என் மலர்
புதுக்கோட்டை
- பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
- இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகம் பட்டி கிராமத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் சுமார் 29 லட்சம் மதிப்பில் கட்டுவதற்காக குறிப்பிட்ட அளவுகளில் அடையாளம் செய்யப்பட்டு கம்பிகள் அடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டுவதற்கான அடையாளம் செய்யப்பட்ட கம்பிகளையும், ஏனைய பொருட்களையும் கந்தர்வகோட்டை தி.மு.க. நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த சோழகம்பட்டி, மெய்குடி பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். சோலகம் பட்டி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
- கடந்த 2 தினங்களாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் கடந்த 2 தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து காசி, இராமேஸ்வரம் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்து தலையில் சுமந்து ஊர்வலமாக யாகசாலையில் இருந்து எடுத்துச்சென்றனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க புனித நீரானது அங்காள பரமேஸ்வரி ஆலய கலசத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கருட வாகனங்கள் காட்சியளிக்க புனித நீரானது கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அங்காளபரமேஸ்வரி அம்பாளின் அருள்பெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலங்காடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலீசார் செய்திருந்தனர்.
- பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் கைது செய்யப்பட்டார்
- பாதுகாப்பை கருதி போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் நேற்று பா.ஜ.க. சார்பில் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார். அதற்கு கோட்டைப்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து வேலூர் இப்ராஹிம்மை அங்கு செல்லக் கூடாது என காவல்த்துறையினர் தடுத்துள்ளனர். ஆனால் தடுப்பையும் மீறி இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் அவரை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.மேலும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோரையும் கைது செய்து அறந்தாங்கி ஆய்வு மாளிகையில் அடைத்து வைத்தனர். காவல்த்துறையினர் தடுப்பை மீறிச் சென்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுக்கோட்டையில் இன்று கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது
- இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு, கலை சங்கமம் நிகழ்ச்சி இன்று (24-ந் தேதி) மாலை 06.00 மணியளவில் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்) நடைபெற உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர், கிராமப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக மாவட்டம்தோறும் கிராமப்புற கலை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், கிராமப்புற கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கிராமப்புற கலைஞர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த கலை சங்கமம் நிகழ்ச்சியினை கண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- பயனாளிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது
- மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின்படி வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில், அரசு திட்டங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை, ஆட்சியரகத்தில் கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இம்முகாமில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறு தொழில் மானிய கடன்கள், மகளிர் சுயஉதவி குழு கடன்கள், கல்விக்கடன்கள், வாகன கடன்கள், சாலையோர வியாபாரிகளுக்கான கடன்கள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குதல் திட்டத்திற்கான கடன்கள், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்ட கடன்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கான கடன்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை கடன்கள், ஊரக வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நபர்களுக்கான தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 47 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் 40 நபர்களுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான காசோலைகளையும் என ஆகமொத்தம் ரூ.4.40 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இம்முகாம் மூலமாக வங்கி கடன் இணைப்புகளை பெற்ற அனைத்து நபர்களும் உரிய முறையில் முதலீடு செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.
- ஆலங்குடி அருகே லாரி மோதி முதியவர் பலியானார்
- சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் அழகப்பா நகரை சேர்ந்த முத்து (வயது 65 ). இவர் கடை வீதியி ல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் மோதி படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறா ர்.
- வம்பன் வேளாண் மைய முறைகேடுகளை கண்டித்து ஆலங்குடி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
- போராட்டத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே வம்பன் 4 ரோட்டில் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிரம்மையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரியும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்தும், அந்த பகுதியின் விவசாயிகளில் நெல்லை கொள்முதல் செய்ய கோரியும், கடலைக்கான உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளதால் கடலைக்கு கட்டுபடியான விலையை அரசை நிர்ணயிக்க வேண்டும், கொப்பரை தேங்காய்க்கு விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் வம்பன் வேளாண் விரிவாக்கம் மையத்தில் நடைபெறக்கூடியமுறை கேடுகளை கண்டிப்பதோடு, அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் பாலசுந்தரமூர்த்தி,மாவட்ட துணை செயலாளர் அன்பழ கன், சிபிஐ (எம்) ஒன்றிய செயலாளர் வடிவேல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுசிலா,சி.ஐ.டி.யு.ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திருவரங்குளம் மேற்கு ஒன்றிய குழு சார்பிலும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்
- குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை, ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 9வது வார்டு அறிவொளி நகர் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி கீரமங்கலம் பேரூராட்சி முன்னதாக போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி, கீரமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மக்களிடம் பேசும்போது, சமுதாயகூடம், அங்க ன்வாடி கட்டிடம், பள்ளி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்
- சீர்வரிசை பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமியிடம் வழங்கினர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குத் தேவையான பீரோல், இரும்பு அலமாரிகள், நவீன தொலைக்காட்சி பெட்டி, இருக்கைகள், குடிநீர் பாத்திரங்கள், உலக தலைவர் படங்கள், தரை விரிப்புகள் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கும் விழா நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் ஊர்வலமாக வந்து சீர்வரிசை பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவா, வர்த்தக சங்கத் தலைவர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வினோதாசாமிநாதன், செந்தில்குமார், முத்துராமன், சுரேஷ், ரசூல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
கந்தர்வகோட்டை:
ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (வெள்ளிக்கிழமை) இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி, மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, பகட்டுவான் பட்டி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன்தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி மற்றும் சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.கறம்பக்குடி, ரகுநாதபுரம், நெடுவாசல், ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெரும் கறம்பக்குடி நகர், தீர்த்தான் விடுதி, குழந்திரான்பட்டு, கறம்பக்குடி அம்பு கோவில், மைலங்கோண்பட்டி, பந்துவா கோட்டை, கே.கே.பட்டி, மருதங்கோண விடுதி, ரகுநாதபுரம், முதலிபட்டி, கீரத்தூர், கிளாங்காடு, காடம்பட்டி, செங்கமேடு, புதுப்பட்டி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கருக்கா குறிச்சி, நல்லாண்டார் கொள்ளை, குறும்பிவயல் நெடுவாசல் திருமுருகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
- பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது.
- வனப்பகுதிக்கு சென்ற பிறகே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
குனியமுத்தூர்:
தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.
2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
அதன்பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த 21-ந் தேதி வெளியே வந்த யானை, செம்மனாம்பதி, கோவிந்தனூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு பகுதிக்கு வந்ததது.
பின்னர் அங்கிருந்து நேற்று மதுக்கரை வனப்பகுதியில் நடந்து வந்தது. அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளியை லேசாக உரசி விட்டு, அது தன் போக்கில் நடந்தவாறே சென்றது.
தொடர்ந்து அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை ஒரு வீட்டில் டிரம்மில் வைத்திருந்த தண்ணீரை பார்த்ததும் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து, அதனை குடித்து, தன் உடலிலும் பீய்ச்சி அடித்து கொண்டது.
பின்னர் அங்கிருந்து பிள்ளையார்புரம் நோக்கி சென்ற யானை அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தனது நடைபயணத்தை மீண்டும் தொடங்கியது.
விடிய விடிய மக்னா யானை நடந்து கொண்டே இருந்தது. வனத்துறையினரும் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாப்பாக யானைக்கு முன்னும், பின்னும் ஜீப்பில் சென்றனர்.
இன்று காலை மக்னா யானையானது குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக மாநகர் பகுதியான செல்வபுரத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்து தெலுங்குபாளையம் நோக்கி நடந்த யானை செல்லும் வழியில் இருந்த தனியார் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது.
இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் யாரையும் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் பாதுகாப்பாக நின்று கொண்டனர்.
யானை யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் நொய்யல் ஆற்றுப்பாதை வழியாக பேரூரை நோக்கி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நின்றது.
அங்கிருந்து நடந்து யானை நேராக, மருதமலை வனப்பகுதியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக பின்னால் செல்கின்றனர். அவர்கள் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடியே செல்கிறார்கள். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள். யானையை புகைப்படம் எடுக்க வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சிலர் தங்கள் வீடுகளில் இருந்தபடியும், சாலைகளில் வெகுதூரம் நின்றபடியும் யானையை தங்கள் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.
அந்த காட்சிகளை தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை கிராமங்களுக்குள் சுற்றி திரிந்த யானை இன்று காலை முதல் நகர பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினரும் தொடர்ந்து யானையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது.
டாப்சிலிப்பில் இருந்து இன்று வரை மக்னா யானை 50 கிராமங்களை கடந்து 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. யானை எங்கேயும் ஓய்வே எடுக்காமல் நடந்தபடியே உள்ளது.
கடந்த 2 நாட்களாக யானை ஊருக்குள் சுற்றி திரிந்தாலும் இதுவரை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. யானை நடந்து செல்லும் வழியில் உள்ள சுவர்களை மட்டுமே இடித்துள்ளது. மற்றபடி யாருக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை.
ஊருக்குள் சுற்றுவதால் யானையை வனத்தை நோக்கி மட்டுமே விரட்டி வருகிறோம். மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி செய்தால் யானை மிரண்டு விடும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை.
வனப்பகுதிக்கு சென்ற பிறகே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தொடர்ந்து நாங்கள் யானையை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள்.
- பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்திலிருந்து பள்ளி மாணவிகள் ஏராளமானோர் அருகிலுள்ள தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்குச் தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்து ஆலங்குடியை சேர்ந்த நடத்துனர் சுப்பிரமணி, கூட்ட நெருக்கடியால் படியில் நின்றவாறு பயணம் செய்த பள்ளி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகள் குளத்தூர்நாயக்கர் பட்டியில் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் பேருந்து முன்பாக சாலையில் அமர்ந்து நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசிய நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே பிரச்சினை தொடர்பாக புதுக்கோட்டை மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தினர்.
அதில் நடத்துனர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்துனர் சுப்பிரமணியை சஸ்பெண்டு செய்து அதிகாரி உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்டு காலம் முடிந்ததும் அவரை பணியிட மாற்றம் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தின் எல்லை பகுதியாக குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் அமைந்துள்ளதால், போதிய பேருந்து வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகிறார்கள். எனவே பள்ளி, கல்லூரி நேரங்களில் தமிழக அரசு கூடுதல் பஸ் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.






