என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
    X

    சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

    • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது
    • வழிபாட்டில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் கார்த்திகை நாளையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வழிபாட்டின் தொடக்கமாக வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    நிகழ்வையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கார்த்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். அதுபோல பொன்னமராவதி பாலமுருகன் கோவில், தேனிமலை சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைபெற்ற கார்த்திகை வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    Next Story
    ×