என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு உதவும் வகையில் 3 பேரை நியமனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் வை. முத்துராஜா 3 பேரை நியமனம் செய்துள்ளார். அந்த நபர்களின் பெயர்களும் அவர்களது கைபேசி எண்களின் வருமாறு: முத்துகுமார் 9597693317, பால்ராஜ் 8760313860, பாண்டியன் 8508332730
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. முத்துராஜா கூறுகையில், மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் 3 பேரை நியமனம் செய்துள்ளேன்.
எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ உதவிகளைப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் வை. முத்துராஜா 3 பேரை நியமனம் செய்துள்ளார். அந்த நபர்களின் பெயர்களும் அவர்களது கைபேசி எண்களின் வருமாறு: முத்துகுமார் 9597693317, பால்ராஜ் 8760313860, பாண்டியன் 8508332730
இதுதொடர்பாக எம்.எல்.ஏ. முத்துராஜா கூறுகையில், மருத்துவமனை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் 3 பேரை நியமனம் செய்துள்ளேன்.
எனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ உதவிகளைப் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை சட்டத்துறை ரகுபதி தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
முகாமில் கலெக்டர் உமா மகேஸ்வரி, முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் நகராட்சியில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை சட்டத்துறை ரகுபதி தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
முகாமில் கலெக்டர் உமா மகேஸ்வரி, முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் நகராட்சியில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தாக்கமும் ஆங்காங்கே இருந்து வருகிறது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தாக்கமும் ஆங்காங்கே இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் 2 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறி இருந்தது. இந்த நிலையில் ஆலங்குடி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் அறிகுறி இருந்துள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, கல்லாலங்குடி திருப்பதி நகரை சேர்ந்த யோகேஷ்வரன் (வயது 24) என்பவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்து இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆவுடையார்கோவில் அருகே இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் மெய்யர் (வயது 75). நேற்று வயது முதிர்வு காரணமாக இறந்த இவரது உடலை அடக்கம் செய்வதற்காக வீரமங்கலம் கிராமம் வழியாக எடுத்து சென்றனர்.
அப்போது, கிராமத்திற்குள் பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று வீரமங்கலம் பகுதி மக்கள் வழிமறித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ்நகர் பகுதி மக்கள் நடுரோட்டில் பிணத்தை இறக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காமராஜ் நகரிலிருந்து வீரமங்கலம் கிராமத்துக்குள் செல்லாமல் ஆற்று பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்ல வேறு வழி இருக்கிறது. அந்த வழியாகத்தான் சடலத்தை முன்பு கொண்டு சென்றார்கள். சமீபகாலமாகத்தான் இந்த வழியாக கொண்டு செல்கிறார்கள் என வீரமங்கலம் கிராமமக்கள் கூறினர். அதற்கு காமராஜ் நகரமக்கள் இந்த சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே, இந்தவழியாக பிணத்தை கொண்டுசென்றால் என்ன என்று கேட்டனர். இதனால் 2 தரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடைஇடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மெய்யரின் உடல் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.
வடகாடு அருகே மணல் திருட்டை தடுக்க ஆற்றின் கரையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குழி தோண்டப்பட்டுள்ளன.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள கருக்காகுறிச்சி மற்றும் கறம்பக்குடி எல்லை பகுதியில் செல்லும் அக்னி ஆற்றுப்பகுதியில் இருந்து மணலை அள்ளி செல்ல ஏதுவாக, குவியல், குவியலாக வைத்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, வடகாடு இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் உதவியுடன் அள்ளி ஆற்றுப்பகுதியில் நிரப்பினர்.
பின்னர் மணல் கடத்தல் லாரிகள் ஆற்றுக்குள் நுழையாத வகையில் ஆற்றங்கரையோரங்களில் பொக்லைன் எந்திர உதவியுடன் ஆழமாக குழி தோண்டியுள்ளனர். இதன் மூலம் ஆற்றுக்குள் மணல் லாரிகள் செல்வது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்..
ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பூச்செடிகளை விவசாயிகள் வெட்டி விட்டு்ள்ளனர்.
வடகாடு:
வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, குளமங்கலம், மரமடக்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான், சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா, அரளி, பிச்சி, சென்டி, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். ஒருசில விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள மல்லிகை, முல்லை, பிச்சி, சம்பங்கி போன்ற பூச்செடிகளை கவாத்து செய்தும், வெட்டி விட்டு வருகின்றனர்.
ஒருசிலர் பூக்களை பறிக்க ஆட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாமல் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். பூக்கள் செடிகளிலேயே பூத்து குலுங்கி வீணாகியும் வருகிறது. மேலும் வெட்டி விடப்பட்ட பூச்செடிகள் மீண்டும் தளிர்விட்டு அடுத்த பருவத்தில் பூக்க தொடங்கும். இந்த பருவத்தில் பூக்கள் அதிக அளவில் பூத்தும் ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது, பலத்த காற்று வீசியதால் ஆலங்குடியில் வாழைகள் சேதமடைந்தன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அப்போது, சூறைக்காற்று வீசியது. அடிக்கடி மின்னலடித்தது. இந்த கோடை மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ஆலங்குடி அருகே பாப்பன்பட்டி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் வாழைகள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் பல வாழைகள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டையில் உசிலங்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-23, பெருங்களூர்-59, புதுக்கோட்டை-26.50, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-16.10, கறம்பக்குடி-4, மழையூர்-24.60, கீழணை-60, திருமயம்-5.40, அரிமளம்-1.80, அறந்தாங்கி-17, ஆயிங்குடி-12.20, ஆவுடையார்கோவில்-1, மணமேல்குடி-2.20, உடையாளிப்பட்டி-3, பொன்னமராவதி-13.20.
புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகம் இல்லை. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருமேகங்கள் மட்டும் திரண்டு இருந்தன.
இதேபோல் திருவரங்குளம் அருகே உள்ள மாஞ்சன் விடுதி ஊராட்சி பாப்பன்பட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் மழைபெய்ததில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சுமார் ரூ.3 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாய சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து வருகிறது.
ஆதனக்கோட்டை:
தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் அதிகளவு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரை நம்பியே அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த சம்பா பருவத்தில் 80 ஆயிரத்து 791 எக்டேர் அளவில் விவசாயிகள் சம்பா நெல்சாகுபடி செய்திருந்தனர். அறுவடை நேரத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமானது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது.
வழக்கமா கோடை காலத்தில் விவசாயிகள் அதிக அளவில் நெல்சாகுபடி செய்வார்கள். ஆனால் தற்போது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடிடைய குறைத்துக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பாவைவிட மிக குறைவாக 4 ஆயிரத்து 457 எக்டேர் அளவிற்கு மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ளனர்.
இதில் புதுக்கோட்டை வட்டாரத்தில் மட்டும் சம்பா சாகுபடியை 2,972 எக்டேர் அளவிற்கு செய்த விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியை சுமார் 100 எக்டேராக குறைத்துள்ளனர். சம்பா சாகுபடியில் மழையினால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியாவது ஏமாற்றத்தை அளிக்காமல் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் கடலை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குறைந்த அளவிலான தண்ணீரை மட்டுமே இறைத்து வருகிறது. இதனால் அனைத்து விவசாய நிலங்களிலும் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி வருகிறது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவுக்கு இப்பகுதிகளில் உள்ள தைலமரக்காடுகளும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தைல மரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வாழ்வதால் இப்பகுதிகளில் ஆண்டு தோறும் மழைப்பொழிவும் சராசரியாக குறைந்து வருகிறது. மேலும் ஒருசில நேரங்களில் இப்பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களுக்கு செல்ல முடியாமல் வீணாகி வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமின்றி தைலமரங்களையும் அழித்து விட்டு பலன் தரும் மரங்களை நட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகாடு அருகே தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகேயுள்ள கருக்காகுறிச்சி பகுதியில் எரி சாராயம் விற்பனை நடைபெறுவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருக்காகுறிச்சி தெற்கு தெரு காத்தாயி அம்மன் கோவில் அருகே 2 லிட்டர் எரிசாராயத்தை தண்ணீர் பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசலில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரூள்மொழி அரசு உத்தரவின்பேரில், கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசின் ஊரடங்கை பொதுமக்கள் கடைப் பிடிக்கின்றார்கள் என்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிந்தனர். இந்நிலையில், நேற்று அன்னவாசல் பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றித்திரிந்த 50 இருசக்கர வாகனங்களை அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னவாசலில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து வாகன நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுபாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மது பாட்டில் கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு 2 மடங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல விராலிமலை தாலுகா பேராம்பூர் டாஸ்மாக் கடையின் பின்புறம் அப்பகுதியை சேர்ந்த 2 பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடையின் பின்புறம் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்த பேராம்பூர் முத்துக்கருப்பன் (வயது 47), இலுப்பூர் தாலுகா பின்னங்குடிப்பட்டி ராமசாமி (52) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






