என் மலர்
புதுக்கோட்டை
- லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- பஸ் ஸ்டாப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்ப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேகலா தியேட்டர் பஸ் ஸ்டாப் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றதாக கல்லாலங்குடி கலைஞரை நகரைச்சேர்ந்த தேசிகன் மகன் லோகேஸ்வரனை (வயது 25) கைது செய்து, போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது
- மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணை தலைவி வேதநாயகி, ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், கண்ணன், ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக அனைவரையும் ஆனந்தராஜ் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, கௌரி, தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருவப்பூர் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை விடபட்டுள்ளது
- கலெக்டர் கவிதா ராமு அறிவித்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா பூச் சொரிதல் மற்றும் தேரோட்டத்துடன் விமரிசையாக நடைபெறும். மாசி பெருந்திரு விழாவையொட்டி கடந்த 26-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் , வரும் 13-ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்து உள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 1ம் தேதி (சனிக்கிழமை) பணிநாளாகவும் அவர் அறிவித்துள்ளார்.
- மாசிப்பெருந்திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது.
- விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்தாண்டுக்கான மாசி பெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்து மாரியம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபடுவார்கள். 9-ம் நாள் திருவிழா அன்று (13.03.2023) மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வார்கள்.
இதையடுத்து மாசிப்பெருந்திருவிழா 21.03.2023 தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 13-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அன்று அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
விடுமுறையை ஈடு செய்ய ஏப்.1-ம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
- 345 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 345 மனுக்களை பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்கள்.மேலும் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில், 5 பேருக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 5 நபர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடன், ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் 5 சதவீத முன்வைப்புத் தொகையையும், மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து அறந்தாங்கி வட்டம், களப்பக்காடு முதல்வீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரிஎன்பவர் மின்சாரம் தாக்கி இறந்தமை க்காக வழங்கப்பட்ட ரூ.1 இலட்ச த்திற்கான காசோலை என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாட்சா, உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது
- விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராம ஊராட்சிமன்றத் தலை வர்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் புறங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, மின்வசதி, குடியிருப்புகள், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முறையாக தங்களது பகுதிகளில் செயல்படுத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மற்றும் தாட்கோ உள்ளிட்ட துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஊராட்சிமன்றத் தலைவர்கள், தங்களது ஊராட்சிகளில் மக்களி டையே ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.பழனிச்சாமி மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மத்திய அரசு-தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- டீசல் விலையை கட்டுப்படுத்திட கோரியும் கோஷம்
ஆலங்குடி,
ஆலங்குடியில் மத்திய பட்ஜெட் மற்றும் தமிழக ஆளுநர் நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடகாடு முக்கத்தில் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைத்திட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு நிதியை குறைக்க கூடாது, பெட்ேரால் டீசல் விலையை குறைத்திட வேண்டும். விலை வாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும், தமிழக ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில்சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர், சி.பி.எம். மாநகரச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் பாண்டிசெல்வி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சொத்து தகராறில் தாக்குதல்
- படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ராஜா (எ)ராஜசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோவிந்தன் (வயது 73)ஆகிய இருவருக்கும் இடையே 12 ஆண்டுகளாக சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்லால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் கோவிந்தனுக்கு காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தபோது கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- சிபிஎம் சார்பில் நடைபெற்றது
- பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கறம்பக்குடி சீனி கடை முகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வீரமுத்து தலைமை தாங்கி பேசினார். மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர்.
ஆலங்குடி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சொர்ணக்காடு பணஞ் சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் தீபிகா (வயது 22) இவர் கணித பட்டதாரி.அதே பகுதியை சேர்ந்த வளப்பிரமன்காடு மாசிலாமணி மகன் விவேக் (வயது 27). இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம செய்து கொண்டனர். இதையடுத்து இவருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் பேசினர். பின்னர்காதல் ஜோடியிடம் கையெழுத்து பெற்றக் கொண்டு அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.
- ஆலங்குடி அருகே உறவினர்களுக்குள் தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான விரல்கள்
- ஐஸ்பெட்டியில் மதுரைக்கு அனுப்பப்பட்டது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ரெங்கதுரை (வயது 45). இவரின் உறவினரான ரெங்கசாமி மகன் கருப்பையா (வயது 25) என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். கருப்பையாவுக்கும், ரெங்க துரை தந்தை ரெங்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுஇதனை ரெங்கதுரை தட்டி கேட்டதால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானநிலையில் கருப்பையா அரிவாளை எடுத்து வந்து கருப்பையாவை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளது. மேலும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கிய நிலையல் கிடந்த ரெங்கதுரையை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு ரெங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில் அடைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரிவாளால் வெட்டிய கருப்பையாவை ஆலங்குடி போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்று ம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- கந்தர்வகோட்டை அருகே வாகன விபத்தில் வாலிபர் கால் துண்டாகி விட்டது
- காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் முருகேசனை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வண்ணாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் முருகேசன்(வயது25). இந்நிலையில் முருகேசன் தனது இருசக்கர வாகனத்தில் கந்தர்வகோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டிக்கு செல்லும் வழியில் காட்டு நாவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காய்கறி விற்கும் லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியதில் வலது கால் முழங்காலுக்கு கீழ் துண்டானது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் முருகேசனை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் முதலுதவி செய்யப்பட்ட முருகேசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து துரிதமாக செயல்பட்டு காயம் அடைந்த வரை சிகிச்சைக்கு போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் செந்தில் மாறனை பொதுமக்கள் பாராட்டினர்.






