300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைப்பு

அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு 300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டது பா.ஜ.க. பொருளாளர் தொழில் அதிபர் முருகானந்தம் ஏற்பாடு
300 ஆட்டோக்களில் சென்று வரவேற்பு பேனர்கள் அமைப்பு
Published on

ஆலங்குடி,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என்மண் என்மக்கள் பாதயாத்திரை புதுக்கோட்டையில் 6-ந் தேதி நடக்கிறது. அண்ணாமலை வருகை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

மாவட்ட பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம் ஏற்பாட்டில் 300 ஆட்டோக்களில் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.

விஜய் பேலஸ் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொருளாளரும் தொழிலதிபருமான முருகானந்தம், மாவட்டப் பார்வையாளர் பழ.செல்வம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், சுந்தரவடிவேலு, நேதாஜி, சரவணன், மயில் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com