என் மலர்
நீங்கள் தேடியது "Christian church"
சிவகிரி:
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது. 75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி மெக்சிகோ நாட்டில் குவாடலூபே இடத்தில் உள்ள மரிய அன்னையின் புனித அங்கி இங்கு கொண்டுவரப்பட்டு அதை பக்தர்களுக்கு போர்த்தி ஆசி வழங்கினர். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மாதாவின் முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இதை பார்த்தவர்கள் மாதாவின் முகத்தை துணியால் துடைத்துவிட்டனர். ஆனால் வியர்வை வடிவது நிற்கவில்லை. தொடர்ந்து வந்து கொண்டு இருந்ததால், அது கீழே விழாமல் இருக்க சில்வர் கிண்ணம் ஒன்றை மாதாவின் கழுத்து பகுதியில் வைத்தனர். தொடர்ந்து கண்ணில் இருந்து வியர்வை வந்து கொண்டு இருந்தது.
இது பற்றி தகவலறிந்த சபையில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் சுற்று பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் இந்த அதிசயத்தை பார்த்து வியப்பு அடைந்தனர். சிலர் அந்த புனித நீரினை நெற்றியில் பூசி வருகின்றனர். #church #matha
புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016- 17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களை இந்த திட்டங்களின் கீழ் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு வருகிற 25&ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான தேவாலயங்களுக்கு ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சமும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசின் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. கலெக்டர் தலைமையிலான குழு சார்பில் விண்ணப்பங்கள் அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
எனவே தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் எகிப்து நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் அவரவர்களின் தெய்வங்களை வணங்கும் வழிபாட்டு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் ‘காப்டிக்’ கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோ அருகே உள்ள புறநகர் பகுதியான மோஸ்ட்டோரோட் என்னும் இடத்தில் இருக்கும் கன்னி மேரி தேவாலயத்தில் நேற்று ஆண்டுவிழாவையொட்டி, வழிபாடு செய்வதற்காக பலர் சென்று கொண்டிருந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் மிகபெரிய கிறிஸ்தவ சமுதாயமாக வாழும் காப்டிக் கிறிஸ்தவர்களை குறிவைத்து எகிப்து நாட்டில் அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இங்குள்ள இரு காப்டிக் தேவாலயங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 45 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Egyptsuicidebombing #Egyptchurch #suicidebombing
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாவ மன்னிப்பு அறிக்கை செய்வதற்காக சென்றார். திருமணத்திற்கு முன்பு தன்னை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அது பற்றி தனது கணவருக்கு தெரியாது என்று கூறி அவர் அங்குள்ள பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டார்.
அந்த பாதிரியார் இந்த விஷயத்தை பெண்ணின் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோவாக எடுத்து மேலும் 4 பாதிரியார்களுக்கு அவர் அனுப்பியதால் அந்த பாதிரியார்களும் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கினர்.
தனது மனைவிக்கு நடந்த இந்த கொடுமையை அறிந்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆலய நிர்வாகிகளிடம் அவர் புகார் செய்ததால் 5 பாதிரியார்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பாதிரியார் ஒருவர் தன்மீதான புகாரை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அவர் நான் கல்லூரியில் படிக்கும் போது என்னுடன் படித்தவர் என்ற முறையில் எனக்கு அவரை தெரியும். நான் பணிபுரியும் ஆலயத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வருகிறது. இதில் எதிர்தரப்பினர் என்மீது பாலியல் குற்றம் சுமத்தி என்னை மிரட்டுகிறார்கள். நான் அந்த பெண்ணை எனது செல்போனில் ஆபாச படம் எடுத்திருந்தால் எனது செல்போனை சோதனை செய்து அதை கண்டுபிடிக்கலாம் என்றார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும்போது நான் யாரையும் மிரட்டுவதற்காக புகார் செய்யவில்லை. எனது மனைவிக்கு நடந்த கொடுமை தெரியவந்ததும், நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே புகார் செய்தேன். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் இதில் உண்மை தெரியவரும். #tamilnews
கேரள மாநிலம் கோட்டயத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்.
திருவல்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்தார். தான் இப்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் வசித்து வருவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த பாவ அறிக்கையை ரகசியமாக வைக்க வேண்டிய அந்த பாதிரியார் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அவர் மேலும் 4 பாதிரியார்களிடம் கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சியையும் ரகசியமாக படம்பிடித்து அதையும் மற்ற பாதிரியார்களுக்கு அனுப்பினார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
பாதிரியார்கள் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரிடம் தனது மனைவிக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி புகார் செய்தார்.
மேலும் இதுபற்றிய விவரங்களை ஆடியோவாக பதிவு செய்த கணவர் அதை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார். உருக்கமாக பேசியிருந்த அவரது ஆடியோ பலருக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆலய நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து 5 பாதிரியார்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.
அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்து உள்ளது. #KeralaPriests