என் மலர்
புதுக்கோட்டை
- கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடபெற்றது
- நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க ஒன்பது மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் செய்திருந்தனர். இப்போட்டியை மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
- திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது
- நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது.
புதுக்கோட்டை,:
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோவிலில் அம்மன் எழில்மிகு கோலத்தில் வீற்றிருக்கிறாள். சிறப்புமிக்க இக்கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு முழுவதும் புதுக்கோட்டை மாலையீடு, ராஜகோபாலபுரம், டி.வி.எஸ்.கார்னர், சாந்தநாதபுரம் நான்காம் வீதி, பூங்காநகர், மச்சுவாடி, காமராஜபுரம், பிருந்தாவனம், வடக்கு 2ம் வீதி, நெய்கொட்டான்மரம், சமுத்துவபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர். அதே வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
- புதுக்கோட்ைட முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
- இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட் டத்துடன் விமரிசையாக நடைபெறும்.மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கவிநாடு கண்மாய் திட–லில் இன்று 60-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடை–பெற்று வருகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழா–வில் 900 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
போட்டியில் நன்கு பயிற்சி பெற்ற காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சவால்விடும் வகையில் களத்தில் நின்று விளையாடின. இருந்த–போதிலும் மாடுபிடி வீரர்க–ளின் சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன. முன்ன–தாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டு விழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.விழாவில் மாவட்ட வரு–வாய் அலுவலர் செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக் கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் வை.முத்துராஜா, நகர செயலாளர் செந்தில், இளைஞர் அணி சண்முகம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- கூத்தங்குடியில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கூத்தங்குடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ லண்டன் முனீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது. பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 53 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 44 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.
பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கூத்தங்குடி கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- கந்தர்வகோட்டை விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கபட்டது
- 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை வேளாண் விரிவாக்க மையம் கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி கலந்து கொண்டு வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடு பொருட்களை வழங்கினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துகளில் ஒன்றான அரவம் பட்டியில் 300 பண்ணை குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வேளாண் உழவர் நலத்திட்டம் மூலமாக முழு மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும் ரோட்டவேட்டர் கருவி வேளாண் பண்ணை கருவிகள், விசை தெளிப்பான், உளுந்து விதைகள், ஜிப்சம், சிங் சல்பேட் முதலான இடுப்பொருட்கள் 50 சதவீத மானியத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண் உழவர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவற்றில் பயனடைவதற்கான அரசு வழிகாட்டுதல்களையும் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் நாகராஜ், ரெகுநாதன், சங்கர், செல்வம், கமலி, காளிதாஸ், அட்மா திட்ட பணியாளர்கள் ராஜீவ், சங்கீதா, சுப்ரமணியன், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது
- இதில் இரத்த அழுத்தம், கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகை ஊராட்சி முள்ளிக்காப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முல்லை ஆறுமுகம் தலைமை தாங்கினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சசிவர்மன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நம்புரான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நடுப்பட்டி தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- ஆலங்குடியில் மருத்துவ முகாம் நடைபெற்றது
- இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆலங்குடி மருத்துவமனை, சித்த மருத்துவ பிரிவு, அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பனையப்பன் மற்றும் சித்த மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் மணி வண்ணன் மற்றும் பரம்பூர் சித்த மருத்துவர் டாக்டர் சுயமரியாதை ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் பீட்டர் குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் இலவச கசாய குடிநீர் மற்றும் சித்த மருந்துகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
- அன்னவாசலில் ரூ.7 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் திறக்கபட்டது
- கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர்காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை, மாவட்ட கலெக்டர்கவிதா ராமு, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்மா.சின்னதுரை ஆகியோர்திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெ.ஆனந்தன், எம்.பிரேமலதா, வட்டாட்சியர்சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கை.பழனிச்சாமி, ஊராட்சிமன்றத் தலைவர்ம.வேலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை:
திருச்சி மாவட்டம் திருவையூர் கொப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சக்திவேலு (வயது 27). இவர் அறந்தாங்கியில் இருந்து கே.புதுப்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் கோவில் பகுதியில் சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில், பலத்த காயம் அடைந்த சக்திவேலுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேலு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்திற்கு காரணமான கட்டுமான மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி அடைந்தனர்
- பல பயணிகள் நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர்
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. கொப்பனாபட்டி தேனிமலை, கருகப்பூலாம்பட்டி, காரையூர், கீழத்தானியம். மேலத்தானியம் , இலுப்பூர், விராலிமலை வழியாக திருச்சிக்கு செல்ல வேண்டிய அந்த பேருந்தானது, தேனிமலை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பெரும் சத்தத்துடன் குலுங்கி உள்ளது. சத்தம் கேட்டு பயணிகள் திகிலடைந்த நிலையில் பேருந்தை எப்படியோ டிரைவர் நிறுத்தி உள்ளார்.
பேருந்தில் உள்ள பயணிகள் அவசர அவசரமாக இறங்கி சாலைக்கு ஓடி உள்ளனர். பேருந்தை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் பேருந்தை சோதனையிட்ட போது பேருந்து ஓடுவதற்கு இன்ஜினும், சக்கரத்தையும் இணைக்கும் சென்ட்ரல் ஜாயிண்ட் உடைந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. இந்த நீண்ட இரும்பு ஜாயிண்ட் ஆனது சாலையில் குத்தி இருந்தால் பேருந்தை கவிழ்த்து இருக்கும். நல்லவேளையாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதை அறிந்து டிரைவரும், கண்டக்டரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு உள்ளனர்.
இதுவரை நடந்த சம்பவங்கள் பேருந்து பயணிகளுக்கு நிம்மதி பெருமூச்சு விட செய்தாலும், அதற்கு அடுத்து நடந்ததுதான், தொடர்ந்து பெருமூச்சு விடச்செய்துள்ளது.தேனிமலை ரோட்டில் நின்று கொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு வேறு பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் டிரைவரும், கண்டக்டரும் சென்று விட்டனர். இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பயணிகள் அந்த வழியாக சென்ற பேருந்துகளை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால்கைக்காட்டிய பயணிகள் இடையே டிரைவரும், கண்டக்டரும் இல்லாததை கண்டு வந்த பேருந்து டிரைவர்களும் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பல பயணிகள் நடராஜா சர்வீஸ்தான் நமக்கு துணை என்ற படி மூட்டை முடிச்சுகளை துாக்கிக்கொண்டு நடந்தும், ஆட்டோவை பிடித்தும் சென்றுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பொன்னமராவதியில் ஓடும் பல அரசு பேருந்துகள் இப்படி பிரேக் டவுன் ஆகி வழியில் நிற்பது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு அடிக்கடி நிகழ்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தினால்தான் போக்குவரத்து அலுவலகம் விழித்துக்கொள்ளும் என்றால் அதற்கும் பொதுமக்கள் தயார் என்று கூறினர்.
- மாங்கோட்டையில் வடமாடு ஜல்லிகட்டு விழா நாளை நடைபெறுகிறது
- இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவையொட்டி வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நாளை பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளும், வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஆலங்குடி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதற்காக அப்பகுதியில் திடல் அமைக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திடலின் நடுவில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு உரல் இறக்கப்பட்டது. இதில், ஊர் தலைவர் சின்னத்துரை உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் மது விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த 13 மது பாட்டில் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல்செய்தனர்
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் மது பாட்டில் கடத்தி விற்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி மேற்கு தெருவை சேர்ந்த குமார் (வயது 50), ஆலங்குடி உள்கடை வீதி மதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த 13 மது பாட்டில் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல்செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






