என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தகர்கள் சங்கமும், காவல்துறை இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தகர்கள் சங்கமும், காவல்துறை இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமை தாங்கினார். வர்த்தகர் நல சங்க தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வர்த்தகர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், கடைகளின் முன்பு கூட்டமாக கூடக் கூடாது. என அறிவுறுத்தப்பட்டது.
    முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முககவசம் வழங்கினர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முககவசம் வழங்கினர். மேலும் வெளியிடங்களில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர்.
    மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமயம்:

    திருமயம் பஸ் நிலையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்குள்ள மின் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கான மின்மோட்டார் அறை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த அறையின் பூட்டை உடைத்து மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், திருமயம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாட்டரி சீட்டு விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் ஒன்றியம், ஏம்பல் அருகே உள்ள ஆண்டாக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா(வயது 62) என்பவர் மூன்று இலக்க எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை விற்றபோது ஏம்பல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை ஊழியர்களே திருடி அடகு வைத்து பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே தெற்கு 4-ம் வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக மாலையீடு பகுதியை சேர்ந்த உமாசங்கர் (வயது 42), தங்க நகை கடன் பிரிவில் சோலைமணி (37), தனி கடன் பிரிவில் முத்துகுமார் (28) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் தணிக்கை நடைபெறும். அதன்படி கடந்த 21-ந் தேதி அதிகாரிகள் நிறுவனத்தில் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள நகைகளை ஒப்பிட்டு பார்த்தனர். அதில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 305.625 பவுன் நகைகள் குறைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ஆகும்.

    வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைக்கும்போது அவர்களது பெயர், விவரம், முகவரி, நகைகள் விவரத்தை ஒரு பாலிதீன் கவரில் எழுதி, அதனுள் நகைகளை வைத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இதில் தணிக்கையின்போது பாதுகாப்பு பெட்டகத்தில் பாலிதீன் கவர்கள் மட்டும் இருந்துள்ளது. அதனுள் நகைகள் இல்லை. அந்த கவர்கள் பிளேடால் கிழிக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    நகை கடன் பிரிவில் பணியாற்றும் ஊழியரான சோலைமணி மற்றும் ஊழியர் முத்துக்குமார், கிளை மேலாளர் உமாசங்கர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ரமேஷ், கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிளை மேலாளர் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை எடுத்து சென்று புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றதும், அதனை சுழற்சியாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அங்கு, போலியான முகவரிகளில் நகைகளை அடகு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அந்த தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்தும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனையடுத்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முகமது ஜாபர் (கணேஷ்நகர்), குருநாதன் (டவுன்) மற்றும் போலீசார் நேற்று அவர்களை அழைத்து கொண்டு அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அந்த நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்து மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மேற்கண்ட நபர்கள் அடகு வைத்த நகைகளின் விவரத்தை கேட்டனர். போலீசாரின் விசாரணையில் பயந்து அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு நகைகளை எடுத்து காண்பித்தனர்.

    நகைகளை ஒவ்வொரு பொட்டலமாக பார்சலில் வைத்திருந்துள்ளனர். அந்த பொட்டலங்கள் அனைத்தையும் போலீசார் சரிபார்த்து அனைத்து நகைகளையும் மீட்டனர். அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு போலீசார் வெளியே வந்தனர். உமாசங்கருக்கும், நகைகளை அடகு வைத்த நிதி நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்துவுக்கும் பழக்கம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து உமாசங்கர், சோலைமணி, முத்துகுமார், மற்றொரு நிதி நிறுவன மேலாளர் மாரிமுத்து ஆகிய 4 பேரையும் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை ஊழியர்களே திருடி அடகு வைத்து பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
    மணமேல்குடி:

    மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மணமேல்குடி வருவாய் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் அழகன்வயல் கிராம நிர்வாக அலுவலர் விஜயன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத மீன் ஏலக்கடை ஊழியர்கள் 10 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதித்தனர்.
    பொன்னமராவதியில் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது
    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, ரோட்டரி கிளப் ஆப் சென்னை லேக் சிட்டி இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முககவசமின்றி வந்த பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு துணியால் தைக்கப்பட்ட 300 முககவசங்களை இலவமாக வழங்கினர்.
    நகை கையாடல் குறித்த விபரம் அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அந்த நகைகளை மீட்கும் பணியில் நிதி நிறுவன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் எச்.டி.எப். என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

    ஆண்டுதோறும் இந்த நிதி நிறுவனத்தில் தணிக்கை பணி நடத்தப்படுவது வழக் கம். அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட தணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    குறிப்பாக நிதி நிறுவன ஊழியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சோலைமணி (வயது 37), தனி நபர் கடன் பிரிவில் பணியாற்றும் பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூரை சேர்ந்த முத்துக்குமார் (28) மற்றும் கிளை மேலாளர் புதுக்கோட்டை மாலையீடு பகுதியை சேர்ந்த உமா சங்கர் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் அடகு வைத்த 305.625 கிராம் தங்க நகைகளை கையாடல் செய்துள்ளனர்.

    அதன் மதிப்பு ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 750 ஆகும். இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து நிதி நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளர் ராஜேஷ், புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை

    அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவர்கள் கையாடல் செய்த நகைகளை என்ன செய்தார்கள், இதில் மற்ற ஊழியர்கள் யாருக்காவது பங்கு உண்டா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கையாடல் குறித்த விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் அந்த நகைகளை மீட்கும் பணியில் நிதி நிறுவன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கந்தர்வகோட்டையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பகட்டுவான்பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலை பார்ப்பதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வருவாய்த்துறையினர், தொழிலாளர் துறையினர், போலீசார், குழந்தைகள் நலக்குழுமத்தினர் உள்பட அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது 2 குடும்பத்தினர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

    அவர்கள் திருவண்ணமாலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது28)-ஜெயா தம்பதி மற்றும் எல்லப்பன் (31) அவரது மனைவி உமா, அவர்களது குழந்தைகள் 3 பேர் என தெரிய வந்தது. இதில் சுரேஷ், எல்லப்பன் ஆகியோர் தலா ரூ.30 ஆயிரம் முன் பணம் வாங்கி கொண்டு இங்கு வந்து வேலை பார்த்ததும், வேலைக்கு கூலி வழங்காமல் கொத்தடிமைகளாக கொடுமைப்படுத்தி நடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 7 பேரையும் அதிகாரிகள் மீட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து பின் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

    மீட்கப்பட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் விசாரணை நடத்தினார். மேலும் அரசு தேவையான உதவிகளை செய்யும் என அவர் கூறினார். 2 குடும்பத்தினரையும் பத்திரமாக இரவில் தங்க வைத்த பின் இன்று (வியாழக்கிழமை) அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்கிய மேஸ்திரி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    கறம்பக்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
     கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அமிர்தியா சென் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியில் வரும் போது பொதுமக்கள் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.200 அபராதம் விதிப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் தினமும் போலீசார் ஆங்காங்கே நின்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

    அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்ததில் ஒரே நாளில் மட்டும் ரூ.1 லட்சம் வரை வசூலானதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
    அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஊழியர்கள் மீது எச்சிலை துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதேபோல் அரசு மருத்துவமனையில் நேற்று 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறி இருந்தததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    தனக்கு பரிசோதனை முடிவு வரும் முன்னரே ஏன் வார்டில் சேர்த்தீர்கள்? என்று கூறி அந்த வாலிபர் தகராறு செய்தார். மேலும் அவர் மருத்துவமனை பணியாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இரவில் உணவு வழங்கிய போது, உணவு வழங்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை உடைத்ததுடன், எதிரே வந்தவர்கள் மீது எச்சிலை துப்பி உள்ளார்.

    அரசு ஆஸ்பத்திரியில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    இதைத்தொடர்ந்து இரவு பணியில் இருந்த டாக்டர் அவரிடம் பேச முற்பட்ட போது அவரையும் தாக்க முயற்சித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு தனது மனைவியை வரவழைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். மருத்துவமனை ஊழியர்கள் அவருடன் சமரசம் பேச முயன்றும் கண்டுகொள்ளவில்லை.

    மீண்டும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை வழங்க தலைமை மருத்துவர் சேகர் அந்த குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×