என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மற்ற தொகுதி வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மரணம் என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான விஷயம். மரங்களை நடுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர். பல விருதுகளை பெற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து அவரிடம் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் ஒரு காரணம் என்று மக்களிடம் வதந்தி பரவுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுபற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தெளிவுபடுத்தி இருக்கிறார். மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொள்கிறார்கள். 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் எந்தவிதமான பக்க விளைகளும் இல்லை என்பதை பலமுறை விளக்கி கூறியுள்ளோம்.
மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தொடர்பாக ஆய்வு பணியை மேற்கொள்வதில் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆய்வு பணி மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
அப்போது தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறியதுடன், தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுநெறிமுறைகளில் இருந்து தவறக்கூடாது.
தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக இருப்பதால் வரும் காலத்தில் சவால்களை எதிர் கொள்ள முடியும். பொது மக்கள் இன்னும் அலட்சியமாக இருந்தால் அடுத்து வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஏற்கனவே அரசு சார்பில் ரூ.2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ரூ.2½ லட்சம் உதவித்தொகை வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அங்கவி ஆஜரானார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கி ஓராண்டு முடிந்தும் தொற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்டவைகளால் வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்தநிலையில் கோரத்தாண்டவத்தை மீண்டும் தொடங்கியுள்ள கொரோனாவின் இரண்டாவது அலை கொத்து கொத்தாக உயிர்களை பறித்து வருவதோடு, தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிபயங்கரமாக வீசத் தொடங்கியுள்ள கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய பாரம்பரிய மருத்துவம் இது போன்ற தொற்று நோய்களுக்கு கடிவாளம் போட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் கொரோனாவிலிருந்தும், டெங்கு காய்ச்சலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் கபசுர குடிநீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் பொடிகள் சென்னையில் ஆலந்தூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் பழைய பொது மருத்துவமனை செயல்பட்டு வந்த வளாகத்தில் டாம்ப் கால் இரண்டாவது யூனிட் தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்துக் கழகம் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலக பணியாளர்களாக சிறப்பு அலுவலர் டாக்டர் மோகன் உள்ளிட்ட மூன்று பேரும், இது தவிர பொடியாக அரவை செய்தல், பேக்கிங் செய்தல் என 18 பேர் பணிபுரிகின்றனர்.
கபசுர குடிநீர் பொடி தயாரிக்க சுக்கு, கடுக்காய், ஆடாதோடை, சீந்தில், நிலவேம்பு, வட்டத்திருப்பி, சிறு தேக்கு, கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி, சிறுகாஞ்சொறி, அக்கரகாரம், கறிமுள்ளி, திப்பிலி, கிராம்பு மற்றும் கோட்டம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இதே போல் நிலவேம்பு குடிநீர் சூரணம் நிலவேம்பு, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, விலாமிச்சை வேர், சந்தனச் சிராய், பற்பாடகம், வெட்டி வேர், மிளகு மற்றும் சுக்கு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
நாள்தோறும் சுமார் 450 கிலோ பொடி தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணம் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் இயற்கை மருந்துகளும் கையாளப்படுகிறது.
புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் டாம்ப் கால் இரண்டாவது யூனிட் சிறப்பு அலுவலர் டாக்டர். ஆர்.மோகன் கூறுகையில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் மட்டுமின்றி எங்களது நிர்வாக இயக்குநர் கணேஷ் 50 வகையாக நோய்களுக்கு மாத்திரைகளை தயாரிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மற்றும் மாநில மருந்து உரிமம் அதிகாரிகளுக்கு அனுப்பி அனுமதிக்கு காத்திருக்கின்றனர்.
மூட்டுவலி, ஆஸ்துமா, சளி, கொரோனா எதிர்ப்பு, அல்சர், கர்ப்பபை, மகளிர் நோய், தூசி ஒவ்வாமை, தோல், நோய் எதிர்ப்பு, மூலம் சம்மந்தப்பட்ட பிரச்சினை, நீரழிவு நோய், நரம்பு சம்பந் தப்பட்ட நோய் போன்ற வியாதிகளுக்கு மாத்திரைகள் தயாரிக்கப்படவுள்ளது. இதுதவிர இதுபோல் மேலும் பல வியாதிகளுக்கு மருந்துகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
புதுக்கோட்டை திருவப்பூர் கவுராஷ்ட்ரா பெரிய தெருவில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவர் நமணசமுத்திரத்தில் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணவள்ளி. இவர் புதுக்கோட்டை நகராட்சியில் நிதி ஆதார துறையின் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக இவர்களது வீட்டை பூட்டி விட்டு நமணசமுத்திரம் கிராமத்தில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இன்று வீடு திரும்பிய பூரண வள்ளி வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது தனி அறையில் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த 91 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பூர்ண வள்ளி போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
நகராட்சி ஆடிட்டர் வீட்டில் 91 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலையில் திடீரென்று ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் இனியும் உதவுவோம், மறுக்கமாட்டீங்க, வீட்டு வருமானம் நொடமானாலும், நாட்டு வருமானத்துக்கு நாங்க தெடமாயிருக்கிறோம். ஆனால் சனங்க எங்கள தண்ணி போடுற கூட்டமாகவும், உங்கள தண்ணி காட்டுற கூட்டமாகவும் நினைக்கிறார்கள். இப்ப நாங்க எதிர்பார்ப்பது, எங்க அயிட்டத்தையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இலவசமாக தந்தால் எங்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். இப்படிக்கு மதுப்பிரியர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பேனர் அந்த வழியாக செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கென்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 30). இவர் மழையூரில் மளிகை கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் நேற்று முன் தினம் கடைக்கு சென்றவர் வியாபாரத்தை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பினர்.
பின்னர் மனைவி ரெஜினா பேகம் (25) மற்றும் குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். வெளிச்சத்திற்காக அருகில் சிமினி விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது கைபட்டதில் எதிர்பாராத விதமாக சிமினி விளக்கு சரிந்து விழுந்து அதி லிருந்த கொட்டிய மண்எண்ணையால் குபீரென்று தீப்பற்றிக் கொண்டது.
இதில் முதலில் சம்சுதீனின் மனைவி ரெஜினாபேகம் உடையில் தீப்பிடித்து வேக மாக பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர் எழுந்து அலறினார். அவரை காப்பாற்ற போராடிய சம் சுதீனின் உடலிலும் தீயானது பரவியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப் போது இருவரும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். உடனடியாக அவர் களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ரெஜினாபேகம் (25) நேற்று இறந்தார். இன்று காலை சம்சுதீனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்கா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






