search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - புதிதாக 182 பேர் பாதிப்பு

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். புதிதாக 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 111 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்தவகையில் மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால், இறப்பு எண்ணிக்கை 166 ஆக அதிகரித்தது.

    அரிமளம் ஒன்றியம் ராயவரம் கிராமத்தை சேர்ந்த 37 வயது பெண், கடியாபட்டி அருகே உள்ள காணத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண், பனங்குடி கிராமத்தை சேர்ந்த 38 வயது ஆண், கடியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த 55 வயது ஆண், அதே கிராமத்தை சேர்ந்த 41 வயது ஆண், மேல்நிலை வயல் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்த 37 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பழனியப்பா நகரை சேர்ந்த 40 வயது ஆண், திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த 44 வயது ஆண், சண்முகா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆகிய 3 பேருக்கு கொேரானா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×