என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது இந்த ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆலயத்தின் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்தபோது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருமயம் போலீசில் பாதிரியார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கறம்பக்குடி தாலுகாவில் உள்ள கறம்பக்குடி தென்னகர், தட்டாவூரணி, மஞ்சுவிடுதி, திருமணஞ்சேரி, சூரக்காடு, வெட்டன் விடுதி, மழையூர், துவார், கொண்டையம்பட்டி, அம்புக்கோவில், ரெகுநாதபுரம், செங்கமேடு, மருதன் கோன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
சாமந்தி, செண்டி, கோழி கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் அதிகம் சாகுபடி செய்வது வழக்கம். திருவிழா மற்றும் முகூர்த்த காலங்களில் பூக்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்றவகையில் கறம்பக்குடி பகுதியில் பூக்கள் சாகுபடியும் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கோவில்களிலும் பக்தர்கள் அனுமதி இல்லை. இதனால் பூக்களுக்கான தேவை குறைந்து வாங்க ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. அறுவடைக்கு தயாராக உள்ள பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் பூக்கள் செடியிலேயே கருகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கறம்பக்குடியில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், பராமரிப்பு செலவு குறைவு, தண்ணீர் அதிகம் தேவை இல்லைபோன்ற காரணங்களால், பூக்கள் சாகுபடி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பூக்கள் நல்ல விற்பனையாகும் வேளையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்கள் விற்பனை முற்றிலும் நின்றுவிட்டது.
கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்பதால் வியாபாரிகள் பூக்களை வாங்குவதில்லை. இதனால் பூக்களை குப்பையில் வீசி செல்லும் நிலை உள்ளது. எனவே பூக்கள் பறிக்கும் செலவாவது மிச்சமாகும் என்ற நிலையில் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டோம். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயது வாலிபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நுரையீரல் பாதிப்புடன் மூச்சு திணறலும் ஏற்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்கு அங்கே மருத்துவமனைகளில் இடம் கிடைக்காததால் நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுகாதாரத்துறை ஊழியர்கள் இல்லாததால் உறவினர்கள் சடலத்தை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமான குழி தோண்டி அடக்கம் செய்தனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, கொரோனாவால் இறந்தவர் உடலை மருத்துவமனையில் பிளாஸ்டிக் பையில் சுற்றி தொற்று பரவாமல் இருக்க சுகாதார ஊழியர்களே அடக்கம் செய்வார்கள். தற்போது நாங்கள் கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. தி.மு.க. அமோக வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்தநிலையில் அ.தி.மு.க.வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டும் என புதுக்கோட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஜெயலலிதா, சசிகலா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:- கழகத்தை காத்திட வாரீர்! வாரீர்!! புரட்சி தலைவர் உருவாக்கிய புரட்சி தலைவி அம்மா கட்டிக்காத்த கழகத்தை காத்திட தியாக தலைவி சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்... அ.தி.மு.க. தொண்டர்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டிகள் புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஒதுங்கி உள்ளார். இந்தநிலையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
| கந்தர்வக்கோட்டை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சின்னத்துரை | சிபிஐ எம் | 69710 | |||
| ஜெயபாரதி உதயக்குமார் | அதிமுக | 56989 | |||
| லெனின் பழனியாண்டி | அ.ம.மு.க. | 12840 | |||
| ரமீலா மோகன்ராஜ் | நாம் தமிழர் | 12661 | |||
| விராலிமலை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| டாக்டர்.விஜயபாஸ்கர் | அதிமுக | 102179 | |||
| பழனியப்பன் | திமுக | 78581 | |||
| கார்த்திக் பிரபாகரன் | அ.ம.மு.க. | 1228 | |||
| சரவணன் | ம.நீ.ம | 559 | |||
| அழகுமீனா | நாம் தமிழர் | 7035 | |||
| புதுக்கோட்டை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| டாக்டர் முத்துராஜா | திமுக | 85802 | |||
| கார்த்திக் தொண்டைமான் | அதிமுக | 72801 | |||
| சுப்பிரமணியன் | தேமுதிக | 1873 | |||
| மூர்த்தி | ம.நீ.ம | 3948 | |||
| சசிக்குமார் | நாம் தமிழர் | 11503 | |||
| திருமயம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ரகுபதி | திமுக | 71349 | |||
| பி.கே.வைரமுத்து | அதிமுக | 69967 | |||
| முனிராஜ் | அ.ம.மு.க. | 1503 | |||
| திருமேனி | ம.நீ.ம | 1356 | |||
| சிவராமன் | நாம் தமிழர் | 11061 | |||
| ஆலங்குடி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சிவ.வீ.மெய்யநாதன் | திமுக | 87935 | |||
| தர்ம.தங்கவேல் | அதிமுக | 62088 | |||
| விடங்கர் | அ.ம.மு.க. | 2924 | |||
| வைரவன் | ம.நீ.ம | 1230 | |||
| திருச்செல்வம் | நாம் தமிழர் | 15477 | |||
| அறந்தாங்கி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ராமச்சந்திரன் | காங்கிரஸ் | 81835 | |||
| ராஜநாயகம் | அதிமுக | 50942 | |||
| சிவசண்முகம் | அ.ம.மு.க. | 4699 | |||
| சேக் முகமது | தமஜக | 966 | |||
| ஹூமாயுன்கபிர் | நாம் தமிழர் | 18460 | |||






