என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் கைது
    X

    பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் கைது செய்யப்பட்டார்
    • பாதுகாப்பை கருதி போலீசார் நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் நேற்று பா.ஜ.க. சார்பில் எதிர் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் உள்ள கட்சி நிர்வாகியை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார். அதற்கு கோட்டைப்பட்டினம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து வேலூர் இப்ராஹிம்மை அங்கு செல்லக் கூடாது என காவல்த்துறையினர் தடுத்துள்ளனர். ஆனால் தடுப்பையும் மீறி இப்ராஹிம் கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காவல்த்துறையினர் அவரை தடுத்தி நிறுத்தி கைது செய்தனர்.மேலும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோரையும் கைது செய்து அறந்தாங்கி ஆய்வு மாளிகையில் அடைத்து வைத்தனர். காவல்த்துறையினர் தடுப்பை மீறிச் சென்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×