search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 342 பேருக்கு கொரோனா தொற்று

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 342 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,731 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஒரே நாளில் 342 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுடன் 1,731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 171 ஆக உள்ளது.

    அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 46 வயது ஆண், ராயவரம் கிராமத்தை சேர்ந்த 40 வயது ஆண், புதுநிலைபட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, 34 வயது பெண், சமுத்திராப்பட்டி கிராமத்தை சேர்ந்த 32 வயது ஆண், நாட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண், 36 வயது பெண், கீழாநிலை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன், அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 84 வயது ஆண், 55 வயது பெண், 44 வயது ஆண், கல்லூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது ஆண், 45 வயது ஆண், 39 வயது ஆண் 19 வயது ஆண், வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயது ஆண், சிங்காத்தகுறிச்சி கிராமத்தை சேர்ந்த 24 வயது பெண், ஆகிய 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட சம்பட்டிவிடுதியைச் சேர்ந்த 24 வயது ஆண் மற்றும் 8 வயது சிறுவன், சோத்துப்பாளையைச் சேர்ந்த 50 வயது ஆண், குப்பையன்பட்டியைச் சேர்ந்த 27 வயது பெண், புத்தாம்பூரைச் சேர்ந்த 30 வயது ஆண், முள்ளூரைச் சேர்ந்த 62 வயது முதியவர் மற்றும் 54 வயது பெண், திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த 45 வயது ஆண், ராசாபட்டியைச் சேர்ந்த 35 வயது ஆண், ராஜாராணி நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர், பாரிநகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளிலும் தனிமைபடுத்திக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×