search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்ைட முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
    X

    புதுக்கோட்ைட முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

    • புதுக்கோட்ைட முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி 900 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட் டத்துடன் விமரிசையாக நடைபெறும்.மாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழாவும் அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இந்த பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கவிநாடு கண்மாய் திட–லில் இன்று 60-வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடை–பெற்று வருகிறது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழா–வில் 900 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

    போட்டியில் நன்கு பயிற்சி பெற்ற காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு சவால்விடும் வகையில் களத்தில் நின்று விளையாடின. இருந்த–போதிலும் மாடுபிடி வீரர்க–ளின் சீறிப்பாய்ந்து வந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர்.இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளை–களை அடக்கிய மாடு–பிடி வீரர்களுக்கும் பரிசு–கள் வழங்கப்பட்டன. முன்ன–தாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு விழாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.விழாவில் மாவட்ட வரு–வாய் அலுவலர் செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், புதுக் கோட்டை எம்.எல்.ஏ. டாக்டர் வை.முத்துராஜா, நகர செயலாளர் செந்தில், இளைஞர் அணி சண்முகம் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×