என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் நகரில் 4 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
    X
    பெரியார் நகரில் 4 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - புதிதாக 234 பேருக்கு தொற்று

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். புதிதாக 234 பேருக்கு தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 234 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 227 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 444 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 242 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்த 68 வயது முதியவர், 49 வயது ஆண் ஒருவர் திருச்சியில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேரும் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 4 பேர் மற்றும் அதற்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டு பகுதிகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று புதுக்கோட்டை பெரியார் நகரில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இதேபோல காமராஜபுரம், மேல 2-ம் வீதி உள்பட 6 இடங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்தந்த பகுதிகளில் பிளிச்சீங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளித்தனர்.

    அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பெண்கள், 6 ஆண்கள் அடங்குவர்.கல்லூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    Next Story
    ×