என் மலர்
உள்ளூர் செய்திகள்

வம்பன் வேளாண் மைய முறைகேடுகளை கண்டித்து ஆலங்குடி அருகே விவசாயிகள் போராட்டம்
- வம்பன் வேளாண் மைய முறைகேடுகளை கண்டித்து ஆலங்குடி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தினர்
- போராட்டத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே வம்பன் 4 ரோட்டில் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிரம்மையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட கோரியும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதை கண்டித்தும், அந்த பகுதியின் விவசாயிகளில் நெல்லை கொள்முதல் செய்ய கோரியும், கடலைக்கான உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளதால் கடலைக்கு கட்டுபடியான விலையை அரசை நிர்ணயிக்க வேண்டும், கொப்பரை தேங்காய்க்கு விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் வம்பன் வேளாண் விரிவாக்கம் மையத்தில் நடைபெறக்கூடியமுறை கேடுகளை கண்டிப்பதோடு, அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் பாலசுந்தரமூர்த்தி,மாவட்ட துணை செயலாளர் அன்பழ கன், சிபிஐ (எம்) ஒன்றிய செயலாளர் வடிவேல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுசிலா,சி.ஐ.டி.யு.ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திருவரங்குளம் மேற்கு ஒன்றிய குழு சார்பிலும் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






