என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "byte"

    • போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது
    • விஜிலென்ஸ் கமிட்டி அமைத்து தொடர்ந்து கண்காணிப்பு

    திருச்சி, 

    திருச்சி மண்டலத்தி ற்குட்பட்ட காவல் துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணி செய்து வருபவர்களின் குடும்பத்தார் களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இன்று நடந்தது.இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலி சூப்பரண்டுகள் கலந்து கொண்டனர்பின்னர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் நிருப ர்களிடம் கூறும்போது;-தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சீருடை பணியாளர்களின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை இன்று துவங்கி வைத்துள்ளோம்.600 பேர் இந்த முகாமில் கலந்து கலந்து கொண்டு ள்ளார்கள். அவர்களை வேலைக்கு தேர்வு செய்ய 100 தனியார் கம்பெனி அதிகாரிகள் வந்திரு க்கிறார்கள். இதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்கி ன்றோம்.போதைப் பொருட்கள் விற்பனைதிருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி - கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் பள்ளி கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்துவிஜிலென்ஸ் கமிட்டி உருவாக்கி காவல்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குண்டாசில் கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
    • திருச்சி அரிஸ்டோ பாலப்பணிகள் நிறைவுற்றதை ஆய்வு செய்தார்

    திருச்சி,

    ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெற்று வரும் அரிஸ்டோ மேம்பால பணிகளை இன்று திருநாவுக்கரசர் எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது ;-7 ,8 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த அரிஸ்டோ மேம்பால பணிகள் தற்போது ஏறக்குறைய நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இதற்கு ஒத்துழைப்பு தந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ இடத்துக்கு மாற்று இடம் தந்த தமிழக முதலமைச்சர், திட்டம் நிறைவேற முயற்சி மேற்கொண்ட அமைச்சர்கள் கே.என். நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது இந்த பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் கலந்தாலோசித்து விரைவில் ஒரு தேதி குறிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் தற்கொலை செய்தனர்.இப்போது அவர்களின் உயிரை காப்பாற்ற வகையில் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட கவர்னருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கவர்னர் நல்ல சட்டம் தெரிந்த நபராக இருக்கின்ற காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கும் அவர் கையெழுத்திட வேண்டும்.கவர்னர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர அதற்கு தடையாக இருக்கக் கூடாது.சில தீர்மானங்கள் காலாவதியாகி விட்டதாக எப்படி சொல்ல முடியும்.பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைக்க வேண்டும்.

    • ரூ.1,312 கோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமித்துள்ளது
    • இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது

    கரூர்,

    மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். இரு தினங்களுக்கு முன்பு 400 மில்லியன் யூனிட் ஒரே நாளில் மின்நுகர்வு பயன்பாடு வந்துள்ளது.ஒரு நாள் பயன்பாடாக ஏறத்தாழ 40 கோடி யூனிட்டை மக்கள் பயன்படுத்தி உள்ளனர். எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகபட்ச மின்நுகர்வு இதுதான். இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதலில் இருந்துதான் காற்றாலையின் உற்பத்தியை எதிர்பார்க்கிறோம். வழக்கமாக அடுத்த மாதம் தான் காற்றாலை உற்பத்தி தொடங்கும். கடந்த காலங்களில் தேவைக்கேற்ப மின்சாரம் எக்ஸ்சேஞ்சில் வெளிச்சந்தையில் வாங்குவார்கள். தற்போது அது தவிர்க்கப்பட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு எவ்வளவு மின்சாரம் கூடுதலாக தேவைப்படும் என்பதை கணக்கிடப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு ஒரு யூனிட் ரூ.8.50 என விலை நிர்ணயம் செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெண்டர் விடாமல் எக்ஸ்சேஞ்சில் வாங்கினால் ஒரு யூனிட் ரூ.12-க்கு தான் வாங்கி இருக்க வேண்டும். இதன்மூலம் இந்த கோடை காலத்திற்கு மட்டும் ரூ.1,312 கோடி முதல்-அமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மின்சார வாரியத்திற்கு சேமிக்கப்பட்டு இருக்கிறது. மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருந்தால் மின்னகத்திற்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அதற்கான குறைகள் உடனுக்குடன் களையப்படும். தமிழகத்தில் இப்போது வரை சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கோடைகாலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல், சீரான மின்வினியோகம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே எந்தவித பயமும், அச்சமும் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்த கோடைகாலத்தை சமாளிக்க கூடுதலான மின்சாரம் இருக்கிறது. எனவே மின்தேவை இன்னும் அதிகரித்தாலும் கூட அதை சமாளிப்பதற்கும் மின்சார வாரியம் தயாராக உள்ளது. அதனால் கோடைகாலத்தில் மின்சார தட்டுப்பாடு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல் எந்த ஜாதியையும் தெளிவுபடுத்தி பேசவில்லை
    • திருச்சியில் குமரி ஆனந்தன் பேட்டி

    திருச்சி,

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-திருச்சி தமிழ் சங்கத்தில் இன்று நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகம்.இதில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிடுகிறார். நான் அதில் ஏற்புரை ஆற்றுகிறேன். ராகுல் காந்தியின் பதவியை பறித்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எந்த ஜாதியையும் தெளிவுபடுத்தி பேசவில்லை.மோடி என பேசியதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி பதவியை பறித்துள்ளார்கள். இது என்னுடைய மனதை கலங்கடிக்க செய்துவிட்டது.நான் 17 முறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் ஒரே நடை பயணத்தில் ராகுல் காந்தி அதனை முறியடித்து விட்டார். அவரது கருத்துக்கள் இன்றைக்கு மக்களை சென்றடைந்து வருகிறது. பிரதமராகும் அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. காங்கிரஸ் வளர காமராஜரின் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறிக்கோள் உடன் வாழ வேண்டும் கொண்ட குறிக்கோளில் இருந்து இளைஞர்கள் பின்வாங்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியுடன் கரூரில் பேட்டி
    • ராவண கோட்டம் பார்க்க வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்

    கரூர்,

    "என் பாதை வேறு, அப்பாவின் பாதை வேறு,'' என, நடிகர் சாந்தனு தெரிவித்தார். கரூரில் எல்லோரோ தியேட்டரில், ராவணகோட்டம் படம் திரையிடப்பட்டுள்ளது. அதில், கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சாந்தனு நேற்று மதியம், தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார். சிறிது நேரம் படம் பார்த்த சாந்தனு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து கலந்துரையாடினார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ராவண கோட்டம் படத்துக்கு, ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களை நேரில் சந்தித்து, பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கு சென்றாலும், என் தந்தை பாக்கியராஜ் குறித்துதான், ரசிகர்கள் கேட்கின்றனர். அவர் கதை எழுதி, டைரக்ஷன் செய்து நடித்தார். என் பாதை வேறு, அவர் பாதை வேறு. அடுத்ததாக, கிரிக்கெட் தொடர்பான படத்தில் உள்ளேன். நடிகர் விஜய்யுடன் நடித்ததில் நடிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால், விஜய்யுடன் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட தயார் என்று வேல் முருகன் தெரிவித்துள்ளார்
    • முழு மதுவிலக்குக்காக

    அரியலூர்,

    தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அரியலூர் காமராஜர் திடலில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-தமிழகத்தில் முழு மதுவிலக்கு வேண்டும். ஒரு சொட்டு மதுகூட தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம். இதற்காக எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன். அரசியல் காரணங்களுக்காக மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறாமல், உண்மையிலேயே ஊழல் புரிந்ததற்கான ஆவணங்கள், தரவுகள் இருந்தால் அதனடிப்படையில் ஊழலை எதிர்க்க வேண்டும்.குறிப்பாக பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறிவிட்டு, இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது போன்ற மோசடி வித்தைகளை காட்டக் கூடாது என்பதே எனது வேணடுகோள் என்றார்.

    • பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
    • புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் வேதனை

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது இதில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது தி.மு.க. எதிர்த்து உள்ளது. அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும் இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

    • திருச்சி மாநகர டாஸ்மாக் பார்களில் மது விற்பவர்கள் மீது நடவடிக்கை
    • போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தகவல்

    திருச்சி,

    திருச்சி மாநகர காவல் துறை சார்பில் மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல் துறையினருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா தலைமை தலைமை தாங்கி ரோந்து காவலர்கள் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த பாக்கெட் கேமராக்கள் ஹைவே பெட்ரோல் (நெடுஞ்சாலை ரோந்து) போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது ரோந்து காவலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் அதை விசாரிக்கும் போது முழுவதும் பதிவாகிவிடும். பின்னர் விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும்.இது 64 ஜி.பி. மெமரி திறன் கொண்டது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ள வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம். திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் மதுபானம் விற்பவர்கள் மீதும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சென்று அதிரடியாக சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

    • மேகதாது அணைவிவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என வைகோ குற்றம்சாட்டி உள்ளார்
    • திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி

    திருச்சி,

    திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய திருநாட்டில் யாரும் செய்ய முயலாத தகடு தத்து வேலைகளை தமிழ்நாடு ஆளுநர் செய்து வருகிறார். அவருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சர்களை நீக்குவதும், மாற்றுவதும் முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு என அரசியல் சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால் இவர் டிஸ்மிஸ் செய்ததாக ஆறு மணிக்கு செய்தி கொடுக்கிறார். நடுராத்திரி ஞான உதயம் வருகிறது. அதனை நிறுத்தி வைக்க சொல்லுகிறார். அதை திருப்பி வாங்கிக் கொள்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையை எந்த கவர்னரும் செய்ததில்லை.தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் மேகதாட்டு அணையை கட்ட வேண்டுமென கர்நாடகா முனைகிறது. அணை கட்டப்பட்டால் 5 மாவட்டங்களின் பாசனங்கள் அடியோடு பாழாக்கப்படும். குடிநீருக்கும் பிரச்சனை ஏற்படும். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகா முனைந்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டை மிகவும் பாதிக்கும். இப்பிரச்சனை தமிழகத்தை பாதிக்கக்கூடியது. இதில் ஒன்றிய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணையையும் வைக்கிற போக்கை மாற்ற வேண்டும்.அதனால் தான் குடியரசு தலைவருக்கு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறோம்.அதற்கு எல்லா இடங்களிலும் கட்சி சார்பற்று ஆர்வத்தோடு கையொப்பமிட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்குப் பிறகு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்,தமிழ்நாட்டுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சென்றடைகிறது. இதுவே வெற்றி தானே. ஆளுநரின் போக்கு அவரது நடை உடை பாவணைகள் நடந்து செல்கிற போக்கு, பிரிட்டிஷ்காரர் கவர்னர் போல அவர் நடந்து ெகாள்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தமிழ்நாட்டில் அவர் பருப்பு வேகாது. நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருக்கிறோம். வேறு கேள்விக்கு இடமே இல்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

    முன்னதாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட துணை செயலாளர்கள் டோல்கேட் துரை வடிவேல், மல்லி ராஜன், பெல் ராஜ மாணிக்கம், பகுதி செயலாளர்கள் ஆசிரியா முருகன், ஆடிட்டர் விேனாத், கே.பி.மனோகரன், கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    • பொன்னேரியில் ரூ.662.73 கோடி மதிப்பீட்டில் தூர் வாரும் பணி
    • பா.ம.க. வழக்கறிஞர் பாலு தகவல்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு 662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023 - 24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ஆம் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளது.500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம்பெறவில்லை.முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது.வரும் ஆண்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடுவதற்கான பெயர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் பெயர்கள் இடம் பெற செய்ய வேண்டும்என கூறினார்.

    • திருச்சி போலீசார் விருப்பம்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என கமிஷனர் தெரிவித்துள்ளார்
    • போலீசாருக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேட்டி

    திருச்சி,

    திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் காவல்துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நடந்தது. முகாமை மாநகர காவல்துறை கமிஷனர் சத்யபிரியா தொடங்கி வைத்தார்.

    இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், டாக்டர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன், ஜி.எம்.ஆப்ரேஷன் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த காவல் துறை ஆணையர் சத்யபிரியா:- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம். ஆகையால் முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் பொய்யானது என்றார்.

    • அமலாக்கத்துறையினர் வணிகர்களை சோதிக்க அனுமதிக்க கூடாது என்று விக்கிரம ராஜா கூறி உள்ளார்
    • புதுக்கோட்டையில் பேக்கரி திறந்து வைத்தபின்னர் பேட்டி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் மஹராஜா பேக்கரியின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரம ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-வணிகர்களை அமலாக்கத்துறை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் இதற்கான முடிவு எடுக்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது.கொள்ளையடி ப்பவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தான் அதனை பயன்படுத்த வேண்டுமே தவிர வியாபாரிகள் மீது அந்த துறையை பயன்படுத்தினால் கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படு வதாக ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும். ஆகவே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக சந்தித்து எக்காரணத்தைக் கொ ண்டும் அமலாக்கத்துறை என்பது வணிகர்கள் மத்தியில் வந்து விடக்கூடாது என வலியுறுத்த இருக்கி ன்றோம்.இதற்காக நேரடியாக டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரை பார்த்து கோரிக்கை மனு கொடுக்க இருக்கின்றோம்.தக்காளி விலை உயர்வுக்கு வியாபாரிகள் தான் காரணம் என்று பொ துமக்கள் நினைக்கிறார்கள். ஆனால் தக்காளி விலை போகவில்லை என்றால் அதனை கீழே கொட்டுவது வாடிக்கையாக நடக்கிறது.ஆகவே நெல் கொள்முதல் செய்வதை போன்று தக்காளியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து தக்காளி தட்டுப்பாடு ஏற்படும் போது குறைந்த விலையில் விற்க வேண்டும். தக்காளி பொடியாக மாற்றி அதனை கொடுத்தாலும் நாங்கள் விற்க தயார். நாங்கள் தேர்தலில் நிற்க மாட்டோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளி ப்பதாக கூறி விட்டு நுழைந்த பின்னர் யார் யாருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்பதை அரசு சோதிப்பது கிடையாது.தமிழ்நாட்டில் 5சதவீத வேலைவாய்ப்பை கூட அவர்கள் வழங்கவில்லை. ஆனால் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, பேக்கரி மஹராஜா உரிமையாளர் அருண் சின்னப்பா, புதுக்கோட்டை தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பலர் இருந்தனர்.

    ×