என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி அருகே மதுப்பிரியர்கள் வைத்துள்ள வித்தியாசமான பிளக்ஸ் பேனரை படத்தில் காணலாம்.
    X
    ஆலங்குடி அருகே மதுப்பிரியர்கள் வைத்துள்ள வித்தியாசமான பிளக்ஸ் பேனரை படத்தில் காணலாம்.

    ஆட்சியை பிடிக்கும் கட்சி வாரம் 2 நாட்கள் இலவச மது தரவேண்டும்- மதுப்பிரியர்கள் வைத்த நூதன பிளக்ஸ் பேனர்

    கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை மதுவால் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைத்த ஆண்டு வருமானம் புள்ளி விபரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இருந்து மேற்பனைக்காடு செல்லும் சாலையில் திடீரென்று ஒரு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த பேனரில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் ஊக்கமுடன், ஊட்டமுடன் நடந்து முடிஞ்சுடுச்சு. மதம் சேர்ந்த கூட்டணியோ, சேராத கூட்டணியோ. ஆட்சிய புடிச்சு, காட்சி தரப்போறீங்க தப்பில்ல. இதற்கு முன்பு நீங்கள் தந்த நல்லாட்சிக்கு நாங்களும் நல்லாவே உதவி இருக்கிறோம் என்றும், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரை மதுவால் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைத்த ஆண்டு வருமானம் புள்ளி விபரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இனியும் உதவுவோம், மறுக்கமாட்டீங்க, வீட்டு வருமானம் நொடமானாலும், நாட்டு வருமானத்துக்கு நாங்க தெடமாயிருக்கிறோம். ஆனால் சனங்க எங்கள தண்ணி போடுற கூட்டமாகவும், உங்கள தண்ணி காட்டுற கூட்டமாகவும் நினைக்கிறார்கள். இப்ப நாங்க எதிர்பார்ப்பது, எங்க அயிட்டத்தையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இலவசமாக தந்தால் எங்களுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். இப்படிக்கு மதுப்பிரியர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த பேனர் அந்த வழியாக செல்லும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    Next Story
    ×