என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி | காங்கிரஸ் |
ஆலங்குடி | திமுக |
திருமயம் | திமுக |
புதுக்கோட்டை | திமுக |
விராலிமலை | அதிமுக |
கந்தர்வக்கோட்டை | கடும் போட்டி |
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது33). இவரது கணவர் விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட மகேஸ்வரி சாலையோரம் ஆதரவற்று இருப்பவர்களை மீட்டு பராமரிக்க நேசக்கரம் எனும் காப்பகம் ஒன்றை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார்.
இதில் தற்போது 20-க்கும் மேற்பட்ட வயதானோர் உள்ளனர். காப்பகம் தொடங்கப்பட்ட நேரத்தில் புதுக்கோட்டை காமராஜபுரத்தில் ஒரு வீட்டில் திண்ணையில் ஆதரவற்று கிடந்த மூதாட்டியை மீட்டார். அவரது பெயர் வேதம் ஆகும். வாரிசுகள் எதுவும் கிடையாது. ஆதரவற்று கிடந்த மூதாட்டி வேதத்தை மகேஸ்வரி தனது காப்பகத்தில் பராமரித்து வந்தார். அவரது உறவினர்கள் காமராஜபுரம், கீரனூர் மற்றும் திருப்பூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 95 வயதான வேதத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது உறவினர்களுக்கு காப்பகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வேதம் இறந்தார். இது குறித்தும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை. தூரத்து உறவினர் என்ற பெயரில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு சேலையை மட்டும் எடுத்து கொடுத்து மரியாதை செய்துள்ளனர்.
இறந்த மூதாட்டி வேதத்தின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்வதற்கு ஆள் இல்லாமல் போனதால் மகேஸ்வரி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்தனர். இறந்த மூதாட்டியின் உடலை குளிப்பாட்டி, சேலை, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடலை போஸ் நகரில் உள்ள மின்மயானத்தில் எரிக்க திட்டமிட்டனர். ஆனால் அவருக்கு அடையாள அட்டை இல்லாததால் அங்கு எரிக்க முடியாமல் போனது.

இது குறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது, "மூதாட்டி வேதம் இறந்தது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, கொரோனா அச்சம் காரணமாக வர மறுத்தனர். அதனால் மூதாட்டிக்கு இறுதி சடங்கு மரியாதையை நான் செய்தேன். எனது பராமரிப்பில் அவர் குழந்தை போல இருந்து வந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய நான் இந்த இறுதி சடங்கு காரியத்தை செய்தேன். எனது செயலுக்கு குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர். எனது சேவையை தொடர்ந்து செய்ய பாராட்டினர்" என்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).
இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில் சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் திருடு போயிருந்தது.
கொள்ளையடித்துசென்ற அந்த நபர் லோகப்பிரியாவுக்கு தெரிந்த நபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இந்த கொலை தொடர்பாக உறவினர் ஒருவரிடம் விசாரணையை நடத்தினர். இதற்கிடையில் லோகப்பிரியா வாலிபர் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உடனடியாக அந்த காதலனையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றனர்.






