search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

    மதுபாட்டில்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசு டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மது பாட்டில் கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். இதை பயன்படுத்தி பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு 2 மடங்கு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல விராலிமலை தாலுகா பேராம்பூர் டாஸ்மாக் கடையின் பின்புறம் அப்பகுதியை சேர்ந்த 2 பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடையின் பின்புறம் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்த பேராம்பூர் முத்துக்கருப்பன் (வயது 47), இலுப்பூர் தாலுகா பின்னங்குடிப்பட்டி ராமசாமி (52) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×