத்த அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்
- புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவுறுத்தல
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- பட்டாசு வெடிக்கும் போது ஒலி அளவு 110 லிருந்து 170 வரை அதிகமாக ஒலிவந்து ஒலிமாசு ஏற்படுகிறது. ஆனால் பசுமைப் பட்டாசை பொறுத்தவரை 100-ல் இருந்து 110 டெசிபில் அளவிற்கு தான் வெடிக்கக் கூடியது அதனால் ஒலிமாசும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் நாம் அனைவரும் இயற்கையை பாதுகாப்பதற்கு பசுமை பட்டாசு சத்தம் குறைவு உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பசுமை பட்டாசுகள் குறித்து வருவாய்த்துறை மூலம் போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பசுமை பட்டாசு உற்பத்திக்கு என்று சதவீதம் நிர்ணயிக்கவில்லை. பசுமை பட்டாசை படிப்படியாக கொண்டு வரும் பொழுது முழுமையாக பசுமை பட்டாசு பயன்பாடு முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டை நமண சமுத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 போலீசார் படுகாயம்
- நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து டாரஸ் லாரி டிரைவரிடம் விசாரணை
புதுக்கோட்டை,
சென்னை மாநகர காவல்துறை எஸ்.எஸ்.ஐ.க்கள் கிருஷ்ணமூர்த்தி(வயது 55), ரமேஷ்(58), ரவி(58) தலைமை காவலர் ராமமூர்த்தி(51), போலீஸ்காரர் செந்தில்குமார்(36) ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் சென்றிருந்தனர். தேவர் ஜெயந்தி முடிந்த நிலையில் அவர்கள் ஒரு காரில் சென்னை திரும்பி உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, ஏனபட்டி விளக்கு ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாரஸ் லாரியின் மீது மோதி உள்ளது.இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நமணசமுத்திரம் போலீசார், சென்னை போலீசாரை மீட்டு, திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து டாரஸ் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 505 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தனி மாவட்ட வருவாய் அலுவலர்சரவணன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.
- ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
- ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்து தீர்மானம்
பொன்னமராவதி,
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மேலத்தானியம் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் கொன்னைப்பட்டி செல்வமணி , பொருளாளர் தேனூர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேரனூர் காமராஜ், முள்ளிப்பட்டி குமார் ஆகியோர் ஊராட்சிகளின் செயல்பாடு, ஊராட்சி செயலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்ள்,தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்க்கு ஊதியம் வழங்க முடியாத நிலை மற்றும் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை செலவினங்கள் மேற்கொள்ள புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள டி.என்.பாஸ் முறையினால் மேற்கொள்ள முடியாத நிலை மற்றும் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்து விளக்கிப்பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஊராட்சிகளில் பணியாளர்கள் மற்றும் செலவினங்களுக்கு ஓ.டி.பி. முறை என்ற டி.என்.பாஸ் முறையினை ரத்து செய்து பழைய முறையினை கொண்டு வரவேண்டும். 3 மாதமாக வழங்கப்படாத மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும்.ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி பணியாளர்களை ஊராட்சி தலைவர்களே நியமனம் செய்யவழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கை அடங்கிய மனுவினை கிராம ஊராட்சி ஆணையர் கருணாகரனிடம் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர்கள் ராமையா, செல்வராஜ்,ராமன்,அர்ச்சுணன்,அழகுமுத்து, ராமசாமி,பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது
- வழிபாட்டில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
பொன்னமராவதி,
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை நாளையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டின் தொடக்கமாக வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நிகழ்வையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். அதுபோல பொன்னமராவதி பாலமுருகன் கோவில், தேனிமலை சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைபெற்ற கார்த்திகை வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
- அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் சேமிப்பு தின விழா நடைபெற்றது
- மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது
கந்தர்வக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சிக்கன மற்றும் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியை சிந்தியா அனை வரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி அஞ்சலகத்தின் கிளை அஞ்சல் அலுவலர் மோகன்தாஸ் மாணவர்கள் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரமேதுல்லா, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், செல்விஜாய் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






