என் மலர்
நீங்கள் தேடியது "வைபவம்"
- பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
- பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம் ஸ்ரீ அருள் முருகன் திருகோவில் கல்யாண சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அதற்காக பரமத்தி–வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நேற்று மாலை நடந்தது. இதில் ஸ்ரீ அருள் முருகனை கோவிலுக்கு மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
உற்சவர் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருமண விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.
- கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 89 ஆம் ஆண்டு கருட சேவைப் பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து, 24 கருட சேவை விழா நேற்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று காலை நடைபெற்றது.
இதில், வெண்ணாற்றங்க ரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் கோயில் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமிப் பெருமாள், மகர்நோம்பு சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து காலை புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து, அந்தந்த கோவில்களிலிருந்து கொடிமரத்து மூலைக்குச் சென்றடைந்து, பின்னர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் வைபவம் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழா நாளை (ஞாயிற்றுக்கி ழமை) விடையாற்றியுடன் முடிவடைகிறது.
பொன்னமராவதி,
பொன்னமராவதியை அடுத்த கேசராபட்டியில் ராமாயணம் படித்து சாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக மழை வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும்,சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டியும் கிராமத்தின் பல்வேறு நன்மைக்காக திருவிளக்குப்பூஜை நடந்தது. கேசராபட்டி பிடாரியம்மன் கோயிலில் கடந்த 7ம் தேதிமுதல் ஏடுபடித்தல் என்று சொல்லக்கூடிய ராமாயணம் படிக்கப்பட்டு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு வைத்தும், திருவிளக்குப்பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். மேலும் இரவு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கேசராபட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






