என் மலர்
செய்திகள்

ஆலங்குடி அருகே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வு
ஆலங்குடி:
கொரோனாவின் 2-வது அலை பரவலால் தமிழகம் தத்தளித்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்தைப் போக்க தமிழகத்தில் பல்வேறு முன்னேற்பாடு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பாடல்கள் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிகழ்த்தி காட்டப்படுகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கண்ணீர் அஞ்சலி பேனர் அச்சடிக்கப்பட்டு, உங்கள் படம் இதில் இடம் பெறாமல் இருக்க, உங்கள் பெயர் வராமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைபிடிப்போம், இப்படிக்கு, கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள்- கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்.
அலட்சியம் வேண்டாம், அவஸ்தையும் வேண்டாம், பாதுகாப்புடன் இருங்கள். என்றும் கொரோனா விழிப்புணர்வு பணியில் ராயல் பிளக்ஸ் ஆலங்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மீண்டும் இரண்டாவது அலையில் சிக்கி விடக்கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது பரவலால் பெரும் தொற்று ஏற்பட்டு நகரில் பேரூராட்சி முழுவதும் பலத்த பாதுகாப்புடன் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது பேரூராட்சி வருவாய்த்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் என அனைவரும் இப்போராட்டக் களத்தில் மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த பிளக்ஸ் பேனர் அனைவராலும் வர வேற்கப்பட்டுள்ளது.






