என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்
    X

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்

    • திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
    • திருச்சி அரிஸ்டோ பாலப்பணிகள் நிறைவுற்றதை ஆய்வு செய்தார்

    திருச்சி,

    ராணுவ நில விவகாரத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பணிகள் நடைபெற்று வரும் அரிஸ்டோ மேம்பால பணிகளை இன்று திருநாவுக்கரசர் எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது ;-7 ,8 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த அரிஸ்டோ மேம்பால பணிகள் தற்போது ஏறக்குறைய நிறைவு பெறும் நிலையில் உள்ளது.இதற்கு ஒத்துழைப்பு தந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ இடத்துக்கு மாற்று இடம் தந்த தமிழக முதலமைச்சர், திட்டம் நிறைவேற முயற்சி மேற்கொண்ட அமைச்சர்கள் கே.என். நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது இந்த பாலத்தில் வர்ணம் பூசுதல் மற்றும் மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இன்னும் பத்து நாட்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் கலந்தாலோசித்து விரைவில் ஒரு தேதி குறிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் தற்கொலை செய்தனர்.இப்போது அவர்களின் உயிரை காப்பாற்ற வகையில் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட கவர்னருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கவர்னர் நல்ல சட்டம் தெரிந்த நபராக இருக்கின்ற காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கும் அவர் கையெழுத்திட வேண்டும்.கவர்னர் என்பவர் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர அதற்கு தடையாக இருக்கக் கூடாது.சில தீர்மானங்கள் காலாவதியாகி விட்டதாக எப்படி சொல்ல முடியும்.பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற கவர்னர் ஒத்துழைக்க வேண்டும்.

    Next Story
    ×