என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
- அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
- கடந்த 2 தினங்களாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் கடந்த 2 தினங்களாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து காசி, இராமேஸ்வரம் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்து தலையில் சுமந்து ஊர்வலமாக யாகசாலையில் இருந்து எடுத்துச்சென்றனர். பின்னர் மேள தாளங்கள் முழங்க புனித நீரானது அங்காள பரமேஸ்வரி ஆலய கலசத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் கருட வாகனங்கள் காட்சியளிக்க புனித நீரானது கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அங்காளபரமேஸ்வரி அம்பாளின் அருள்பெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலங்காடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வடகாடு போலீசார் செய்திருந்தனர்.