என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    மாத்தூர் போலீசார் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு முககவசம்

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    ஆவூர்:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் பொது இடங்களிலும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் போது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறி வருகின்றனர். மேலும் முககவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் முக கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டி செல்லும் நபர்களிடம் இருந்து போலீசார் அபராதம் விதித்து வருவதுடன் அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரைகளை கூறி அனுப்பி வருகின்றனர்.

    அதேபோல மாத்தூரில் நேற்று மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் அவ்வழியே முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர். மேலும் அவர்களுக்கு முககவசம் அணிந்து செல்வதன் அவசியம் பற்றிய அறிவுரைகளை கூறினர்.
    Next Story
    ×