என் மலர்
புதுக்கோட்டை
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு, குலமங்கலம், பனங்குளம், பெரியாளூர், நெய்வத்தளி, மழையூர், சம்பட்டிவிடுதி, திருவரங்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் வரை மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, அரளி, பிச்சி, செண்டி உள்ளிட்ட பல்வேறு மலர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் மிகப்பெரிய கமிஷன் கடைகளைக் கொண்ட கீரமங்கலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.
இதனை புதுக்கோட்டை, தஞ்சை திருச்சி, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கால் பூக்களின் விலை மிகவும் குறைந்து, ஒரு கிலோ ரூ.5 வரை குறைவாக விற்பனை ஆனது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகூட கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும் பூக்கள் விற்பனை ஆகாமல் ஒரு நாளைக்கு சுமார் 3 டன் வரை குப்பையில் கொட்டி வந்தனர்.
இந்த நிலையில், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து, உயிர் பலிகளும் அதிகரித்துள்ளதால் கடந்த 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அனைத்து பூ கமிஷன் கடைகளையும் மூட கமிஷன் கடை உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவெடுத்து கடைகளை அடைத்தனர்.
இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில், இந்த கமிஷன் கடை அடைப்பால் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டன்கள் வரை பூக்கள் செடியிலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடமாக கஜா புயல் தொடங்கி கொரோனா என தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால், அரசு உரிய இழப்பூடு வழங்கினால் விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.
ஆலங்குடி:
கொரோனாவின் 2-வது அலை பரவலால் தமிழகம் தத்தளித்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்தைப் போக்க தமிழகத்தில் பல்வேறு முன்னேற்பாடு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாடல்கள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிகழ்த்தி காட்டப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கண்ணீர் அஞ்சலி பேனர் அச்சடிக்கப்பட்டு, உங்கள் படம் இதில் இடம் பெறாமல் இருக்க, உங்கள் பெயர் வராமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைபிடிப்போம், இப்படிக்கு, கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள்- கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்.
அலட்சியம் வேண்டாம், அவஸ்தையும் வேண்டாம், பாதுகாப்புடன் இருங்கள். என்றும் கொரோனா விழிப்புணர்வு பணியில் ராயல் பிளக்ஸ் ஆலங்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் இரண்டாவது அலையில் சிக்கி விடக்கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது பரவலால் பெரும் தொற்று ஏற்பட்டு நகரில் பேரூராட்சி முழுவதும் பலத்த பாதுகாப்புடன் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது பேரூராட்சி வருவாய்த்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் இப்போராட்டக் களத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த பிளக்ஸ் பேனர் அனைவராலும் வர வேற்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரே நாளில் 342 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் 1,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 171 ஆக உள்ளது.
அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 40 வயது ஆண், புதுநிலைபட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, 34 வயது பெண், சமுத்திராப்பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது ஆண், நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண், 36 வயது பெண், கீழாநிலை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 84 வயது ஆண், 55 வயது பெண், 44 வயது ஆண், கல்லூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது ஆண், 45 வயது ஆண், 39 வயது ஆண் 19 வயது ஆண், வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது ஆண், சிங்காத்தகுறிச்சி கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண், ஆகிய 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட சம்பட்டிவிடுதியைச் சேர்ந்த 24 வயது ஆண் மற்றும் 8 வயது சிறுவன், சோத்துப்பாளையைச் சேர்ந்த 50 வயது ஆண், குப்பையன்பட்டியைச் சேர்ந்த 27 வயது பெண், புத்தாம்பூரைச் சேர்ந்த 30 வயது ஆண், முள்ளூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் மற்றும் 54 வயது பெண், திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த 45 வயது ஆண், ராசாபட்டியைச் சேர்ந்த 35 வயது ஆண், ராஜாராணி நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர், பாரிநகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளிலும் தனிமைபடுத்திக்கொண்டுள்ளனர்.






