என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டங்கள்
    X

    கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டங்கள்

    • கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது
    • ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பொது சுகாதாரம் மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சிறப்பு பற்றாளர், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார்,ஊராட்சி செயலர் சக்திவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும்,கோமாபுரம் கிராம சபை கூட்டம் தலைவர் அன்பு தலைமையிலும்,அண்டனூர் கிராம சபை கூட்டம் தலைவர் இளங்கோவன் தலை மையிலும்,விராலிப்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஆர் எஸ் முத்துக்குமார் தலைமை யிலும்,

    அரவம்பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமை யிலும்,குளத்தூர் நாயக்கர் பட்டி கிராம சபை கூட்டம் தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம் தலைமையிலும்,சங்கம் விடுதி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையிலும் நடைபெற்றது.

    Next Story
    ×