என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆலங்குடி மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள மேற்பனை க்காடு கிராமத்தில் கல்லணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீரமாகாளி யம்மன் கோயில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. தினந்தோ றும் வாணவேடிக்கை, மங்கள இசையுடன் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக முளைப்பாரி எனும் பாலிகை எடுப்புத்திருவிழா நடந்தது. முளைப்பாரி திருவிழாவில் மேற்பனைக்காடு மேலக்காடு, வடையக்காடு, குறிஞ்சி நகர், கன்ரான் குடியிருப்பு, கீழக்காடு, தெக்கிக்காடு, ராஜாளி குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் தானியங்களை முளைவித்த பாத்திரங்களை மலர்களால் அலங்கரித்து, கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக தலையில் சுமந்து வந்து மண்ணடித்தி டலைச்சுற்றி வந்தனர். பின்னர்ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பெரிய குளத்தில் முளை ப்பாரிகளை கரைத்து அதன் பின்னர் கூட்டு பிரார்த்தனை நடத்தி அம்மனை வழிபட்டனர். இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் மது எடுப்பு திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யபட்டார்
    • தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்

    ஆலங்குடி:

    ஆலங்குடி மது விலக்கு போலீசார் பாத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று பாத்தம்பட்டியை சேர்ந்த முண்டையா மகன் தங்கராஜ் (வயது42) என்பவர் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 15 லிட்டர் டின்னரில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் அவர் அவ்வபோது தோட்டத்தில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இந்நிலையில் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • ஆலங்குடியில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது
    • பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அதிசய அன்னை ஆலயத்தில் தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல்புதனை முன்னிட்டு இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆர்கே, அருட்தந்தை கித்தரிமுத்து ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் கும்மங்குளம், பாத்திமா நகர் வாழைக்கொல்லை, வண்ணாச்சிகொல்லை, ஆலங்குடி, செம்பட்டிவிடுதி நால்ரோடு, அயங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவைபாதை வழிபாடும் நடைபெறும்.

    • கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

    கந்தர்வகோட்டை :

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புனல் குளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்த மாடிப்பட்டி, நொடியூர், கோமாபுரம், கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, பருக்கை விடுதி, மூக்கப்புடையான் பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என புனல்குளம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை அருகே ெபாதுபாதை பிரச்சனையில் சுமூக தீர்வு காணபட்டது
    • கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருங்களுர், முல்லைநகர் அருகே உள்ள இடத்தை முஸ்லீம் சமூகத்தினர் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அந்த இடத்தை முல்லை நகர் மக்கள் பொதுப்பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பொதுபாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்ப முயற்சி செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே பாதை பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு புதுக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி தலைமையில் சமாதான கூட்டம் நடைப்பெற்றது. அதில் இருதரப்பினரும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ஏற்கனவே இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும், முஸ்லீம் தரப்பில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தடை செய்ய கூடாது, குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமான இடமாகும் பொதுபாதையை பயன்படுத்துவதை யாரும் தடை செய்ய கூடாது, கல்லறை என குறிப்பிடும் இடத்தில் யாரும் சுறறுசுவர் எழுப்ப கூடாது என முடிவு செய்யப்பட்டது. சமாதான கூட்டத்திற்கு பெருங்களுர்ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர், செந்தில், ஜெயராமன், சந்திரசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாத்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூழிபிறை பசுமை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது
    • 31இடங்களில் பணி நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    நமக்கு நாமேதிட்டம் -பசுமை கூழிபிறை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் நீர்வழி சீரமைப்பு பணி நடைபெற்றது. புதிய வடிகால் கால்வாய்கள், ரவுண்டு சிமெண்ட் பைப் காலவாய்கள்,வீதி பாலங்கள்(கால்வாய்கள்) அமைக்கும் பணி நடைபெற்றது. சாமி ராமதாச கல்யாண மண்டபம், குழிபிறைப்பட்டி, பஞ்சாயத்து அலுவலக தெரு, சத்தியமூர்த்தி வீதி, புத்தூரணி, பூங்காநகர், அம்மன் சந்நிதி தெரு, பொற்றாமரை நீர்நுழைவு, நீர் அவுட்லெட், கண்ணாடி வீரப்பசெட்டியார் வீதி, சிவன்கோவில், சந்திகருப்பர் கோவில், புதிய சந்தை உள்ளிட்டி 31 இடங்களில் இந்த பணி நடைபெற்று வருகிறது.

    • காமாட்சி அம்மன் கோவிலில்
    • பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு நடத்தினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழக்காவனூர் கிராமம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ே காவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். சிவராத்திரி அன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி 3 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை போன்றவைகள் நடைபெறும். 3ம் நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோதநிகழ்வும் நடைபெறும். சாட்டை அடியின்போது காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தால் அந்த பக்தரிடம் குறை இருப்பதாகவும், காயம் ஏற்படாத பக்தர்களுக்கு அம்மன் அருள் கிட்டுவதாகவும் ஐதீகம் உள்ளது. இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கடந்த சிவராத்திரி அன்று காப்புக்கட்டி நேற்று 3ம் நாள் திருவிழா நடைபெற்றது.விழாவினையொட்டி பக்தர்கள் காலை முதலே பால்குடம், மயில்காவடி, அலகுகாவடி போன்றவைகள் எடுத்து பூ மிதித்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், ஆலய வாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் நீராடி பின்பு கோவிலை அடைந்தனர். அப்போது அம்மன் சாமி ஆடுபவர் சாமி ஆடிக்கொண்டே அவர்களை மண்டியிட வைத்து சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.சாட்டையடியின்போது பக்தர்கள் அடியிலிருந்து தப்பிப்பதும், இறுதியில் அனைத்து பக்தர்களும் சாட்டையடி வாங்கிய சுவாரஸ்ய நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலய வாசலில் பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.விழாவில் அப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    • 428 ஆடுகளுக்கு சிகிச்சை
    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி மேல புலவன்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பசுமை தேசம் சதீஷ்குமார் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடை பெற்றது. இந்த சிறப்பு முகாமில் 358 பசுமாடுகள், 428 வெள்ளாடுகள், செம்மறி யாடுகள், நாய் மற்றும் கோழிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது. சிறந்த கிடேரி கன்று உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம் முகாமில் மாடுகளுக்கு சினை ஊசி, சினை பரிசோதனை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப் பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்கு தாது உப்பு கல வைகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க ம ருந்துகள், சளி மருந்துகள் அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கள் செலுத்தப்பட்டது. இச்சிறப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் விக்னேஷ், கமலா தேவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை வழங்கினார்கள்.




    • கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • கஞ்சா கடத்திய வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கோவிலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயரவிவர்மா மற்றும் இருவர் பயணம் செய்த சொகுசுக்காரை வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை யிட்டபோது அவரது காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜெயரவிவர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வரும் சூழலில், துறை ரீதியான நடவடிக்கையாக, ஜெயரவிவர்மாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


    • வயலுக்கு சென்ற போது சம்பவம்
    • கதண்டு கடித்து 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் வெள்ளைச்சாமி (வயது 40), இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள செடியிலிருந்து கதண்டு வண்டு பறந்து வந்து இருவரையும் கடித்தது. இதில் காயம் அடைந்து மயக்க நிலையில் சென்ற அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வகோட்டை, அறந்தாங்கி சிலட்டூரில் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி தாலுகா சிலட்டூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் தஞ்சை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் போட்டியில் பங்கேற்றன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது.போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கியும், காளைகள் வீரர்களிடமிருந்து தப்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.மொத்தம் 13 காளைகளில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காததால், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பணம், அண்டா உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா குளத்தூர் நாடு அருள்மிகு முனியாண்டவர் அருள்மிகு பிடாரியம்மன் கோவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.பிடாரியம்மன் கோவில் எதிரில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தாசில்தார் ( பொறுப்பு) தயாவதி கிறிஸ்டினா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தமிழ் அய்யா முன்னிலை வகித்தனர்.மஞ்சுவிரட்டில் காயம் அடைந்த 11 வீரர்களுக்கு உரிய சிகிச்சை மருத்துவக் குழுவினரால் அளிக்கப்பட்டது. மஞ்சுவிரட்டை தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் , பறவை காவடி, கரும்பு தொட்டில் காவடி, அழகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.ம ற்றும் ஏராளமான பொதுமக்கள் விசிலடித்து, கைத்தட்டி ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர். காவல் துறை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    புதுக்கோட்டை, 

    திருமயம் நகருக்கு தேவையான அத்தியாவசிய பொது போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட திருமயம் மற்றும் சுற்றுவட்டாரம் கிராமங்களை சேர்ந்தவ ர்களது ஆலோசனை கூட்டம் திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள சமுதாய அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நகருக்குள் வர மறுக்கும் பேருந்துகளால் தங்களுக்கு ஏற்ப்பட்ட சிரமங்களை பதிவு செய்தனர்.இக்கூட்டத்தில் 20 உறுப்பினர்கள் 4 ஒருங் கிணைப்பாளர்கள் கொண்ட குழு உருவாக்க ப்பட்டது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம்,நகருக்குள் வர மறுக்கும் தனியார் பேருந்துகளை திருமயம் பேருந்துநிலையத்தில் மறித்து நகருக்குள் வர மறுப்பது ஏன் என விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தகவல் தந்து புறக்கணிப்பை தடுப்பது. தீர்வு கிடைக்காத பட்சத்தில் இரு பேருந்துகளிலும் உள்ளூர் பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என பிளக்ஸ் மற்றும் நோட்டீஸ் மூலமாக அறிவுறுத்தப்படும்நகருக்குள் வர மறுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் பணிமனை சம்பந்தமாக முதல்வர் தனி பிரிவு, மாவட்ட கலெக்டர், அரசு பேருந்துகளின் மேலாளர்கள் ,வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு பதிவு தபாலில் புகார் மனுக்களை அனுப்புவது.திருமயம் சட்டமன்ற உறுப்பினரிடம் மனுக்கள் அளிப்பதுதிருமயம் ரயில் நிலையத்தில் சென்னை- இராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்று செல்ல வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மனு அளிப்பதுமனுக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதபட்சத்தில் திருமயம் பேருந்து நிலையத்தில் உண்ணா விரதம் மேற்கொள்வது, கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×