என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் அரசு அலுவலர்கள் ஆய்வு
    X

    நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் அரசு அலுவலர்கள் ஆய்வு

    • நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்
    • குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை, ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 9வது வார்டு அறிவொளி நகர் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி கீரமங்கலம் பேரூராட்சி முன்னதாக போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் ரவி, கீரமங்கலம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மக்களிடம் பேசும்போது, சமுதாயகூடம், அங்க ன்வாடி கட்டிடம், பள்ளி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகளை பள்ளிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    Next Story
    ×