என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து167 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 283 ஆக அதிகரித்து. கொரோனாவுக்கு தற்போது 724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

    அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல, ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
    Next Story
    ×