என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கூகனூரில் 51 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா கூகனூர் கிராமத்தில் ஆண்டுதோறும்மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 51 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும், ஆறு பல் மாடு பிரிவில் 21ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு உரிமையாளர்களுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கூகனூர் கிராமத்தார்கள் விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடுவதற்காக புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின்பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளை அழைத்து வரப்பட்டி ருந்தன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சு விரட்டினை காண்பதற்காக பொன்ன மராவதி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன் காரணமாக கூட்டத்தில் நின்று மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்ணணூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவகுமார் (வயது 25) காளை முட்டி சம்பவ இடத்தில் பலியானார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பெண் உட்பட இருவர் படுகாயம்

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 13). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் நெருங்கிய உறவினர் ஆறுமுகம் இறந்த துக்கத்திற்கு குடும்பத்தோடு வந்து உள் ளார்.இந்நிலையில் கல்லாலங் குடி இந்திரா நகரை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர்கள் ஜான்சி (21), லெனின் (24). துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு பாலசுப்ரமணியன் ஜான்சி வீட்டிற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்குள்ள சுவிட்சை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின் சாரம் அவரது உடலில் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த ஜான்சி மற்றும் லெனின் ஆகிய இருவரும் அவரை மீட்க முயன்றுள்ளனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் 3 பேரும் மயங்கினர்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த மின் இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரி–வில் சேர்த்தனர். ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலசுப்பிரமணியம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.காயம் அடைந்த இருவ–ரையும் போலீசார் புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியும், இறந்த பாலசுப்ரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ ருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ் பெக்டர் அழகம்மை விசாரணை நடத்தி வருகிறார்.

    அடுத்தடுத்த புகாரால் பரபரப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் போலீஸ் நண்பர்கள் குழு–வில் புதுக்கோட்டை மச்சு–வாடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்பவர் சேர்ந்துள்ளார். இவர் போலீஸ் நிலையத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்களிலும் முக்கிய நபராக இருந்து தன்னை முன்னிலைப்படுத்தி காண் பித்துள்ளார்.இந்நிலையில் அவர் அணிந்து வரும் ஆடையில் கூட போலீஸ் என அச்சி–டப்பட்டு இருக்கும். இத–னால் இவன் காந்திநகர் 5-ம் வீதியில் வசிக்கும் திருமூர்த்தி என்பவரிடம் தான் உங்கள் மகனுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறேன் என்றும், வேலைக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூ.7 லட்சம் வேண்டும் என கேட்டு கடந்த 28.9.22 அன்று வாங்கியுள்ளார்.மேலும் தற்போது கணேஷ்நகர் காவல் நிலை–யத்தில் போலீஸ் இன் பார்மாராக உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே கார்த்திக் மீது திருமூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவ–ரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க சென்றபோது கார்த்திக் வீடு பூட்டி கிடந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந் திதா பாண்டேவிடம் புகார் மனு அளித்தார.இதற்கிடையே நேற்று புதுக்கோட்டை டிரைவர் காலனியை சேர்ந்த சிவ–யோகம் என்பவர் முருகன் மகன் கார்த்திக் மற்றும் முருகன் மனைவி கார்த்திக், தாய் கமலி ஆகியோர் மீது ஒரு புகார் மனுவை காவல் சூப்பிரண்டிடம் கொடுத் துள்ளார். அதில் கார்த்திக் தனக்கு போலீஸ் வேலை கிடைக்க இருப்பதால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூ.1.20 லட்சத்தை வாங்கியுள்ளார்.அவரது அம்மா கமலி அப்பகுதியில் நடத்தி வந்த குழுவில் ரூ.5 லட்சம் வாங்கி விட்டு அதை திருப்பி கொடுக்கவில்லை என புகார் செய்திருந்தனர். சிவயோகத்துடன் குழுவில் இருக்கும் ராஜலெட்சுமி, ஆமினா, அஸ்மா, ஜோஸ்மின் ராணி, சாந்தி, மாதவி ஆகி–யோரும் போலீஸ் சூப்பி–ரண்டிடம் மனு கொடுக்க வந்திருந்தனர்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்ப–தாக மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு தெரிவித்துள்ளார். இந்த மோசடி சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

    கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு பரபரப்பு

    ஆலங்குடி

    கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பாக 4 பெண்கள் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கட்டுமாவடிப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா (வயது 25) என்பவருக்கு, நரியங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது 25) என்ற ஆன்லைன் பார்சல் டெலிவரி செய்பவருடன் கார்த்திகாவிற்கு கள்ள த்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக, பரமேஸ்வரன் மற்றும் கார்த்திகா சென்னையில் வசித்து வந்துள்ளனர்.

    கார்த்திகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன விவகாரம் தெரிய வந்த சூழலில் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் பரமே ஸ்வரனை கார்த்திகாவிடம் இருந்து பிரிந்து விட்டதாகத் கூறப்படுகிறது.இது தொடர்பாக கார்த்திகா கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தி ருந்தார். இது தொடர்பாக பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்த போலீசார் கார்த்திகா தரப்பினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.இந்த பேச்சுவார்த்தை யின் போது பரமேஸ்வரன் கார்த்திகாவோடு செல்வ தாக போலீசாரிடம் கூறிய தை கேட்ட பரமேஸ்வரனின் தாய் மற்றும் அவரது மூன்று சகோதரிகள், காவல் நிலையத்தின் வெளியே நிறுத்தி வைத்திருந்த தங்களது இரு சக்கர வாகனத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்த பூச்சி மருந்து பாட்டிலை தட்டி விட்டதோடு அவர்களை உடனடியாக மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதை தடுக்கச் சென்ற கீரமங்கலம் காவல் நிலையப் பெண் காவலர் வினிதா என்ப வரின் கண்ணிலும் பூச்சி மருந்து ஊற்றிய தில் அவரும் சிகிச்சைக்காக மருத்து வமனை சென்றுள்ளார்.இந்த சம்பவத்தின் காரணமாக பட்டு க்கோட்டை அறந்தாங்கி நெடுஞ்சாலையில் உள்ள கீரமங்கலம் காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர் போராட்டம் எதிரொலி....

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் உணவு தரமில்லை எனவும், அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கூறி விடுதியில் தங்கி படிக்கும் மன்னர் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் சாப்பாடு தட்டுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர். இந்த நிலையில் விடுதி காப்பாளர்கள் கோபால்சாமி, சோனைமுத்து மற்றும் சமையலர் சக்திவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி 3 பேரும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற போது கைகலப்பு

    புதுக்கோட்டை விராலிமலை தாலுகா கல்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சித்திரை கண்ணன் மகன் தீபன்சக்கரவர்த்தி (வயது 23). இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந்ேததி அன்று கல்குடியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக இவரது வீட்டின் வழியாக எடுத்துச் சென்றனர். இறந்தவரின் உறவினர்கள் தீபன் சக்கரவர்த்தி வீட்டின் அருகே உள்ள மரத்தில் வெடி வைக்க வந்தனர். அப்போது தீபன் சக்கரவர்த்தி, குழந்தை தொட்டிலில் தூங்குகிறது எனவே வெடி வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர், சரத்குமார், சத்தியமூர்த்தி, சரண்ராஜ், பாண்டி, சண்முகம் ஆகிய 6 பேரும், தீபன் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கல்லால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அருகிலிருந்த தண்ணீர் தொட்டியையும் அந்த 6 பேரும் அடித்து உடைத்துள்ளனர். அதில் தீபன் சக்கரவர்த்தி, மற்றும் மகாதேவன் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தீபன் சக்கரவர்த்தி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், பாண்டி, சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • புதுக்கோட்டை அருகே விசாரணைக்கு சென்ற மனைவியை காவல்நிலையத்தில் சரமாரியாக கணவர் தாக்கினார்
    • வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக கல்பனா தந்தை வீட்டில் வசித்து வருகிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணாநகர் பகுதியில் சேர்ந்தவர் கல்பனா (வயது 24). இ வரது கணவர் தியாகராஜன் (29). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு கல்பனா, கணவனிடமிருந்து விவகாரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனிடையே வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக கல்பனா தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் மீது திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலையத்தில் கல்பனா புகார் செய்தார். புகார் சம்பந்தமாக கல்பனா மற்றும் தியாகராஜனை போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கல்பனா எனது கொருட்களை திருப்பித் தரும்படி தியாகராஜனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் முன்னிலையில் வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன் தகார வார்த்தையால் பேசி கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்பனா திருமணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் தியாகராஜன் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவ செய்து தியாகராஜன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்து நீதிமன்ற பிணையில் விடுவித்துள்ளனர். காவல் நிலையத்தில் போலிசார் முன்னிலையில் கணவன் மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்கும், அவர்களை பார்க்க வருபவர்களுக்கும் பயன்படும் விதமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு மேலாக இங்கு உணவகத்தில் சமையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கியாஸ் கொடுக்கப்படவில்லை என்பதால் பணியாளர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. மேலும் அங்கு பணிபுரியும் நபர்களுக்கு கூட 10 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளிடம் புகார் சென்றுள்ளது. இந்நிைலயில் அம்மா உணவகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் அங்குள்ள விபரத்தை கேட்டறிந்தனர். உடனடியாக சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்கள் கிழக்கு மாவட்ட பார்வையாளர் சரவணன் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கபட்டது. இந்நிகழ்வில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    • கந்தர்வகோட்டையில் பண்ணை தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்
    • இவர்கள் நிரந்தர பணி கேட்டும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி கிராமத்தில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசுக்கு சொந்தமான மாநில எண்ணெய் வித்து பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 350 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிரந்தர பணி கேட்டும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பண்ணையில் பணிபுரியும் 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படாததை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரி பண்ணையின் எதிரே தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அரசப்பன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மற்றும் அரசு பண்ணை மேலாளர் புகழேந்தி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. தொழிலாளர்களின் இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    • மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்
    • உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2022-23 மக்காச்சோளம் பயிரில் ஒருங்கிணைந்த பயிர்மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திற்கு குன்றாண்டார்கோவில் வட்டாரம், நாஞ்சூர்கிராமத்திற்கு விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த பயணத்தில் வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) மதியழகன் கலந்து கொண்டு கூறியதாவது : மக்காச்சோளம் பயிரை ஆடிப்பட்டம் (ஜூலை-ஆகஸ்ட்), தைப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) ஆகிய பருவங்களில் விதைப்பு செய்யலாம். மக்காச்சோளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். தற்போது குறிப்பாக அமெரிக்கன் படைப்புழு தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனை முதலில் கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். உழவு செய்யும் போது ஏக்கருக்கு 250கி வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். பயிர்சுழற்சி முறைகளை கடைபிடிக்க வேண்டும். பேவோபியா பேசியானா 1 கிலோ விதைக்கு 10 கிராம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். வரப்பு பயிராக ஆமணக்கு, சூரியகாந்தி, எள், சாமந்திபூ, தட்டைப்பயறு ஆகியவற்றை விதைப்பு செய்யலாம். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். விவசாயி ஆனந்தன் என்பவரது வயலில் இனக்கவரச்சி பொறி பயன்பாடு பற்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பர்கனா பேகம், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆரோக்கியராஜ், உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளியை பூட்டிவிட்டு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற 7 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது
    • பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். இதற்கு கல்வி துறையின் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது மாணவர்களை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதும் அதற்கு உரிய அனுமதி பெறாததும் தெரியவந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகியது. இதையடுத்து கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களை ஆசிரியர்கள் அவசரமாக ஊருக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் என மொத்தம் 7 பேரிடம் அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், கரு.தெற்கு தெரு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை அனுமதியின்றி கடல் பகுதிக்கு அழைத்து சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து வடகாடு போலீஸ் விசாரித்து வருகிறது.


    ×