என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை
    X

    கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்
    • சீர்வரிசை பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமியிடம் வழங்கினர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குத் தேவையான பீரோல், இரும்பு அலமாரிகள், நவீன தொலைக்காட்சி பெட்டி, இருக்கைகள், குடிநீர் பாத்திரங்கள், உலக தலைவர் படங்கள், தரை விரிப்புகள் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கும் விழா நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் ஊர்வலமாக வந்து சீர்வரிசை பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவா, வர்த்தக சங்கத் தலைவர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வினோதாசாமிநாதன், செந்தில்குமார், முத்துராமன், சுரேஷ், ரசூல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×